Saturday, June 26, 2010

பாணபத்திர ஓணாண்டி.

கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக்கூட்டம் - செம்மொழி மாநாடு 
 
கவிஞர் வாலி :-
விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம் பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !எய்த இடம் வேடம்போல் ஆவேன் !நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிடஅடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிடஅன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது அது குரல் அல்ல, குறள்,பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால் புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !அது ஈர்த்தது வையநோக்கு ! சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐயர் நோக்கு !காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்புல்லரிக்காதா கேட்டு !இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கலைஞர்தான் காவல் !அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !இதற்கு காரணம் இரு மாமிகள்!
பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ? (குஷ்பூ)
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

வைரமுத்து :-
மேற்கு மலை தொடர்ச்சி மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுங்கள். தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள். ஏ ஆகாயமே உன் நட்சத்திரங்களை காணோம் என்று இரவோடு முறை இடாதே, எல்லாம் கொடிசியா  அரங்கத்தில் கூடிவிட்டன. நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,யாருக்கு? முத்தமிழ் அறிஞரே, மூத்த முதல் அமைச்சரே, செம்மொழி தங்கமே, எங்கள் செல்ல சிங்கமே, தாய் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்.உங்கள் உயரத்தை நீங்கள் தாண்டுக்றீர்கள். வள்ளுவர் கோட்டம் வரைந்தீர்கள், அன்னை தமிழ்நாடே அண்ணாந்து பார்த்தது. வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அணைத்து இந்தியா அண்ணாந்து பார்த்தது.செம்மொழி மாநாடு கண்டீர்கள், அணைத்து உலகமே அண்ணாந்து பார்க்கிறது.
எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் நீங்கள் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்து உள்ளீர்கள்.உங்கள் உள்ளங்கை விரிந்தால் சூரியன். குவிந்தால் கூட்டணி.கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்.
தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்.ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை. நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது ஆறு, காவிரி ஆறு. உங்கள் தந்தை முத்துவேலரை எண்ணி பார்த்தால் எழுத்துக்கள் ஆறு. முதல் எழுத்தோடு சேர்த்தால் உங்கள் முழு பெயரின் மொத்த எழுத்து ஆறு. நீங்கள் பிறந்த மாதம் ஆறு.பெற்ற பிள்ளைகள் ஆறு. இது வரலாறு.
வீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா?, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

19 comments:

Software Engineer said...

பகிர்வுக்கு நன்றி!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

அஹோரி said...

கொடுத்த காசுக்கு மேல கூவுரானுங்க டா.

சரவணகுமரன் said...

உங்க தலைப்பும், படமும், மேட்டரும் சூப்பர் :-)

Chitra said...

வீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா?, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

....... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....ஸப்பா ..... முடியல...... ஜால்ரா சத்தம் பலமா இருக்கே.....

Jey said...

இவனுங்க கூவுரத கேட்கப் பிடிக்காம, 3 நாளா வீட்ல டிவி ஆன் பன்னல, இங்க வந்தா எழுத்துவடிவத்துல போட்டு படிக்க வச்சிட்டீங்க. போங்க சார்.

ரிஷபன்Meena said...

சங்க காலப் புலவர்கள் மன்னரை வாழ்த்தி பாடியதெல்லாம் இது போல தான் !! நிஜமா பார் முல்லைக்கு தேர் கொடுத்திருப்பாரா என்ற ஆதார சந்தேகங்கள் வருகின்றன.

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த பதிவர்கள் மாநாட்டிற்கு சென்றார்களே அதை என்ன சொல்ல ..
அருமையான பதிவு நண்பா ....ஈழத்தை பற்றி பேசிய நண்பர்களின்
மாநாடு நடக்கும் பொழுது அவர்களுடைய கோர முகத்தை பார்த்தேன்
இவர்களும் வாயப்பு கிடைத்தால் வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த பதிவர்கள் மாநாட்டிற்கு சென்றார்களே அதை என்ன சொல்ல ..
அருமையான பதிவு நண்பா ....ஈழத்தை பற்றி பேசிய நண்பர்களின்
மாநாடு நடக்கும் பொழுது அவர்களுடைய கோர முகத்தை பார்த்தேன்
இவர்களும் வாயப்பு கிடைத்தால் வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்

அத்திரி said...

அண்ணே இப்ப என்ன சொல்ல வர்றீங்க................... இப்படியெல்லாம் கிண்டல் பண்ணாஅதிங்க....... உள்ள போட்டுடுவாங்க

கே.ஆர்.பி.செந்தில் said...

ஸ்ஸ்ஸ் .. முடியல ..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நாராயணா, இந்த கொசுக்களோட தொல்ல தாங்க முடியலடா... மருந்து அடிச்சு கொல்லுங்கடா....

ஸ்வாமி ஓம்கார் said...

இந்த நிகழ்ச்சியின் நேரலையை கண்டு கொண்டிருந்தேன். இடை இடையே பெண் சிங்கம் பாடல்கள் வேறு போடுகிறார்கள்.

நாஜி வதை முகாமில் கூட இத்தகைய தண்டனை தரப்பட்டதில்லை :))

முடியல...

வித்யா said...

ஆட்டோ ஆன் தி வே:))

தாராபுரத்தான் said...

தன்னல தம்பட்ட மாநாடு்.. என்ன தப்பு..

தமிழ்மகள் said...

புட்டுகிட்டா பணத்தால இன்னா பண்ணுவீங்க.... :D

கண்ணா.. said...

தல.... ஆட்டோ வந்துச்சா?

எறும்பு said...

படித்து, வாக்களித்து, கமெண்ட் இட்ட அனைவருக்கும் நன்றி.

:)

எறும்பு said...

திரு.செங்குட்டுவன்,
மன்னிக்கவும் உங்கள் கமெண்டை வெளியிடவில்லை. நாம இந்த அளவுக்கு இறங்க வேண்டாம்.

:)