Monday, November 22, 2010

யோகியின் டைரி குறிப்பு

இப்பொழுது அதிகமாக கூகுள் பஸ்ஸில் கும்மி அடித்துகொண்டிருக்கிறேன். கும்மியின் ஊடே நான் கற்ற யோகா சம்பந்தமான விசயங்களை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன். நான் சந்தித்த யோகியின் அனுபவத்தை சிறு குறிப்புகளாக  தொடராக எழுதி கொண்டிருக்கிறேன்.  யோகா மற்றும் யோகா சம்பந்தமான பயிற்சிகளில் விருப்பம் உடையவர்கள் கூகுள் பஸ்ஸில் என்னுடன் பயணிக்கலாம்.ஆரோக்கியமாக விவாதிக்கலாம். என்னுடைய பஸ் முகவரி 

http://www.google.com/profiles/110320395747310358744#buzz நான் யோக வித்தை சொலி தரேன் கத்துக்கிறியா?

ஐயா நானா, எனக்கு எல்லா கெட்ட பழக்கமும் உண்டு தண்ணி அடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நான் வெஜ் சாப்பிடுவேன்,
யோகா பண்ணனும்னா இதெல்லாம் செய்யகூடாது இல்ல? நான் எப்படி?

எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவனுக்கு யோகா எதுக்கு? உன்ன மாதிரி ஆளுங்களுக்கு தான் தேவை. நான் சொல்லி குடுக்கிற வித்தைகள தொடர்ந்து செய். ஒருநாள் அந்த பழக்கத்தை எல்லாம் விடணும்னு உனக்கே தோணும்..வர்ற ஞாயிற்று கிழமை காலைல நாலு மணிக்கு என் வீட்டுக்கு வா. நாம அன்னிக்கு பாடத்த ஆரம்பிக்கலாம்.

இந்த கிழவனை நம்பி போகலாமா? ---------(1)

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணி. அந்த கிழவரின் வீட்டில் இருந்தேன். தர்ப்பையால் ஆன பாயை எடுத்து விரித்து அதில் அமர சொன்னார். அருகில் இருந்த விளக்கை ஏற்றிவிட்டு எதிரில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

நான் சில பேருக்குதான் இந்த யோகா வித்தையை கத்து கொடுத்திருக்கேன். இப்ப அது உனக்கு கிடைக்க போகுது. ரெம்ப கவனமா நான் சொல்லி கொடுகிறத கத்துக்க.உன் வாழ்கை முறையே மாறப்போகுது என் நெற்றிப்பொட்டில் விரலை வைத்து அழுத்தி, மாற்றி மூச்சு விடும் முறையை கூறினார். நான் சொல்ற வரை இந்த முறைல மூச்சு விடு.

நான்,ஐயா ஒரு சந்தேகம்.

வாய மூடு, நான் சொன்னத மட்டும் செய். வேற எதுவும் பேசக்கூடாது.

மூச்சுப்பயிற்சி தொடர்ந்தது.எப்பொழுதோ படித்த விஷயங்கள் ஞாபகம் வந்தது.
எதன் மேல் அமர்ந்து பயிற்சித்தால் என்ன பலன்?

மூங்கில் கீற்று - வறுமை
கல் - வியாதி
மண் - தூக்கம்
உடைந்த அல்லது அறுபட்ட பலகை மனை - நன்மை இல்லை
கோரை போன்ற புற்கள் - கீர்த்திநாசம்
பச்சிலை மன நடுக்கம் .
புலித்தோல் - செல்வம்
தர்பாசனம் - மோட்சம்
வெள்ளை வஸ்திரம் - தீமை இல்லை
சித்திராசனம் அல்லது இரத்தின கம்பளம் - நன்மை

தர்ப்பாசனத்தில் அமர்ந்து பயிற்சி செய்கிறேன்.

நான் மோட்சம் அடைவேனா --------(2)
Monday, November 1, 2010

சின்ன சின்ன (Buzz collection)

கஸ்டமருக்கு நான் அனுப்பிய மெயில்.
Dear sir,
           Kindly refer the attached html mail.Already we have picked up the equipments from your place.
regards,
RG.
அனுப்பிய கொஞ்ச நேரத்தில் கஷ்டமரிடம் இருந்து போன்.
சார் அட்டாச்மென்ட் எதுவும் இல்லையே?
இல்ல சார், ஒரு html file இருக்குமே?
அது இருக்கு ஆனா attachment எதுவும் இல்லையே?
இல்ல சார், அந்த html fila IEல ஓபன் பண்ணுங்க.
ஓ சரி சரி..
பேசியவர் IT மேனேஜர்
ஒரு வேளை அட்டாச்மெண்டா நானே  குத்துகாலிட்டு உட்கார்ந்திருப்பேன்னு எதிர்பார்த்தாரோ என்னமோ..


****
நண்பர் குடுத்தாரென்று இறைஅன்பு எழுதிய "சாகாவரம்" நாவல் வாசித்து கொண்டிருக்கிறேன். இது அவரின் இரண்டாவது நாவலாம். மரணத்தை பற்றிய கேள்விகளோடு நகர்கிறது. அடுத்தடுத்து அறிமுகமாகும் கேரக்டர்கள் உடனுக்குடனே இறந்து விடுகிறார்கள். படிக்கும்போதே நானும் மண்டையை போட்டு விடுவேனோ என்று மரண பயம் ஏற்படுகிறது.

*********
தூக்கத்தில் முழித்து, மறுபடியும் தூங்க தொடங்குவதின் மூலம் கனவினை விட்ட இடத்தில இருந்து தொடர முடியுமா?!
**** 
"பரத்தை கூற்று " புத்தக வெளியீடுக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். காற்று புக இடம் இல்லாமல் வேர்த்து வழிந்து கொண்டிருந்தது. எனக்கு முன் நின்று கொண்டிருந்தவர் சாருவின் பேச்சை சுவாரசியமாய் கேட்டு கொண்டிருந்தார். சாரு, " இப்ப ஒரு புத்தகம் எழுதி கொண்டுருக்கிறேன், அது என் வாழ்கையில் இரண்டு வருடம் ஆண் விபச்சாரியாய் இருக்கும்பொழுது நடந்த சம்பவங்களை பற்றியது*" என்றவுடன், எனக்கு முன் நின்றிருந்தவர் கெக்கேபிக்கே என்று சிரித்து இறங்கி ஓடிவிட்டார்.
 
***** எதிலோ  படித்தது.ஆபிசில் இருந்து வீடு திரும்பிய கணவன் திடுக்கிட்டான். தெருப்புழுதியில் அவனுடைய பிள்ளை புரண்டு விளையாடிக்கொண்டிருந்தான். வாசல் கதவு திறந்து கிடந்தது. பீரோ கதவும்தான். அடுப்பில் எதுவோ தீய்ந்து கொண்டிருந்தது. குழாய் மூடப்படாததால் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. டைனிங் மேஜை மீது டிபன் பாத்திரங்கள் சாப்பிட்ட மீதியுடன் கிடந்தது. மேஜை விளக்கு கவிழ்ந்து விழுந்திருந்தது. டிவீ பயங்கரமாய் அலறிக்கொண்டிருந்தது. ப்ரிட்ஜ் கதவு திறந்திருக்க டப்பாக்கள் கொட்டி இருந்தன. வாஷ் பேசினில் சோப்பு பெட்டி தண்ணீரில் ஊறிக் கொண்டிருந்தது.
உள்ளே போனான். படுக்கையில் அவனுடைய மனைவி உல்லாசமாய் சாய்ந்து கொண்டு சாவகாசமாய் ஒரு கதைப்புத்தகத்தை படித்து கொண்டிருந்தாள். கணவனை கண்டதும் புன்னகை செய்தாள்.
அவனுக்கு ஒரே ஆத்திரம். என்ன ஆச்சு இன்று? என்று கத்தினான்.
ஒன்றும் ஆகவில்லை. தினம் ஆபிசில் இருந்து வந்ததும் " நாள் பூரா இன்னிக்கு என்னதான் பண்ணினே ? என்று நீங்க கேப்பீங்க இல்லையா? என்றால் அவள்.
சரி.
"இன்றைக்கு நான் அத பண்ணலை" என்று பதில் வந்தது.
 
**** கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு,பழைய தோழியை பார்க்க போயிருந்தேன்.
சமீபத்தில் தாயாகி இருந்தாள். ஏதேதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ஏய் உனக்கும் பெண் குழந்தை எனக்கும் பெண் குழந்தை,உன் குழந்தையும் வெள்ளி கிழமைதான் பொறந்துச்சு என் குழந்தையும் வெள்ளி கிழமைதான் பொறந்துச்சு என்றாள்.

ஹூம்.. நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது
  ******

Monday, October 25, 2010

அம்மா அப்பா மற்றும் குஞ்சு புறாக்கள்

Dove hatching eggs 
நான் வேலை பார்க்கும் ஆபீஸ் இருப்பது ஒரு கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில். கான்க்ரீட் காடான சென்னையில் தங்குவதற்கு மரங்கள் இல்லாத புறாக்கள் அவ்வப்போது எங்கள் ஆபிசில் தஞ்சம் புகும். பெரும்பாலும் ஜன்னல் ஓரத்தில் இல்லை என்றால் பால்கனியில் கூட்டமாக அமர்ந்திருக்கும். எங்கள் ஆபீஸ் பால்கனியில், ஏழு ஏசி அவுட் டோர் யூனிட் பொருத்தப்பட்டிருக்கும்.  பிரிடிஷ்காரன் கம்பெனி என்பதால், பறவை காய்ச்சலுக்கு பிறகு நிறைய பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் ஒன்று ஏசி அவுட் டோர் யூனிட் பக்கம் எந்த பறவையையும் அண்ட விடக்கூடாது. அது இடும் எச்சங்கள் ஏசி காற்றில் கலந்து வேலை பார்ப்பவர்களுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

ஒரு நாள் பால்கனியை திறந்து பார்க்கும் பொழுது, சட சடத்து பறந்தது ஒரு புறா. கூடொன்று கட்டும் முயற்சியில்  இருந்தது அந்த புறா. பெயருக்குத்தான் அது கூடே தவிர, அது சுள்ளிகளின் குவியல் போலிருந்தது. அன்றைய வேலையில், அதை சுத்தம் செய்ய சொல்ல மறந்து போனேன். மறு நாள் பார்கையில் அந்த சுள்ளி குவியலுக்கு மத்தியில் ஒரு முட்டை. ரெண்டு நாள் கழித்து மற்றொரு முட்டை இட்டிருந்தது. பால்கனி கதவை திறக்கும் பொழுது எல்லாம் ஒரு புறா இரு முட்டைகளின் மேல் தவம் செய்வது போல் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும். மற்றொரு புறா ஆண் புறாவாக இருக்கும், அதற்கு துணையாக, காதலாக பக்கத்தில் காத்திருக்கும்.


அந்த ஜோடி புறாக்கள் இப்பொழுது எங்கள் அலுவலகத்தின் விருந்தாளிகள். அதை கண்காணிக்க முடிவு செய்து செய்து எங்கள் அலுவலகத்தில் வேறொரு இடத்தில பொருத்தி இருந்த செக்யூரிட்டி காமிராவை பால்கனியில் பொருத்தினோம்(டெக் டீமில் இருந்தால் இது ஒரு வசதி). அது ஒரு மோசன் டிடக்ட் காமிரா, எதவாது அசைந்தால் மட்டும் வீடியோ  எடுக்கும். புறாவின் ஒவ்வொரு அசைவையும் படமெடுத்தது. அலுவலகத்தின் அன்றாட வேலையில் புறா ஜோடியை வேடிக்கை பார்ப்பதும் சேர்ந்து கொண்டது (ஆபீஸ்ல வேலை பார்த்துட்டா மட்டும்). அலவலகத்தில் பெருக்கி துடைக்கும் அம்மா காலையில் வந்தவுடன் இன்னா சார், புறா குஞ்சு பொரிச்சிருச்சா, எதுனா படம் இருந்தா போட்டு காட்டேன் என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
 அடை காக்கும் புறா எப்படி இரை தேடும், ஆண் புறா கொண்டு வந்து கொடுக்குமா என்ற கேள்விக்கு வீடியோ விடை அளித்தது. புறா ஆணாதிக்கவாதி அல்ல. இரவு முழுதும் அடைக்காக்கும் பெண் புறா காலையில் ஆண் புறாவிடம் அந்த வேலையை கொடுத்துவிட்டு இரை தேட சென்று விடுகிறது. மாலை வரை ஆண்  புறா அடைகாக்கிறது. குஞ்சு பொரிக்க பதினஞ்சிலிரிந்து பதினெட்டு நாட்கள் ஆகிறது. குஞ்சு பொரித்தவுடன் மறுபடியும் தாயும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி குஞ்சுகளை காக்கின்றன. குஞ்சுகள்  பெற்றோரின் சிறகின் கதகதப்பில் உறங்கும் அழகு அற்புதம்.  இன்னும் ஒரு மாதம் இருக்கிறது அந்த குஞ்சுகள் தன் சிறகை விரித்து பறக்க.


 

மேலும் தகவல்கள்:-
# பெரும்பாலும் நகரங்களில் காணப்படுவது பாறை புறா (Rock dove)
# ஆண் புறாக்கள் கூட்டை கட்டி விட்டு, பெண் புறாவை அழைக்கும்
# பெண் புறா இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் இடும்.
# இரண்டு புறாக்களும் மாற்றி மாற்றி அடை காக்கின்றன
# குஞ்சு பொரிக்க 15 இல் இருந்து 18 நாட்கள் ஆகின்றன
# பிறக்கும் போது குஞ்சுகள் மஞ்சள் நிறத்தில் சிறகுகள் இன்றி இருக்கும்.
# குஞ்சு பிறந்தவுடன் முட்டை ஓடுகளை தாய்ப்புறா அப்புறப்படுத்தி கூடை சுத்தம் செய்கிறது.
# இந்த நேரத்தில் கண் திறக்காத குஞ்சுகளை தாய் புறாவும் தந்தை புறாவும் மாற்றி மாற்றி அரவணைத்து நிற்கின்றன.
# குஞ்சுகள் நன்கு வளரும் வரை, அவற்றிற்கு  தன் இரைப்பையில் சுரக்கும் பாலை அளிக்கின்றன இரு புறாக்களும்.
# வளரும் குஞ்சுகள் பறப்பதற்கு நான்கில் இருந்து ஆறு வாரம் ஆகிறது.
# குஞ்சுகள் பறக்க ஆரம்பித்தவுடன், சிறிது காலம் உணவு அளிக்கும் புறாக்கள், பின்பு அதனை விட்டு விலகிவிடும்.
# இந்த வகை புறாக்கள் 5 இல் இருந்து 15 வருடம் வரை உயிர் வாழும்.
# அஞ்சு மாதம் ஆகும் குஞ்சுகள் இணையை தேட ஆரம்பித்துவிடும்.
# மறுபடியும் தொடரும் முதலில் இருந்து.

புறா அடைக்காப்பது மற்றும் ஆண் மற்றும் பெண் புறா அடைக்காக்கும் பணியை மாற்றிகொள்வது போன்றவற்றை வீடியோவில் கண்டு களியுங்கள்.
********************

Tuesday, October 12, 2010

50'வது பதிவு - ஒரு பதிவரின் வாக்குமூலம்

போன வருடம் அக்டோபர் 12 இல் எனது முதல் பதிவை ஆரம்பித்தேன். இன்றோடு ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறேன். இந்த இடுகையில் இன்னொரு சிறப்பு, இது எனது அம்பதாவது இடுகை.(போதும் போதும் எவ்வளவு நேரம் கைதட்டுவீங்க). ஒரு வருடத்திற்கு அம்பது இடுகை என்பது, எனது இலக்கியப்பயனத்தில் மிகவும் குறைவுதான் இருந்தாலும் இந்த வருடம் இலக்கிய சேவையை ஆத்து ஆத்துன்னு ஆத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

சில பதிவர்கள் அவர்களின் அம்பதாவது, நூறாவது இடுகையில் சமுதாயத்தை திருத்த அல்லது இந்த பாழாய் போன சமுதாயத்திருக்கு மெசேஜ் சொல்லி இடுகை இடுவார்கள். நான் இதற்கு  முந்தைய நாற்பத்தி ஒன்பது இடுகையிலும் உருப்படியாய் ஒன்றும் எழுதவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே எனக்கு தெரியாமல் எதையாவது எழுதி இருந்தாலும்  அதை படித்து பயபுள்ளைங்க யாரும் திருந்தமாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் எனது மொக்கையை மேலும் இதிலே தொடர்கிறேன்.

நான்  இந்த பதிவுலகத்துக்கு வந்தது (இந்த உலகத்துக்கு ஏன் வந்தேன்னு இன்னும் புரியலை) நலிவுற்று கிடக்கும் இலக்கியத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம் என்கிற எண்ணத்தில்தான் என்றாலும் அப்படியே ஒத்த கருத்துள்ளவர்களை நண்பர்களாய் அடைவதும் ஒரு காரணம். இந்த வேளையிலே கடந்த ஒருவருடத்தில் நான் அடைந்த நண்பர்களை கண்டு பேரானந்தத்தில் துய்க்கிறேன்.(நல்லவேளை இன்னும் என் chat history எதுவும் வெளிவரவில்லை).போலவே இந்த ஒரு வருடத்தில் நான் வன்புணர்ச்சி, துகிலுரிதல், சொற்சித்திரம், புனைவு, நெளிஞ்ச சொம்பு, பெண்ணீயம் போன்ற நல்ல வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.  இந்த நேரத்தில் என் படைப்புக்களை படித்து விட்டு பின்தொடற்பவர்கள்(108 Followers) பின் தொடந்து விட்டு படிக்காதவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இடுகையுடன் பின்தொடற்பவர்கள் list  மற்றும் hits counter என்னுடைய தளத்தில் இருந்து நீக்கப்படுகிறது. இல்ல உங்க எழுத்துன்னா எனக்கு உசிரு மத்ததெல்லாம் மசிரு  உங்களை பின்தொடந்தே ஆவேன் இல்லையேல் சாவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் உங்கள் டேஷ்போர்டில் Blogs iam following இல் எனது URLai சேர்த்து கொள்ளவும். சரி ஹிட்ஸ் கவுன்டரை ஏன் எடுத்தீங்க என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே வந்த ஹிட்ஸ்களை வைத்து நான் மகாபலிபுரம் சாலையில் வாங்கிபோட்டிருக்கும் அம்பது ஏக்கர் நிலமே என் வாழ்க்கைக்கு போதும் என்ற காரணமே அன்றி வேறு இல்லை.


கடந்த ஒரு வருடமாக நீங்கள் தந்து வரும் பேராதரவுக்கு நன்றி. இந்த ஒரு வருடத்தில் இந்த இடுகைகளை படித்தவர் யாரவது ஒருத்தர் திருந்தி இருந்தாலும் கூட எங்கையோ தப்பு நடந்திருக்கு என்று அர்த்தம்.

ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.... மொக்கை தொடரும்

GET READY FOLKS!......


***

Saturday, August 7, 2010

பதிவுலகில் நான் கடவுள்....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
எறும்பு.
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை என்னை எல்லோரும் ராஜகோபால் என்று அழைப்பார்கள். தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது. பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி, எறும்புன்னு பேரு வச்சாவது கொஞ்சம் சுறுசுறுப்பு வருதான்னு சோதிச்சு பார்த்தேன். சட்டில இருந்தாதான் அகப்பைல வருமாம்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
கொஞ்ச வருசங்களுக்கு முந்தி, பிரபல பதிவரான சாரு நிவேதாவின் தளத்தை மட்டும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒருநாள் ஜெயமோகனை கிண்டல் செய்து மடிப்பாக்கம் (லக்கி லுக் )தளத்தின் லிங்கை வெளியிட்டு இருந்தார். அப்படியே போய் தேடி தேடி டமில் பதிவுலகை கண்டு கொண்டேன். முன்பு ராஜகோபால் என்ற பெயரிலையே கமெண்ட் இட்டு கொண்டிருந்தேன் எறும்பு தளத்தை ஆரம்பிக்கும் வரை அதாவது உங்களுக்கு சனி திசை ஆரம்பிக்கும் வரை. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நிறைய கமெண்ட் இட்டேன். பதிவர் சந்திப்புக்கு செல்ல ஆரம்பித்தேன். எதையாவது கிறுக்கி பதிவேற்றியவுடன் சில பிரபல பதிவர்களுக்கு லிங்க் அனுப்புவது உண்டு. அது எந்த அளவுக்கு உதவியது என்று தெரியவில்லை. சுருக்கமாக எல்லாம் செய்தேன் உருப்படியாக எழுதுவதை தவிர.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இல்லை .சில விசயங்களில் ரிஸ்க் எடுப்பது உண்டு. ஆனால் என் மனைவியும் என் பதிவை படிப்பதால் உயிருக்கு பயந்து இந்த ரிஸ்க் மட்டும் எடுப்பது இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
அப்படியே எழுதி பணம் சம்பாதிசுட்டாலும். நண்பர்களை சம்பாதிக்க மட்டும் எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இப்போதைக்கு ஒண்ணுதான் இருக்கு. முன்பு ராம்சைதன்யா என்ற பெயரில் ப்ளாக் கடை ஆரம்பித்து ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றை தமிழில் வெளியிட்டு கொண்டிருந்தேன். பிறகு தனியாக டீ ஆற்ற பயமாக இருந்ததால் அந்த கடையை மூடிவிட்டேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபமா, பொறாமையா பதிவர்கள் மீதா?!. எல்லோருமே தெய்வங்கள். அந்த தெய்வங்களுடன் சேர்ந்து நானும் கடவுளாக முயற்சித்து கொண்டிருக்கிறேன். அகம் பிரம்மாஸ்மி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
அனைத்தையும் கூறி, எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சுக்கிட்டு பின்னாடி நமக்குள்ள பிரச்சனை வந்தா சொற்சித்திரம் வரைவீங்க. அதுக்கு நான் ஆளு இல்லை.
பிம்பிளிகி பிளாப்பி. மாமா பிஸ்கோத்து.


***********

Monday, July 5, 2010

சாவின் சாட்சி
எனக்கு நினைவு தெரிஞ்சு முதல் முதலா சாவ பத்தி தெரிஞ்சுகிட்டது அம்மா தாத்தா இறந்தபோதான். அப்பெல்லாம் அப்பா வச்சிருந்த கடைலதான் போன் இருந்துச்சு. ஒரு நாள் அப்பா சீக்கிரமே கடைய பூட்டிட்டு வந்துடாக. கொஞ்ச நேரத்துல அம்மா அழ ஆரம்பிச்சுடாக. அப்பா ஆச்சிதான் அய்யா, இப்பதான் அப்பா கடைக்கு போன் வந்துதான் ஊருல உங்க தாத்தா இறந்து போய்ட்டாராம், நாம போய்ட்டு வந்த்ருவமா, என்று கேட்டார். பயந்து போன தம்பி வரமாட்டேன் என்று கூறிவிட அவனை பக்கத்துக்கு வீட்டில் விட்டுவிட்டு கிளம்பி சென்றோம். கூடத்தில் நிறைய மாலையிட்டு தாத்தாவை படுக்க வைத்திருந்தார்கள். தாத்தாவின் மூக்கில் பஞ்சை வைத்து, கண்களை மூடி சந்தனம் வைத்திருந்தார்கள். அழுது வீங்கிய கண்களுடன் ஆச்சியும் தாத்தா அருகில் அமர்ந்திருந்தார். அப்பா தாத்தாதான் முன்னாடி நின்னு எல்ல காரியத்தையும் பண்ணி கொண்டிருந்தார். நீர் மாலைக்கு நேரமாச்சு எல்லாரும் கிளம்புங்க, என்றார். என் கையிலும் ஒரு சிறிய குடத்தை குடுத்து அனுப்பினார்கள். அருகில் இருந்த ஆற்றில் குளித்துவிட்டு குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தோம்.தாத்தாவை  குளிப்பாட்டனும், முதல்ல பேரன் பேத்திங்க எல்லாம் தண்ணி ஊத்துங்க என்றதும் குடத்தை எடுத்து முன் சென்றேன் . கூட்டத்தில் யாரோ, சின்ன பேரனை கூட்டிட்டு வரலையா என்று கேட்டார்கள். அதற்கு அப்பா ஆச்சி, அவன் பயந்துட்டான், இவன்தான் கொஞ்சம் தைரியமா வந்தான் .தண்ணீர் ஊற்றியதும் தாத்தாவின் கண்களில் அப்பிய சந்தனம் கரைந்து கண்கள் திறந்தது. திடுக்கிட்டு  பயந்து  அலறி, அழுது கொண்டிருந்த அம்மாவின் சேலைக்குள் முகத்தை புதைத்து கொண்டேன். பயபடாதையா ஒண்ணும் இல்ல,ஆச்சி ஓடிவந்து முதுகு தடவி குடுத்தாள். நீண்ட நாட்களுக்கு சந்தனம் விலகிய கண்கள் தூக்கத்தில் பயமுறுத்தியது.
 
அடுத்து கல்லூரி படிக்கும்போது நடந்த நண்பனின் சாவு.அவனை பார்க்கும்பொழுது, புது ஜீன்சும் புது டி ஷர்டுமாக இருந்தான். என்னடா என்று கேட்டதற்கு, இல்ல மக்கா இந்த கலர்ல டிரஸ் போட்டா நல்லாருக்கும்னு என் ஆளு சொன்னாடா, அதான் புதுசு எடுத்தேன். இப்ப அவ கிட்ட காமிக்கணும். நான் போய் அவ காலேஜ்கிட்ட நிக்க போறேன், அவ என்ன பார்த்து என்ன சொல்றான்னு கேக்கணும்  என்று பைக்கை எடுத்து கிளம்பினான். சிறிது நேரத்தில் அந்த செய்தி வந்தது. போய் பார்த்ததில் அவன் பைகிர்கோ அவன் போட்டிருந்த உடையிலோ ஒரு சிறு கீறல் கூட இல்லை, அப்படியே புதுசு போலிருக்க தலை மட்டும்  லாரி ஏறி நசுங்கி இருந்தது. அவன் கொஞ்சம் குடித்திருப்பான் போலிருந்தது.  நானும் குடியை விட தீர்மானித்தேன். நாள் சென்று துக்கத்தின் வீர்யம் குறைய புத்தனாயிருந்த மனது மறுபடியும் பொறுக்கி ஆனது.
 
நல்ல காரியத்திற்கு போறமோ இல்லையோ கண்டிப்பா துக்க காரியத்திற்கு போகணும்னு அப்பா தாத்தா அடிக்கடி சொல்லுவாக. சொல்றதோட மட்டும் இல்லாம சொந்தகாரங்கள்ள யாரு செத்து போனதா சேதி வந்தாலும் போய் எல்லா காரியங்களையும் முன்ன நின்னு செய்வாக. சொந்தகாரங்களுக்கு சேதி சொல்றதிலே இருந்து, பாடை கட்றதுக்கு ஓலை வெட்டி போடறது, நீர் மாலை எடுக்கிறது, நெய் பந்தம் பிடிக்கிறது வரைக்கும் எல்லாம் கட்டா செய்வாக. கடைசியா காரியம் எல்லாம் முடிஞ்சு ஊர் வண்ணாத்திக்கும், நாவிதனுக்கும் காசு போய் சேந்துதான்னு பாத்துட்டுதான் வீட்டுக்கு வருவாக. இப்படி இருந்த தாத்தாவும் ஒரு நாள் போய்டாக. ஊர்லையே முதமுறையா அவுகள ஏசி பெட்டிக்குள்ள வச்சிருந்தோம். தாத்தாவின் தலைமாட்டில் ஏற்றி வைத்திருந்த ஊதுபத்தி மல்லிகையின் மணத்தை பரப்பி கொண்டிருந்தது.  அந்த வயதிற்குள் நிறைய சாவை பார்த்தால் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். வீட்டு வாசல் வரை ஒழுங்காக வரும் பெண்கள், வீட்டிற்குள் நுழைந்ததும் தலையை விரித்து போட்டு, அய்யா ராசா போய்டியா என்று அழுதபடி ஓடினார்கள். அதில் ஒருத்தி அழுவதை நிறுத்தி விட்டு, சமையல் அறைக்கு போய் காபி குடித்துவிட்டு வந்து மறுபடியும் அழுகையை தொடர்ந்தார். முதுகு வலிகுதுன்னாக, தைலம் தேச்சு விட்டேன், தேய்க்கும் போதே படக்குன்னு நெஞ்ச புடிச்சிட்டு என் மடியிலையே விழுந்துடாக,அவுகளை இனி எப்ப பாப்பேன்,ஆச்சி அரற்றியபடி இருந்தாள்.
 
எல்லாம் முடிந்து விசேசம் வைப்பதை பற்றி பேச்சு வந்தது. பதினாறாம் நாள் என்று முடிவானது. ஐயயோ, அவ்வளவு நாள் இங்க இருக்க முடியாது ஏற்கனவே மூணு நாள் லீவு போட்டுட்டேன், வேணும்னா மூணாவது நாள் விசேசத்த வச்சுக்குங்க, எல்லாரும் வேலைக்கு போகனுமில்ல என்றேன். அதுக்கு ஆச்சி, அய்யா அவர நல்லபடியாய் அனுப்பி வச்சுடீங்க, அப்படியே அவரு விசேசதையும் நல்ல படியா முடிச்சு குடுத்திருங்க, வேணுமினா நான் போய் சேர்ற நாளு ஞாயித்துகிழமையா இருக்கணும்னு குல சாமிய வேண்டிகிடறேன் என்றாள்.
 
பின்பு ஒரு நாள் ஒரு கல்யாண வீட்டில், மணமேடையில் ஏற்றி இருந்த மல்லிகைப்பூ மண ஊதுபத்தி, தாத்தாவின் சாவை ஞாபகப்படுத்தியது. எதிரில் உட்கார்ந்திருந்த மணப்பெண்ணை வெறித்து பார்த்து கொண்டிருந்த மாப்பிள்ளை, தாத்தாவின்  வெறித்த கண்களை நினைவூட்டினான்.
 
இன்று, உள்ளே கூட்டம் அதிகமாக இருந்ததால் புழுக்கம் அதிகமாக இருந்தது. காற்றோட்டமாக இருக்க வீட்டிற்கு வெளியே வந்தேன். இன்னும் பிணத்தை எடுக்க எவ்வளவு நேரமாகும் என்று தெரியவில்லை. வெளி ஊரில் இருந்து பையன் வரவேண்டும். பாடை கட்டி கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். நல்ல பூ வேலைப்பாடு. சர சரவென்று பின்னி கொண்டிருந்தார்கள். சங்கு ஊதுகிறவன் இடை இடையே சங்கை ஊதிகொண்டிருந்தான். மழை  வரும் போலிருந்தது. வாசலில் அந்த கார் வந்து நின்று ஒருவன் இறங்கி உள்ளே ஓடினான். வேடிக்கை பார்க்க நானும்  வீட்டிற்குள் சென்றேன்.
காரில் இறங்கி வந்தவனை பார்த்தவுடன், பிணத்தின் அருகில் இருந்த என் மனைவி, ராசா உன் அப்பா நம்மளை எல்லாம் தவிக்க விட்டு போய்ட்டாருடா என்று என் உடம்பை கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள்.


****

Saturday, June 26, 2010

பாணபத்திர ஓணாண்டி.

கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக்கூட்டம் - செம்மொழி மாநாடு 
 
கவிஞர் வாலி :-
விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம் பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !எய்த இடம் வேடம்போல் ஆவேன் !நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிடஅடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிடஅன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது அது குரல் அல்ல, குறள்,பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால் புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !அது ஈர்த்தது வையநோக்கு ! சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐயர் நோக்கு !காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்புல்லரிக்காதா கேட்டு !இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கலைஞர்தான் காவல் !அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !இதற்கு காரணம் இரு மாமிகள்!
பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ? (குஷ்பூ)
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

வைரமுத்து :-
மேற்கு மலை தொடர்ச்சி மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுங்கள். தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள். ஏ ஆகாயமே உன் நட்சத்திரங்களை காணோம் என்று இரவோடு முறை இடாதே, எல்லாம் கொடிசியா  அரங்கத்தில் கூடிவிட்டன. நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,யாருக்கு? முத்தமிழ் அறிஞரே, மூத்த முதல் அமைச்சரே, செம்மொழி தங்கமே, எங்கள் செல்ல சிங்கமே, தாய் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்.உங்கள் உயரத்தை நீங்கள் தாண்டுக்றீர்கள். வள்ளுவர் கோட்டம் வரைந்தீர்கள், அன்னை தமிழ்நாடே அண்ணாந்து பார்த்தது. வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அணைத்து இந்தியா அண்ணாந்து பார்த்தது.செம்மொழி மாநாடு கண்டீர்கள், அணைத்து உலகமே அண்ணாந்து பார்க்கிறது.
எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் நீங்கள் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்து உள்ளீர்கள்.உங்கள் உள்ளங்கை விரிந்தால் சூரியன். குவிந்தால் கூட்டணி.கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்.
தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்.ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை. நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது ஆறு, காவிரி ஆறு. உங்கள் தந்தை முத்துவேலரை எண்ணி பார்த்தால் எழுத்துக்கள் ஆறு. முதல் எழுத்தோடு சேர்த்தால் உங்கள் முழு பெயரின் மொத்த எழுத்து ஆறு. நீங்கள் பிறந்த மாதம் ஆறு.பெற்ற பிள்ளைகள் ஆறு. இது வரலாறு.
வீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா?, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

Monday, May 24, 2010

ஒரு பயணம்.. ஒரு பதிவர் சந்திப்பு..

இரண்டு நாள் பயணமாக சொந்த ஊருக்கு (அம்பாசமுத்திரம்) சென்று இருந்தேன்.

காட்சி ஒன்று :-
கோயம்பேடு செல்ல பில்லர் பஸ் ஸ்டாப்பில் நின்று இருந்தேன். ஊனமுற்ற ஒருவர் பைக் ஓட்டி வந்து கொண்டிருந்தார். கூடுதலாக இருச்சக்ரம் பொருத்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா பைக். சிக்னலில் மஞ்சள் விளக்கு எரிந்ததும் அவர் வண்டியை நிறுத்த முயல, பின்புறம் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று அவரை தட்டி தூக்கியது. பைக்கின் பின் சக்கரங்கள் காரின் மீது ஏறி நிற்க அவர் எழுந்திருக்க முடியாமல் கீழே கிடந்தார். நான் ஓடிச்சென்று அவரை தூக்க வேறு சிலரும் ஓடி வந்தார்கள். காரின் டிரைவரும் இறங்கி வந்தார். பைக்கில் விழுந்தவருக்கு லேசான காயம். உதவிக்கு வந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் அளித்து, அங்கங்கே நெளிந்திருந்த அவரின் வண்டியை தட்டி சரி செய்தார்கள். இவ்வளவு களேபரம் அருகே நடந்து கொண்டிருக்க, காரில் உள்ளே உட்கார்ந்திருந்த முதலாளி கீழே இறங்கி வரவே இல்லை. பயபுள்ள ஏசி காத்து வீணாகிடும்னு நினைச்சுதோ என்னமோ கார் கண்ணாடிய கூட கீழே இறக்கி பாக்கவே இல்லை.
  **$%$%&** (இந்த இடத்துல உங்களுக்கு பிடிச்ச கெட்ட வார்த்தைய போட்டுக்குங்க)
*****************************************
காட்சி இரண்டு :-
  **$%$%&** .இதுவும் கெட்ட வார்த்தை ஆனால் இடம் வேறு.பில்லரில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில், நீண்ட நேரமாக சில்லறை பாக்கி தராத நடத்துனரை சக பயணி ஒருவர் வாழ்த்தி கொண்டிருந்தார். வாழ்த்தை கேட்டு பூரித்துப்போன நடத்துனர், இவ்வளவு பேசுற மயிரான் ஒழுங்கா சில்லறை கொண்டு வந்தா கொறஞ்சு போயிருவியா? **$%$%&**  சில்லறை இருந்தா கொடுக்க மாட்டோமா என்று பதில் வாழ்த்தில் இறங்கினார். சற்றே மனம் தளராத பயணி நடத்துனரை விட்டு அரசாங்கத்தை வாழ்த்த ஆரம்பித்தார். ங்... டிக்கெட்டு முதல்ல  மூணு ரூபா இருந்தது அப்புறம் அஞ்சு ரூபாயா மாத்துனீங்க அப்புறம் ஸ்பெஷல் பஸ்சு, எக்ஸ்பிரஸ் பஸ்சு, ஏசி பஸ்சு இப்படிதான வருது.. குறைஞ்ச டிக்கெட்டுக்கு எங்க பஸ் வருது? உருபடமாட்டீங்கடா நீங்க **$%$%&**. உடனே நடத்துனர் அதை ஏண்டா இங்க கேக்குற, போய் அய்யாவ கேளு என்றார். இந்த உரையாடலை கவனித்து கொண்டிருந்த முன் சீட்டிலிருந்த இருவர் நானும் இன்னைக்கு தீபாவளி வந்திரும் நாளைக்கு வந்திரும்ன்னு பாக்கிறேன் அந்த நாள் வரவே மாட்டேங்குதே, என்றனர்.ஒருவேளை ரெம்ப படிச்சவங்க போலிருக்கு, நல்ல எண்ணம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி விட்டு இறங்கினேன்.
*****************************************

காட்சி மூன்று :-
வாழ்க வளமுடன். இது நண்பனின் திருமண மேடை. சின்ன வயசுலேர்ந்து என் கூட ஒண்ணா சுத்துன சேக்காளி. வெளியே இருக்கிறவன் உள்ள வரதுக்கு ஆவலாய் பறகிறதும், உள்ள இருக்கிறவன் வெளிய போக முட்டி மோதுற கல்யாணம்கிற மாய வட்டத்துல மாட்டிகிட்டான்.வாழ்த்திட்டு மேடைய விட்டு கீழே இறங்கும் போது ஒருத்தர் தயங்கி தயங்கி பேச வந்தார். என் பேரு முத்துகுமார், அப்பல்லோ கம்புயுடேர்ல மார்கெட்டிங் மானேஜரா இருக்கேன்.ஒருநாள் நெட்ல அம்பாசமுதிரம்னு தேடும்போது உங்க ப்ளாக் கிடச்சுது. அப்பலேர்ந்து உங்க ப்ளாக தொடர்ந்து படிச்சுட்டு வரேன்.உங்க பேர வச்சு தெருவில விசாரிச்சப்ப நீங்கதான்னு சொன்னங்க. உங்க அப்பா நீங்க கல்யாணத்துக்கு வரீங்கன்னு சொன்னங்க, அதான் உங்களை பாக்கலாம்னு வந்தேன். நம்ம ஊர்காரர் நம்ம ஊரபத்தி எழுதும் போது சந்தோசமா இருக்கு, தொடர்ந்து எழுதுங்க என்றார். சற்று நேரம் திகைத்துத்தான் நின்றேன்.மொக்கை போடுறதுக்கே இப்படியா. இப்படி நாப்பது பேரு (யோவ் ஒருத்தன் தான்யா சொன்னான்) வந்து சொல்லும் போது நல்லாத்தான் இருக்கு ஆனா எவ்வளவு முக்கினாலும் எழுத்துதான் வரமாடேங்குது.
*****************************************

காட்சி நான்கு :-
 போன தடவை அந்த பிரபலம் ஊருக்கு வந்த போதே பார்க்க முயற்சித்தேன். யோவ் ஒரே தலைவலியா இருக்கு, பிளைட்டுல வந்தனா ஜெட்லாக்கா இருக்கு, அப்புறம் நானே கூப்பிடுறேன் என்று பார்க்காமலே எஸ்கேப் ஆகிட்டார். அவர் பிரபல பதிவர் துபாய் ராஜா (நானே ஓரமா உட்காந்து டீ ஆத்திட்டு இருக்கேன் என்னபோய் ஏன்யா இப்படி). இந்த முறை கால் செய்யும் போது, வீட்ல நானும் என் பொண்ணும் தான் இருக்கோம். அவ தூங்குறா, என் மனைவி வேலைக்கு போயிருக்கா. சரி அண்ணாச்சி உங்களால இப்ப வரமுடியாது அப்ப நான் அங்க வரேன். அதுவா நான் சொல்றனே, நீங்க வரீங்களா, இம்.. சரி நான் கால் பண்றனே என்று இழுத்தார். சரி அண்ணாச்சி ஏதும் சந்தேகம் இருந்தா சாமி படத்துக்கு முன்னாடி பூ கட்டி போட்டு பாருங்க என்று போனை வைத்தேன். பின்பு ஒரு நாலஞ்சு போன் காலுக்கு பிறகு நான் பஸ் ஏற ஒரு மணி நேரம் இருக்கும் போது, அவரே என் வீட்டிற்கு வந்தார். அப்படியே ஆற்றங்கரைக்கு சென்று ஒரு போட்டோ சூட் (புவிஇயல் ரெம்ப முக்கியம், அடுத்த தலைமுறைக்கு இந்த ஆற காண்பிக்க). யோவ் எங்க ஊரு ஆற விட இங்க நல்லா இருக்குயா என்றார். அவரு ஊரை தாண்டி வர்ற அதே ஆறுதான்,அங்கு குளித்த பெண்களை பார்த்தபின் சொன்னாரா என்று தெரியவில்லை. பின்பு ஊருக்கு வந்திருந்த நாஞ்சில் ப்ரதாப்புக்கும்,( அண்ணன் கல்யாணத்தில் பெண் பார்த்த கதையை எழுதுவாரா)  கண்ணாவிற்கும் போன் செய்து பேசினோம். லேட்டாய் வந்த பாவத்திற்கு என்னையும் என் லக்கேஜையும் சென்னை செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட்டார்.


***********************

Monday, April 5, 2010

நம்ம ஊரு... நல்ல ஊரு... அம்பை.. பாபநாசம்..

பாபநாசம்  அகஸ்தியர் அருவி - வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும்..


அகஸ்தியர் அருவி வேறொரு கோணத்தில். ஆளில்லா அருவி. ஹை ஜாலி.

அருவிக்கு செல்லும் பாதை 

  தூரத்தில் அருவியும் முன்னே தாமிரபரணி ஆறும்..


பாபநாசம் தலையணை


  தனிமை தவம் 
  நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்.பயபுள்ள பதிவு  போட எதுவும் கிடைக்கலேன்னா நம்மள போட்டோ பிடிச்சு போடுது.
இந்த போஸ் போதுமா? Mr .Photogenic
 புளிய மரத்திற்கு வேலி. சிவனின் திருமணத்தை காண பொதிகை மலை செல்லும் வழியில் அகத்தியர் இளைப்பாறிய மரமாம். என்னவானால் என்ன நீண்ட வருடங்களாக மரம் பாதுகாப்பாக இருக்கிறது.
  வண்டி மறிச்சி அம்மன் கோயில். கோயில் கொடை அன்று மட்டுமே இந்த மண் சிற்பம் பழுது பார்த்து அலங்காரம் செய்யப்படும். அது வரை இப்படி கால் நீட்டி இளைப்பாற வேண்டியதுதான்.
 இம் பலா சீசன் ஆரம்பிச்சாச்சு..
 கோயிலில் ஒரு பிரதோஷ காலம் 
அவதார் மரம் ?!?!
 பாபநாசம் சிவன் கோயில், மலையில் இருந்து...

****************

Thursday, March 25, 2010

செல்பேசி அபாயம்..


சமீபத்தில் நண்பர் ஒருவரின் உறவினர் பெண்ணின் மொபைலுக்கு  குறிப்பிட்ட நம்பரிலிருந்து ஆபாச மெசேஜ்கள் வர துவங்கியது. திருப்பி அந்த நம்பருக்கு கால் பண்ணினால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கும். நாளாக நாளாக இந்த தொல்லை அதிகரித்தது. அந்த பெண் அணிந்திருக்கும் உடையின் நிறத்தை குறிப்பிட்டும், அந்த பெண்ணின் அன்றைய அலங்காரத்தை குறிப்பிட்டும் மெசேஜ் வர ஆரம்பித்தது.எவனோ தெரிந்த ஒருவனோ அல்லது வீட்டுக்கு அருகில் இருப்பவனோதான் இந்த வேலையை செய்கிறான் என்ற முடிவுக்கு வந்தார்கள். எதிர் வீட்டுக்காரனுடன் முன்விரோதம் உண்டு. அவனாக கூட இருக்கலாம் என்று எண்ணினார்கள். பின்பு  ஒரு நண்பரின் உதவியுடன் அந்த செல்பேசி நம்பரின் விலாசத்தை , அந்த செல்பேசி நிறுவனத்திடம் இருந்து வாங்கினார்கள். அந்த முகவரி அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மற்றொரு ஊரில் உள்ளவரின் முகவரி. அங்கு சென்று விசாரித்ததில் அந்த நபர் ஒரு சித்தாள் வேலை பார்ப்பவர். சில மாதங்களுக்கு முன்பே அவரின் செல் போனை தொலைத்திருக்கிறார். தொலைந்த அவரின் நம்பரை முடக்கம்  செய்வதை பற்றிய வழிமுறைகள் எதுவும் தெரியாததால், தொலைந்த அவரின் செல்பேசியை பற்றிய எண்ணத்தை அவர் குழைக்கும் சிமிண்டின் ஊடாக வைத்து பூசிவிட்டு புது எண்ணும் செல்பேசியும் வாங்கிவிட்டார்.

இது வேலைக்கு ஆவாது என்று உணர்ந்த அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சும்மா சொல்லகூடாது நம்ம சைபர் க்ரைம், ரெண்டே நாளில் மெசேஜ் அனுப்பிய கயவாளிப்பயலை கொத்தாக அள்ளிவந்துவிட்டார்கள். 

அந்த நல்லவன், அந்த பெண் குடி இருக்கும் தெருவிலேயே செல் ரீ சார்ஜ் கடை நடத்துபவன். இந்தப்பெண் அந்த கடையில் தான்  ரீ சார்ஜ் செய்வாள். சும்மா கிடைத்த சித்தாளின் போனை வைத்து விளையாடி இருக்கிறான். ஆபாச மெசேஜ் அனுப்பிவிட்டு போனை ஆப் செய்து அடுத்த சிம்மை அதே போனில் போட்ட போது அந்த நம்பரை வைத்து அவனை தூக்கி வந்து விட்டார்கள்.

காவல் நிலையத்தில் வைத்து அவனை பிதுக்கியத்தில், இனி அவன் அம்மாவுக்கு மெசேஜ் அனுப்புவது கூட சந்தேகம்தான்.

இஸ்கூலுக்கு போகும் பிள்ளைகளே செல்பேசி கொண்டு போகும் காலம் இது. SMS, MMS வடிவில் அவர்களை தட்டி வீழ்த்த நிறைய பேர் அலைகிறார்கள். வளைத்து போட நினைப்பவர்களும் வக்கிரம் பிடித்தவர்களும் உண்டு.  நமக்குதான் ஏகப்பட்ட வேலை ஆனால் பொண்ணுங்களை கரெக்ட் பண்ண நினைக்கிற ஆளுங்களுக்கு அதுதான்  வேலையே. உஷாருங்கோ..

"ISSUED IN PUBLIC INTEREST " Use mobile Save paper - What an IDEA..*************************

Saturday, March 20, 2010

லீனா மணிமேகலை, சாரு,பதிவர் அப்துல்லா - ஜூவீ பேட்டி

சும்மா ஒரு பொது அறிவுக்கு படிச்சு தெரிஞ்சுக்குங்க...

எப்படியும் கூகிள் உதவியுடன் தேடுவீங்க.. எதுக்கு சிரமம்.அந்த கவிதைய படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இங்கு செல்லவும். 

Monday, March 15, 2010

நித்திய ஆனந்தம்..என்னுடைய இத்தனை வருட ஆன்மீக தேடலில் நிறைய ஆசிரமங்களையும் சாமியார்களையும் சந்திதாயிற்று. பெரும்பாலானவற்றில், ஆசனம் த்யானம் என்று நல்லபடியாக ஆரம்பித்து ஒருவரை காட்டி இவரை கும்பிடு, இவரை மட்டுமே கும்பிடு என்ற நிலைக்கு தள்ளி விடுகிறார்கள். அதைவிட சொல்லி தரும் ஆச்சார்யர்களின் ஈகோ நம்மளை ஆச்சர்யப்படுத்தும். என்ன இத்தனை வருஷம் சந்நியாசியா இருக்கேன்னு சொல்றாங்க இன்னும் ஈகோவை விடலியா என்று எண்ணத்தோன்றும்.

ஆனால் சந்நியாசி என்பவனும் சராசரி மனிதனே. அவர்களுக்கு உள்ளும் கர்வம் உண்டு காமம் உண்டு. மனதில் உள்ள அழுக்குகளை களைந்து பூரணம் ஆவதற்கு பிரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டும்.நிறையவே மன திடம் வேண்டும்.காவி உடை அணிந்தவர்கள் அனைவரும் சந்நியாசி இல்லை. ஆசிரமத்தில் சிறு பிரச்சினைக்கு அடித்து கொண்ட சன்யாசிகளை பார்த்திருக்கிறேன்.சன்னியாசி ஆன பிறகும் சன்யாசம் துறந்து இல்லறத்தில் நுழைந்தவர்களையும் தெரியும்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சன்யாசம் என்பது ஒரு "Attitude". பற்றற்ற மனோ நிலை. அந்த நிலையில் இருக்க காவி உடுத்தனுமுன்னு அவசியம் இல்லை. ஒரு குடும்பஸ்தனாக இருந்து கொண்டே அந்த நிலையில் இருக்கலாம். இதற்கு நம்முடைய புராணத்தில் நிறைய கதைகள் உண்டு (தேடி படிங்க). 

கீழே உள்ளது ஒரு குருவுக்கும் சீடனுக்கும் நடந்த உரையாடல்.
(தேவை ஆனதை மட்டும் எழுதுகிறேன்).யார் அந்த குருன்னு கேக்காதிங்க. சொன்னாலும் அவர உங்களுக்கு தெரியாது. அவர எந்த தொலைகாட்சியிலும் பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.

சீடன் : ஒரு குடும்பஸ்தனுக்கு எந்த அளவுக்கு ஆன்மிகம் தேவைப்படும்?

குரு : நீ டீ குடிக்கும்பொழுது, ஒரு கப் டீக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்து கொள்வியோ அந்த அளவிற்கு போதும். நாள் பூரா யோகா பண்ணிக்கிட்டு பஜனை பாடிகிட்டு இறை நினைப்போட இருக்கணும்னா அதுக்கு நீ சன்யாசியா இருக்கனும். சம்சாரிக்கு அது தேவை இல்லை.

சீடன் : அப்ப யோகா என்றால் என்ன ?

குரு : "Yoga is perfection". நீ செய்யற எல்லா விசயத்திலயும் பெர்பெக்டா இருந்தா அதுவே போதும். 

சீடன் : புரியல.

குரு : நீ ஒரு அப்பாவுக்கு பையனா இருந்தா, பெத்தவங்களுக்கு செய்ய வேண்டியது செய். குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தா அவங்களுக்கு செய்ய வேண்டியது செய். இந்த உலகத்தில உனக்கு என்ன ரோல் குடுகப்பட்டிருக்கோ  அத ஒழுங்கா செய். அது போதும். ஆனா செய்யும் போது எதையும் எதிர் பார்த்து  அப்பாகிட அது கிடைக்கும் பையன் கிட்ட இது கிடைக்கும்ன்னு செய்யாத. எதிர்பார்ப்பில்லாம செய்.முழு மனசோட செய்.அதுதான் யோகா.

சீடன் : அப்ப உங்கள பாக்க வர்றது, ஆசிரமத்தில தங்கணும்னு நினைக்க கூடாதா?

குரு : எப்பவும் ஏன், என் லங்கோட பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கணும்ன்னு நினைக்கிற?. என்ன ஒரு படிக்கல்லா நினைச்சு என் தோள் மேல மிதிச்சு ஏறிப்போ. ஆசிரமத்துக்கு வா, நான் சொல்லி தர்ற யோக பயிற்சிகளை  கத்துக்க, வீட்டுக்கு போய் பயிற்சி பண்ணி பாரு.உனக்கு சொல்லி குடுத்தாச்சு.அடுத்தவங்க காத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கும் சொல்லி குடுக்கணும். சந்தேகம் இருந்தா லெட்டர் எழுது.குருவுக்கு பின்னாடி சீடனும், சீடனுக்கு பின்னாடி குருவும் வரணும்ன்னு நினைக்காத. நான் சொல்லி தந்தத மட்டும் பிடிச்சிக்க, என்னை இல்ல. நான் இன்னிக்கு இருப்பேன், நாளைக்கு  இருக்க மாட்டேன். அப்ப யாரு பின்னாடி ஓடுவே?

பேச்சு தொடர்ந்தது..

சீடன் : எனக்கு  வர்ற நோய்களை, கஷ்டங்களை என்ன பண்றது?

குரு : அது உன் கர்மா. நீதான் அனுபவிக்கணும்.நீ என்ன நினைச்ச குருகிட்ட போனா அவரு கைய தூக்கி ஆசிர்வாதம் பண்ணா உன் கஷ்டம் போய்டும்ன்னு நினைச்சியா?. உன்கிட்ட எல்லா கர்மாவையும்  வாங்கி நான் எங்க போய் கழிக்கிறது? அப்படியே வாங்கினாலும், நீ மறுபடி கடைசி வரை யோக்கியமா இருப்பேன்னு என்ன நிச்சயம். மறுபடியும் சேற பூசிட்டு வந்து அத சுத்தம் பண்ண சொல்லுவ.போய் மக்களுக்கு சேவை பண்ணு. கர்மா கழியும்.அதுக்காக ஊரு ஊரா போக சொல்லலை. நீ சம்பாதிக்கிறதுல  பத்து சதவீதம் உன்னுடையது இல்லைன்னு நினைச்சுக்க. கஷ்டபடுரவன்களுக்கு குடு. மனசால எப்பவும் நல்லதே நினை. நல்லதே நடக்கும்.
  

போன வாரமே எழுதனும்னு நினைச்சேன். கொஞ்சம் நித்ய அலை ஓய்ந்த பிறகு பதிவிடுகிறேன்.

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

********************************************************

Wednesday, March 10, 2010

ஆயிரம் ரெண்டாயிரம் மூவாயிரம்...

கடந்த அக்டோபர் மாதம் பதிவு ஆரம்பித்தேன். இந்த ஐந்து மாதத்தில் பத்தாயிரம் ஹிட்ஸ். பட்டினத்தார்  போன்ற விசயங்களை எழுதினால் கடை காத்து வாங்குச்சு. சினிமா விமர்சனங்களும், நித்தியின் வாக்குமூலமும் அதிகம் பேர் வாசித்த பதிவுகள். ஆகவே மக்களே தொடர்ந்து மொக்கை பதிவுகளை அதிகமாக பதிய முடிவு செய்திருக்கிறேன்.
 தொடந்து பின் தொடர்பவர்களுக்கும், எனது ஏழே முக்கால் லட்சம் வாசகர்களுக்கும் நன்றி.

பின்குறிப்பு:- இந்த பத்தாயிரம் ஹிட்ச வச்சு என்ன பண்றது?. இத வச்சுக்கிட்டு யாராவது பத்தாயிரம் ரூபாய் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். அவ்வளவு தரமுடியாடியும், கொஞ்சம் குறைச்சு 9999 ரூபாய் குடுத்தாக்கூட போதும். பாத்து பண்ணுங்க.

Sunday, March 7, 2010

நித்யானந்தரின் முதல் வாக்குமூலம்..

நித்யானந்தரின் முதல் வாக்குமூலத்தை அவர்கள் இணையதளம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் உள்ள அவரின் கருணை பொங்கும் விழியையும், ஸ்லோகத்துடன் உரையை ஆரம்பிக்கும் தெளிவையும் பாருங்கள். அப்படியே எண்ணில் அடங்கா சிஷ்யகோடிகளின் புல்லரிக்கும் கமெண்ட்டையும் படியுங்கள். இவர்களின் மன நிலையை விளக்கும் "மனோதத்துவ" புத்தகம் ஏதும் யாராவது பரிந்துரை செய்தால் மகிழ்வேன். இந்த பரவச நிலை கமெண்ட்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=IO_6GkLekWY

Thursday, February 25, 2010

பலாபட்டறை ஷங்கரின் Judjement day

 

 நானும் என் மனைவியும் இருபது வருடம் சந்தோசமாக இருந்தோம். பின்பு நாங்கள் சந்தித்து கொண்டோம். திருமணத்தை பற்றி நகைச்சுவையாக சொல்லும் வாசகம் அது. 
பத்து வருடங்களுக்கு முன்பு சந்தோசமாக இருந்த ஒரு பெண், ஷங்கரை முதன் முதலாக சந்தித்து மணம்முடித்த நாள் நாளை (26-2-20 ?? ). 

ஷங்கர்,பிரபல பதிவர், கூடிய சீக்கிரம் மற்ற ரவுடி பதிவர்களுடன் ஜீப்பில் ஏற இருக்கும் திறமை படைத்தவர். அவரை இந்த நல்ல நாளில் வாழ்த்துவதோடு இந்த பத்து வருட காலம் அவருடைய மொக்கைகளை அவருடைய அழிச்சாட்டியங்களை தாங்கி, மிக பொறுமையாய் இருந்து அவருடன் வாழ்ந்து வரும் திருமதி ஷங்கருக்கு "கோல்டன் க்ளோப்" விருது வழங்க இந்த அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்கிறேன்.

வாழ்த்த வயதில்லை என்றாலும்  மனம் இருக்கின்ற  காரணத்தால் வாழ்க தம்பதியினர். வாழ்க வளமுடன்.

பின்குறிப்பு:-
புகைப்படம் ஷங்கரின் இணைய தளத்தில் இருந்து திருடப்பட்டது.இல்லற வாழ்கையில், இந்த பத்து ஆண்டுகளில் ஞானம் அடைந்துவிட்டதால் அதை கொண்டாடும் விதத்தில் நாளை ஷங்கர் பார்ட்டி அளிக்கிறார். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ளவும்.Tuesday, February 23, 2010

சின்ன சின்ன - 23-2-10

பதிவு போட்டு ரெண்டு வாரம் ஆச்சு. ஏன் இன்னும் பதிவு போடலைன்னு நேரிலும், தொலைபேசியிலும், மெயிலிலும்,எஸ் எம் எசிலும், கடிதம் எழுதியும் (எத்தனை!) கேட்ட பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறேன் என்றே தெரியவில்லை. நீங்கள் உங்கள் படைப்பை புத்தகமாக வெளியிடும் போது கண்டிப்பாக ஒரு புத்தகம் வாங்குவேன் என்று உறுதி கூறுகிறேன்.

 *************************************************************************
Food inc. பதிவர்கள் மயில் ராகவன், ஷங்கர் புண்ணியத்தில் இந்த படத்தை பார்க்க முடிந்தது. உணவு தயாரிப்பை பெரிய நிறுவனங்கள் எப்படி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்பதையும் நாம் உண்ணும் உணவு (குறிப்பாக இறைச்சி உணவுகள்) எவ்வாறு தயாரிக்கபடுகிறது என்ற கசப்பான உண்மையையும்  வெளிச்சம் போட்டு காட்டும் இந்த படம். ஏற்கனவே ஹாலிவுட் பாலாவும் மயில் ராவணனும் இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதி விட்டார்கள். அதையும் படித்து பாருங்கள்.
நமது பதிவுலகத்தில் FOOD என்று ஒரு பதிவர் இருக்கிறார். திருநெல்வேலியில் உணவு ஆய்வாளராக பணி ஆற்றும் இவர் உணவு கலப்படங்களை பற்றி நிறைய பதிவிட்டு இருக்கிறார். "அ"வில்  ஆரம்பித்து "டோ" வில் முடியும் ஒரு சமையல் பொடி. எல்லா உணவிலும் சுவைக்காக சேர்க்க சொல்லி விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அதன் கெடுதலை சொல்லும் இந்த பதிவு. கொஞ்சம் வோட்டும் போட்டு உங்க ஆதரவை தெரிவியுங்கள்.

*************************************************************************
பதிவர்களுக்கு படைப்புகளுடன் வெள்ளிநிலா பத்திரிகை முதல் பதிப்பு வெளிவந்தது. அதில் அநேக பதிவர்களின் படைப்புகள் இருந்தாலும், ஈரோடு கதிர், யுவக்ருஷ்ணா மற்றும் நம்ம ஷங்கரின் படைப்புகள் குறிப்பிடபடவேண்டியவை. நீங்கள் இதுவரை உங்கள் பிரதிக்கு சொல்லவில்லை என்றால் உங்கள் முகவரியுடன் சர்புதீனுக்கு ஒரு மெயில் அனுப்பவும். இதன் விபரங்களை அணுக இங்கு செல்லவும். 
ஆனாலும் அவருக்கு தைரியம் அதிகம்தான், எனக்கே போன் பண்ணி என்னுடைய படைப்பை அனுப்ப சொல்லி கேட்கிறார். வெள்ளிநிலாவின் வளர்ச்சியை மனதில் கொண்டு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டேன்.

*************************************************************************
 காலை நேரம் அனைத்து தொலைகாட்சியிலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் விளம்பர நிகழ்ச்சிகள் நடக்கும். சித்த வைத்தியம், யுனானி, காது கேட்பதற்கு சிகிச்சை, மந்திர எந்திர தாயத்து விற்பனை, முடியாமைக்கு சிகிச்சை, முடவர்கள் நடக்கிறார்கள். பொழுது போகாமல் இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்த்தீர்களானால் நல்ல நகைச்சுவையாக பொழுது போகும். இதில் ஒருவர் சிதம்பர ரகசியத்தை சாப்ட்வேராக விற்கிறார். அவர் குடுக்கும் உலோகத்தை உங்கள் அருகில் வைத்திருந்தால் உங்கள் உடல் சக்கரங்கள் ஒழுங்காக சுத்துமாம். நல்லா சுத்துறாங்க. விருப்பம் இருந்தால் முயற்சிக்கவும்.
*************************************************************************
 அந்த பெரியவருக்கு புகழ்ச்சி என்றால் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வயதிலும் நீண்ட நேரம் உட்கார்ந்து நடிகைகள் தங்கள் இடுப்பு மற்றும் இன்ன பிற அங்கங்களை அசைப்பதை ஆனந்தமாக பார்கிறார். இது ஏதாவது மன வியாதியா என்று நம்ம மனநல மருத்துவர் பதிவர் தான் சொல்ல வேண்டும். எப்படியும் ஒரு அய்நூறு பாராட்டு விழாவது நடந்திருக்கும். அதிக பாராட்டு விழா கண்டவர் என்று யாரவது பாராட்டு விழா எடுக்காம இருந்தா சரி. 

*************************************************************************

தமிழ்மணம் முகப்பில் தெரிய நாலு வோட்டில் இருந்து ஏழு வோட்டாக மாற்றிவிட்டது. நாலு வோட்டு கிடைக்கவே நாய் படாத பாடு படவேண்டி இருந்தது.இப்ப ஏழு வோட்டு வேற. ஏழுகொண்டலவாடா நீதான் என்னைபோல இளைய பதிவர்களை காப்பாற்ற வேண்டும். நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ அவர்கள் எழுதுவதை குப்பை என்றோ கூறமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.

*************************************************************************

Wednesday, February 10, 2010

காதலர் தினம் - சிறப்பு பதிவு

காதலிக்கும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

நாங்கெல்லாம் வருஷம் பூரா காதலிப்போம், எங்களுக்கு  எதுக்கு தனியா ஒரு நாளு. சொன்னா யாருக்காவது புரியுதா. இந்த வியாபாரிங்கதான் வாழ்த்து அட்டைய விக்கணும் பூவ விக்கணும், பொம்மைய விக்கனும்னு எதையாவது கிளப்பி விடுறாங்கன்னா இந்த பதிவர்கள் வேற சீசன் பதிவு போடுறாங்க.தவிர அந்தந்த சீசனுக்கு உண்டான பதிவு போடலைனா தமிழ்நாட்டை விட்டே தள்ளி வச்ருவாங்க போலிருக்கு.காதல் புதிரா, காதல் புனிதமா, காதல் சமூக அறிவியலா, காதல் கவிதையா எல்லா தலைப்பிலும் பலர்  பதிவு எழுதி ஆச்சு.  இதுல ஒரு பதிவர் (ஷங்கர் அல்ல ) எனக்கு கால் பண்ணி, காதலர் தினத்துக்கு நான் ஒரு கவிதை எழுதி வச்சுருக்கேன் அத போஸ்ட் பண்ண போறேன் அன்னிக்கு நீங்க என்ன போஸ்ட் பண்றீங்கன்னு கேட்டார். நமக்கு அந்த கவிதை கண்றாவிதான் வர மாட்டேங்குது. அதனால சும்மா சிரிச்சு வச்சேன்.எனக்கு தெரிஞ்சு காதல பத்தி அருமையா ஒரு நாட்டுப்புறப்பாட்டு இருக்கு. என்ன, கல்யாணத்திற்கு பிறகு மனைவி ஆனவள் என்னவெல்லாம் செய்யணும்னு காதலன் காதலிக்கு பாட்டின் மூலமா குறிப்பு எடுத்து கொடுப்பான். இந்த ப்ளாக்கிற்கு வாசகிகள் எண்ணிக்கை (யாருப்பா அது) அதிகம் இருப்பதால் இங்கே போஸ்ட் பண்ண முடியாது. தேவை ஆனவர்கள் தனியாக மெயில் அனுப்பவும்.(மெயில்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கிறதா வேண்டாமான்னு முடிவு செய்வேன்).

சரி நாம காதலிச்ச கதைய போடலாம்னா, வீட்ல பொஞ்சாதி இத படிக்கறதோட இல்லாம   என் ஊட்டுக்காரர் நெட்ல எழுதுறாரு நெட்ல எழுதுறாருன்னு, சொக்காரங்களுக்கு எல்லாம் கூவி கூவி சொல்லி ஆச்சு.அதனால அத எழுதி என்ன யோக்கியன்னு நம்பிகிட்டு இருக்குற பயபுள்ளைக நினைப்புல சாண்ட் அள்ளி போட விரும்பலை.

ஆகவே மகா ஜனங்களே நல்லா காதலியுங்க.. காதலிக்கிற கொஞ்ச காலம் மட்டும்தான் உங்களால சந்தோசமா இருக்க முடியும். அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ன சொல்றார்னா, பொண்ணுங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலன் மாறிடுவான்னு நினைப்பாங்கலாம் . அதே பசங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலி மாறாம அப்படியே இருப்பான்னு  நினைப்பாங்கலாம்.ஆனா ரெண்டு பேரு நினைப்பிலேயும் தண்ணி லாரி ஏறுமாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. வந்து எங்க ஜோதில ஐய்கியமாகுங்க.விட்டில் பூச்சிகளாய்...

காதலி கிடைக்காத வாலிப வயோதிக அன்பர்களே, அம்மாகிட்ட மம்மு வாங்கி சாப்டுட்டு,  கூகுளில் "valentine's day coloring pages for kids" அப்படின்னு டைப் பண்ணா கீழே உள்ள மாதிரி நிறைய படம் வரும்.அப்பா உதவியுடன் அத பிரிண்ட் அவுட் எடுத்து நல்லா கலர் பண்ணுங்க. சமத்தா கலர் பண்ணி மறுபடியும் அம்மாகிட்ட மம்மு வாங்கி சாப்பிட்டு படுத்து தூங்குங்க.  ங்கா...

பின் குறிப்பு :- 
இந்த சிறப்பு பதிவு முடிஞ்சது. அடுத்த சிறப்பு பதிவு மார்ச் மாசம் ஹோலி வருதாம்ல. அப்ப பாப்போம். பிப்ரவரி பதினாலுக்குதான் இன்னும் அஞ்சு நாள் இருக்கே, அதுக்குள்ள என்ன அவசரம்னு நீங்க கேக்கிறது புரியுது. வலது பக்கம் மேல பாருங்க. உங்களுக்கே புரியும்.இனிமே கேப்பீங்க?!?!. 
லேபிளுக்கும் பதிவுக்கும் நோ கனக்சன்.நல்லா இருங்க மக்கா.


Wednesday, February 3, 2010

எனது முதல் கவிதை (மாதிரி).....

 கர்ம யோகி:-
பிரம்ம மூர்த்தத்தில்
விழித்தெழு
ஆசனத்தில் உடம்பை 
வளர் 
பிராணாயாமத்தில் 
தேர்ச்சி பெறு
பிரமச்சர்யத்தை 
கைக் கொள்
மனம் அடக்கி 
த்யானத்தில் அமர்
குண்டலினியை 
குதித்து எழச்செய்.
முக்திக்கு முன்னூறு 
வழிகள் இருக்க
சாப்பிடும்போது  புரை ஏறிய
மனைவிக்கு ஓடிச்சென்று 
தண்ணீர் எடுத்து தருவது 
எளிமையாய் இருக்கிறது.


பின்குறிப்பு :- கவிஞர் மற்றும் நண்பர் பலாபட்டறை ஷங்கருக்கு dedicate பண்ணிக்கிறேன். (அதிகம் மியூசிக் சேனல் பார்ப்பதால் வந்த பழக்கம்)

எல்லாத்திலையும் கை வச்சு இப்ப கவிதைலையும் வாய வச்சாச்சு. நீங்க எவ்வளவோ தாங்கிடீங்க, இதையும் தாங்குங்க.


**********************************

Monday, February 1, 2010

பரதேசியின் கதை..

(படத்தில் இருக்கும் பலா சங்கர் வெறும் மாடலே. அவருக்கும் தலைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை)

தமிழ் நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் பட்டினத்தார். சென்னையில் இருப்பவர்களுக்கே நிறைய பேருக்கு இவரின் சமாதி சென்னையில் திருவெற்றியூரில் அமைந்திருப்பது தெரியாது. கடலை ஓட்டி அமைந்துள்ள சாலையில் கடலை பார்த்தபடி இருக்கிறார் பட்டினத்தார். இவரின் இயற்பெயர் திருவென்காடார்.

செல்வ செழிப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர். மனைவி பெயர் சிவகலை. இருவருக்கும் குழந்தை இல்லாமல் இறைவனை வேண்ட, சிவ பக்தர் ஒருவர் கோயிலில் கண்டு எடுத்ததாக கூறி ஒரு குழந்தையை இவர்களிடம் ஒப்படைக்கிறார். ஆசையோடு வளர்த்த குழந்தை இளைஞன் ஆகி கடல் கடந்து பொருள் ஈட்ட செல்கிறான். அவன் வரும்பொழுது வெறும் எரு வரட்டி மூடை மூடையாக கொண்டு வருகிறான். திருவென்காடார் அவனை திட்டி அனுப்பி விடுகிறார். வீட்டிற்கு வந்தால் பையன் அவன் அம்மாவிடம் கொடுத்த ஒரு சிறு பெட்டி இருக்கிறது. உள்ளே ஒரு உடைந்த ஊசியும், பிறப்பிலிருந்து ஓலையும் இருக்கிறது. ஓலையில் " காதற்ற ஊசியும் வாராது கான் கடைவழிக்கே" என்று எழுதப்பட்டுள்ளது.

இயற்கையின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியாத இடம் இதுதான். செல்வ சிறப்புமிக்க வணிக குடும்பத்தில் பிறந்தவர் கண்டிப்பாக இதைவிட பெரும் தத்துவங்களை படித்திருப்பார். ஆனால் அவருடைய "ப்ரேகிங் பாயிண்ட் " இருந்தது அந்த ஒத்தை வரியில்.எல்லா சுகங்களையும் குடுத்து பின் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டால் ஒரு அதிர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் தகுதி இருந்தும் வழிக்கு வராத சிஷ்யனை ஒரு குரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தே தேடலுக்கு வழி வகுப்பார். இங்கே இறைவன் அந்த வேலையை செய்தார் . கடைசி அடியாக அந்த ஒத்தை வரி.ஞானம் பிறந்தது. துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பரதேசி ஆகிவிடுகிறார். தேடல் ஆரம்பித்தது.

பரதேசியான தம்பியை கண்டு அவமானம் அடைந்த சகோதரி அப்பதில் விஷம் கலந்து குடுகிறாள். . "தன் வினை தன்னைச்சுடும், வீட்டப்பம் ஓட்டை சுடும்" என்று கூறி அப்பத்தை கூரையில் எறிய, அந்த வீடு தீப்பிடித்து
எரிகிறது.

தகுதி உள்ள சீடன், தன் குருவை எப்படியேனும் அடைந்தே தீருவான். உங்களுக்கான நேரம் வரும் பொழுது உங்கள் குரு உங்கள் முன் தோன்றுவார், எவ்வடிவதிலும். இயற்கை இடும் இந்த புதிரையும் புரிந்து கொள்வது கடினம். நுட்பமானது. அரசியின் நகையை திருடியதாக கைது செய்யப்பட்டு அரசன் முன் நிறுத்தப்படுகிறார் பட்டினத்தார். அவரை கழு மரத்தில் ஏற்ற சொல்கிறான் அரசன். மரம் தீபிடித்து எரிகிறது. அரசன் தன் குருவை கண்டுகொண்டான். குரு சீடன் சந்திப்புக்கு அங்கே அரசியின் நகை களவு ஒரு மீடியம், அவ்வளவுதான். பின்பு அந்த அரசன் பத்ரகிரியார் ஆகி, தன் குருவையே மிஞ்சும் சீடன் ஆகிறான்.
(இவரின் கதையை தனி பதிவாக இடலாம்).

குருவுக்கு முன்பே சீடன் முக்தி அடைந்துவிட, பட்டினத்தார் ஊர் ஊராக சுற்றுகிறார் . இடையில் அவரின் அன்னை மரண படுக்கையில் இருக்கும் சேதி கேட்டு அவரை காண வருகிறார். இந்நாட்டில் அன்னைக்கு இருக்கும் மரியாதை போல் வேறு எங்கும் இல்லை. முற்றும் துறந்த முனிவரான ஆதி சங்கரர் ஆனாலும் பரதேசியான பட்டினத்தார் ஆனாலும் அல்லது சம கால ஞானியான ரமண மகரிஷி ஆனாலும் தன் அன்னைக்கே முதலிடம் அளித்து உள்ளார்கள்.
இப்பொழுது இங்கேதான் முதியோர் இல்லமும் அதிகரிக்கிறது.

மரணித்துவிட்ட அன்னையை கண்டு அழுது புலம்பி பட்டினத்தார் இயற்றிய பாடல்கள் தமிழும், கடைசி அன்னையும் மக்களும் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்.


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


முக்திக்காக ஏங்கி திரியும் பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனிக்கும் இடத்தில முக்தி கிடைக்கும் என்று இறை சக்தியால் உணர்த்தப்படுகிறது. கரும்பில் பேய் கரும்பு என்ற வகை இனிப்பட்றது . திருவற்றியூர் வந்த இடத்தில பேய் கரும்பு இனிக்கிறது.

இந்த இடத்தில தான் தன் உடம்பை விட வேண்டும் என்று அவருக்கு புரிகிறது.
ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைகப்படும். கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன. ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணமலையில் மறைந்தது. போலவே பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய பட்டினத்தார் அந்த கூடை குள்ளிருந்தே மறைந்து போனார். அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம் இருந்தது. அதுவே திருவெற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் கோயில்.


பின் குறிப்பு: - அய்நூறு ஆண்டு கால பழமை வாய்ந்தது. சென்னையில் இருப்பவர்கள் ஒரு முறை சென்று வாருங்கள். யோகா சாதனையில் ஈடு பட்டிருப்பவர்கள் சென்று தியானம் செய்ய உற்ற இடம். அங்கே உள்ள நல்ல அதிர்வுகள் உங்களை இலகுவாக உங்களுடன் ஒன்ற செய்யும்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை பட்டினத்தார் பாடல் கீழே.

******************************************************************************************Thursday, January 28, 2010

சின்ன சின்ன... 28-1-10

பூர்த்தி செய்யப்படாத தலைப்பு. ஒரு படைப்பாளி ஒரு பிரதியை படைக்கும்பொழுது சிலவற்றை ஒரு வாசகனின் யூகத்திற்கே விட்டுவிடுகின்றான். ஒன்றும் புரியாமல் வாசகன் திகைக்கும் பொழுது அந்த பிரதி காலங்களை கடந்து அமரத்துவம் பெற்று விடுகிறது. பிரதியை படைத்தவனும்...........
(இதுக்கு முதல்ல டிட்பிட்ஸ் என்று தலைப்பிட்டு இருந்தேன். அடக்கமாட்டாத தமிழ் ஆர்வத்தால் சின்ன சின்ன..)

*************************************************************************************
போன வாரம் எங்கள் அப்பார்ட்மெண்டில் வீடு வீடாக ஒரு கார்டு விநியோகித்து கொண்டிருந்தார்கள். அது கேகே நகர் பஸ் டிப்போ அருகில் உள்ள மருத்துவமனையின் விளம்பர அட்டை. சர்க்கரை நோய், மூட்டுவலி, எலும்பு முறிவுக்கு சிறப்பாக சிகிச்சை அளி பார்கலாம். இதில் கவனிக்க வேண்டியது, அந்த கார்டை அவர்களிடம் சிகிச்சைக்கு வரும் பொழுது கொண்டு வந்தால் 25 சதவீதம் தள்ளுபடி உண்டாம்.மருத்துவத்தில் விளம்பரம் செய்யகூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். விரைவில் ஆடிக்கழிவு மற்றும் எக்ஸ்பயரி ஆகும் மருந்துகளின் clearence சேல் எதிர்பார்க்கலாம். எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு நாலு கார்டு வாங்கி வச்சிருக்கேன். தேவை படுபவர்கள் எனக்கு மெயில் செய்யவும். இல்லையேல் நாலு கார்டையும் எடுத்திட்டு போய் 100 சதவீதம் தள்ளுபடி உண்டானு கேக்கணும்.

*************************************************************************************
சென்னை சங்கமம் வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கில் நடந்தது. தினமும் சென்று வந்தேன். அஞ்சு வயசு பொண்ணு அசால்டா சிலம்பு சுத்துச்சு. பலத்த கரகோஷம் எழும்ப அந்த சின்னஞ்சிறு முகத்தில் அவ்வளவு சந்தோசம். நீண்ட நாட்களுக்கு அந்த முகமே நினைவில் நின்றது. சில கலைஞர்களிடமும் பேசினேன். அறிவிப்பாளர் போன வருடத்தின் சென்னை சங்கமம் சீடீ விற்பனைக்கு என்று அறிவித்தார். அம்பது ரூபாய் குடுத்து வாங்கினேன். நேற்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது. கவரில் சங்கமம் 2009 நிகழ்வுகள் அனைத்தும் என்று பிரிண்ட் செய்யப்படிருந்தது. போன வருடம் கலைஞர் டிவி ஒளிப்பரப்பிய ஒரு நாள் சங்கமம் மட்டுமே இருந்தது, கலைஞர் டிவி வாட்டர் மார்க் மற்றும் லோகோவுடன்.நோ கமெண்ட்ஸ்

*************************************************************************************
இரண்டு பேருமே என்னை விரும்புறாங்க, நான் என்ன முடிவு எடுக்கிறது. நான் சொல்றேன் வலது பக்கம்தான் மச்சம் இருக்கு, நீதான் ஏன் பேரன். ஏன்னெனில் காம்ப்ளானில் மட்டுமே உள்ளது இரட்டிப்பு ஊட்டசத்து. தண்ணிலையே பொழப்பு நடத்துறீங்க, தண்ணிய பார்த்து ஏன் பயப்படறீங்க. பாதி முதுகு சரியான மாதிரி இருக்கு. ஓடிபோலாமா.நடிகர் கார்த்திக் பங்கேற்கும் ஸ்டார் டாக். முடி உதிர்வது பிரச்சினை. வெங்காயத்தை சிறியதாக நறுக்கவும். ராஜபக்ஷே வெற்றி பெற்றார். அவள நான் பழி வாங்கியே ஆகணும். எங்கே செல்லும் இந்த பாதை. இந்த விசமில்லாத பாம்புதான் இன்னைக்கு எனக்கு உணவு. குறைந்த உடையில் பூனை நடை.நேத்து வார விடுமுறை. வெட்டியா உட்கார்ந்து சேனல் மாத்தினதுள்ள குறிப்பு எடுத்தது. ஏன் கடைசில அந்த சேனல்ல நிறுதிட்டீங்கன்னு கேட்டு யாரும் கமெண்ட் போடகூடாது.
*************************************************************************************
நிறைய இடங்களில் தியேட்டரை விட்டு தூக்கிய பிறகும் சன்னில் இன்னும் வேட்டைகாரனுக்கு ட்ரைலர் ஓட்டி கொண்டிருக்கிறார்கள். சன் ஆரம்பிச்சு வச்சது, நொடிக்கு நூறு தரம் ட்ரைலர் காண்பிப்பது. இப்ப அறிமுக நாயகன் குமரன் நடிக்கும் தைரியம், எல்லா சேனல்லையும் நொடிக்கு முந்நூறு தரம் ஓடுது. அந்த ட்ரைலரின் முடிவில் வில்லன் வெறித்தனமா கமான் கமான்னு நம்மள தியேட்டருக்கு கூப்பிடறுது பீதிய கிளப்புது.இந்த படத்துடன் , நாளை கோவா மற்றும் தமிழ் படம் ரிலீஸ் ஆகுது. என்னோட சாய்ஸ் தமிழ் படம்.

*************************************************************************************
நேற்று வந்த சம்ஸ்.
1 sal 12 mah 1 mahk 4 hfte 1 hftek 7 din 1 dink 24 ghnte 1 ghntek 60 minut 1 minutk 60 sec 1 sec hzarlmhehrlmhe me 1 hi
Aap KHUSH RAHO?
கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு அர்த்தம் என்று அடுத்த sms.
1 year 12 months 4 weeks 7 days in a week a day in a week 24 hours in a day an hour in a day 60 mins in a hour 1 min in a hour..
Be happy always.
என் பதிவை எல்லாம் படிக்கிறீங்க. கண்டிப்பா சந்தோசமாத்தான் இருப்பீங்க.:))


**********************************************************************************