Monday, November 30, 2009

சாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - இரண்டாம் பாகம்

ரெட்டியார் மெஸ் இருக்கும் இடம் ஓலக்கூர் ஜங்ஷன். ஓலக்கூர் ஜங்ஷன் திண்டிவனம் சென்னை ரோட்டில். திண்டிவனத்திற்கும் மேல் மருவத்தூருக்கும் இடையில் உள்ளது, ரெட்டியார் மெஸ். ஓரு போலீஸ் ஸ்டேஷன். மூன்று சிறு கடைகள். அவ்வப்பொழுது உணவுக்காகவும் ஓய்வுக்காகவும் நின்று செல்லும் லாரிகள். இவைகளை இணைப்பது ஓலக்கூர் ஜங்ஷன்.

ஆட்டோவை அனுப்பிவிட்டு. சாருவிற்கு செய்தி அனுப்பிவிட்டு செல் போனை ஆப் செய்தேன், மெஸ்ஸிலிருந்து சில நிமிட நடையில் தெரிந்தது அந்த குடிசை சாரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்த மாதிரி ஆங்கில வடிவான “U” வை குப்புற போட்டிருந்த மாதிரி ஓரு குடிசை. குடிசைக்கு வெளியே நன்கு பெருக்கி சுத்தம் பண்ணப்பட்டிருந்தது, அதன் முகப்பில் பூச்சரங்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, உள்ளே “L” வடிவத்தில் சிறிய மரத்திலான கட்டில். அதில் அவர் அமர்ந்திருந்தார், தண்ணீரே பார்த்திராத தேகம். இடுப்பு வரை தொங்கும் ஜடா முடி. கருந்திராட்சை போன்று பளபளப்பான கண்கள். அவர், அவர் உடம்பையே உடையாக உடுத்திருந்தார். அவரின் கால்களுக்கு அருகில் ஓரு சிறு துண்டு. அவர் உடுத்திய இருந்ததாக இருக்க வேண்டும், நீ பார்க்க வந்த சாமிக்கு நான் எந்த விதத்திலும் குறைஞ்சவன் இல்லை என்பது போல பற்றற்று தரையில் கிடந்தது, அவர் இருந்தது போக இன்னும் இருவர் அந்த குடிசையினுள் அமரலாம், அவர் மெதுவாக தலை தூக்கிப் பார்த்தார், நீயா.. என்பது போன்ற பார்வை நான். அவர் அருகே அமர்ந்து கண்களை மூடினேன், கண்களை திறக்கும் பெழுது நேரம் கடந்துவிட்டிருந்தது, இதற்காகவே காத்திருந்தவராக. கிளம்பச் சொல்லி சைகை செய்தார், எதையுமே வாங்கி வராதது புத்தியில் உறைக்க. சாமி ஏதாவது சாப்பிட வாங்கி வரவா என்று கேட்டேன்,
பேடா,பேடா என்றவர் மீண்டும் கிளம்பச் சொல்லி சைகை செய்தார், பொதுவாக இந்த நிலையில் இருப்பவர்கள். யாரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், அவர்களின் உலகம் வேறானது,

முப்பதடி தூரத்தில் ஓரு கடை இருந்தது, தாகம் வாட்டி எடுக்க. தண்ணீர் குடிக்கலாம் என்று அந்த கடைக்குச் சென்றேன், அப்படியே இந்த சாமி பற்றி விபரங்கள் ஏதும் தெரியுமா என்று கடைக்காரரை கேட்க நினைத்தேன், அவர். தண்ணீர் பாட்டில். இல்ல. கூலா கோக்கும் மாசாவும் இருக்கு என்றார், மனதிற்குள் சிரிப்புதான் வந்தது, ஆள் அரவமற்ற பொட்டல் காட்டின் நடுவே உள்ள கடையில் குடிக்க தண்ணீர் இல்லைஆனால் கூலான மாசா என் கையில் திணிக்கப்பட்டது, வெள்ளைக்காரன் இருட்டில் சுதந்திரத்தை கொடுத்து. இப்பொழுது வேறு விதமாக நம்மை பிடித்துவிட்டான், ஹொசூர். நான் உங்கள் அடிமை.


சாமியை பற்றி கேட்டவுடன் சிறிது தள்ளியிருந்த டீக்கடையை நோக்கி கைகாட்டினார், அந்த டீக்கடைக்காரர்தான் சாமிய பாத்துக்கிறார். எது கேக்கனும்னாலும் அவர போய் கேளுங்க.டீக்கடை,(அவரின் பெயர். ஆழ்மனதில் அந்தர்தியானம் ஆகிவிட்டதால். அவர் டீக்கடைக்காரர்) விபரம் சொன்னதும். அப்படியா தம்பி. நான் சாமிக்கு சாப்பாடு குடுக்கதான் போய்ட்டு இருக்கேன், வாங்க பேசிட்டே போகலாம் என்றார்.

சாமி இந்த இடத்திற்கு வந்து கிட்டத்தட்ட மூணு வருசமாச்சு முதல்ல எல்லாம் பேசிட்டுதான் இருந்தார், இப்ப ஆளுங்க நிறைய வரவும். பேசறத நிப்பாட்டிடாரு, கன்னடம். இந்தி. தமிழ் நல்ல பேசுவாரு, இவர தேடி பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க, சில பேரை நிமிர்ந்து கூட பாக்கமாட்டாரு, சில பேரை கையை தூக்கி ஆசீர்வாதம் பண்ணுவாரு.அவ்வளவுதான், அவர புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தம்பி. குடிசைக்கு சற்றி தள்ளியிருக்கும் வேப்பமரத்தை சுட்டிகாட்டியவர். அந்த இடம் கொஞ்சம் பள்ளமா இருக்கு. அத மட்டும் நிரப்பிட்டன்னா அந்த மரத்துக்கு கீழயே ஒரு குடிசை போட்டு குடுத்துருவேன், சாமிக்கும் நல்ல காத்தோட்டமா இருக்கும் என்றார், இப்ப கூட சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், ஆனா தினமும் சாப்பிடமாட்டார், நினைச்சா வாங்கிப்பாரு. இல்ல எடுத்துட்டு போக சொல்லிடுவார் என்றார்.


குடிசை, அவர் நிமிர்ந்து மீண்டும் என்னை பார்த்தார், நீ இன்னும்போகலயா என்பது போல பார்வை, டீக்கடைக்காரர் தட்டில் சாதம் வைத்து. பயபக்தியுடன் ஒரு முதிர்ந்த குழந்தைக்கு குடுப்பது போல அவர் முன் நீட்டினார், சாமி தட்டை சிறிது நேரம் பார்த்து ஏன் சாமி பார்த்துட்டே இருக்கீங்க. எடுத்துங்க சாமி, டீக்கடைக்காரர் கெஞ்சுவது போல கேட்டார்,

நான் ஒரு முறை விழுந்து வணங்கினேன் திரும்பி நடக்கத் துவக்கினேன், மறுபடியும் ஓலக்கூர் ஜங்ஷன், வெயிலின் உக்கிரம் அதிகமாகி இருந்தது, எத்தனை முறை கைகாட்டியும். சென்னை செல்லும் பேருந்து எதுவும் அந்த ஜங்ஷனில் நிற்கவே இல்லை, மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது, காலைல இந்த சாமிய பார்க்க வரும் பொழுதுதான் ஏகப்பட்ட அலைச்சல். இப்ப திரும்பி போகும்பொழுதும் நம்ம அலைக்கழிக்க நினைக்கிறாரா . ஏழு எட்டுப் பேருந்துகள் அந்த ஜங்ஷனை கடந்து விட்டிருந்தது, களைப்புடன் நின்றிருக்கையில். அந்த கார் அருகில் வந்து நின்றது.
டிரைவர், சார். சென்னை போகணுமா. வாங்க சார் நான் டிராப் பண்றேன், அது ஓரு டிராவல்ஸ் கார், பாண்டிச்சேரில கஸ்டமரை விட்டுட்டு வரேன். இப்ப ப்ரீயதான் போய்ட்டு இருக்கேன், நீங்க வந்தீங்கன்னா, எனக்கு ஏதாவது டீ செலவுக்காவது கிடைக்கும், யோசிக்காம ஏறுங்க சார். நான் சென்னைதான் போறேன், ஏறினேன்.

செல்போன் ஆன் செய்தேன்,சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து கால். மனைவி, ஏங்க வீட்லதான் இருக்குறத இல்லை. போனையும் ஆப் பண்ணி வச்சிட்டு என்ன பண்றீங்க, சீக்கிரம் வீட்டுக்கு வர வழியைப் பாருங்க என்றாள்.

ஆனானப்பட்ட யோகானந்தரே இந்த ஜென்மத்தில் கங்கைகரையில் அலைந்து திரியும் பாக்யம் எனக்கு இல்லை எனும் பொழுது,வெயில், மழை, குளிர் என்றும் பாராமல் முழுக்க முழுக்க இறை நினைப்போடு வெட்ட வெளியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்க சிலருக்குத்தான் வாய்த்திருக்கிறது.


காரின் ஏசி காற்ற சில்லென்று முகத்தில் அறைய பயணம் தொடர்ந்தது.
Saturday, November 28, 2009

சாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - ஒன்றாம் பாகம்வாரத்துல ஓரு நாள் லீவு கிடைக்குது. பேசாம வீட்ல கிடந்து ரெஸ்ட் எடுக்கிறத விட்டுட்டு. சாமிய பார்க்கப்போறேன். சாஸ்தாவ பாக்க போறேன்று ஏன் அங்கிட்டும் இங்கிட்டும் லாந்திரியன்னு** தெரியலை, சொன்னாலும் கேக்கப் போறதில்லை. போய்ட்டு வாங்க என்று மனைவியின் ஆற்றாமையுடன் சென்னையில் இருந்து திண்டிவனம் பஸ் ஏறினேன்.


சூரியன் உதித்திருந்த காலை நேரம் பயணம் ஆரம்பித்தது, பேருந்து முனனோக்கிச் செல்ல. எண்ணங்கள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

யோகாவில் சிறிது ஆர்வமுண்டு, யோகம் பயில ஆரம்பித்த காலகட்டத்தில் தியானம் செய்ய கற்றுக் கொடுத்தவர் அறிமுகப்படுத்திய நூல், பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய -ஓரு யோகியின் சுயசரிதை- காதலியின் முத்ததிற்கு இணையாக. எத்தனை தடவை படித்தாலும் சலிக்காத .நூல்

அதில் அவர் சந்தித்த சித்தர்களை பற்றி எழுதி இருப்பார், அதை படித்து. அதைப்போன்ற சித்தர்களை காண அலைந்திருக்கிறேன், சிலரை சந்தித்தும இருக்கின்றேன், யோகப்பயிற்சியில் சுணக்கம் ஏற்படும்பொழுத. இவர்களின் சந்திப்பு ஊக்கமாக அமைந்து நமது பயிற்சியை தொடரச் செய்யும், தவிர அவர்களுக்கு கிடைத்த ஞானத்தில். அவர்கள் உணர்ந்த பிரம்மாணடத்தின் ஓரு துளியையாவது நமக்கு காட்டமாட்டார்களா. அதன் மூலமாவது கரை சேர்ந்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு.


இந்நிலையில் சாரு லதாவின் இணையத்தளத்தில் சாலையோரச் சாமியையும் உஸ்மான் சித்தரைப் பற்றியும் எழுதி இருந்தார், அவர்கள் இருவரின் விபரங்கள் அறியும் பொருட்டு அவருக்கு மெயில் அனுப்பினேன், அவரின் மொபைல் நம்பர் குடுத்து கால் பண்ணச சொல்லி ரிப்ளை அனுப்பியிருந்தார், இவரைப் பற்றிய எனது அனுமானங்களை பிறகு சொல்கிறேன், அவருக்கு கால் செய்து. சாமி இருக்கின்ற இடத்தின் அடையாளத்தையும். உஸ்மான் சித்தரின் தொலைபேசி எண்ணையும் வாங்கினேன்.

உண்மையான சித்தர்களும் ஞானிகளும் எந்த இடத்திலும் தங்கள் சித்துக்களை வெளிப்படுத்த மாட்டார்கள், காரணம் சித்துக்கள். யோக மார்க்கத்தில் செல்பவர்களை கீழ்நிலைக்கு இழுத்துவிடுவதோடு மட்டுமல்லாது அவர்களின் அஹங்காரத்தையும் தூண்டிவிடும் வலிமை கொண்டது, தவிர எண்ணமற்ற அவர்களது மனதில் சித்துக்கு இடமேது.

உஸ்மான் சித்தரின் போன் நம்பரை வாங்கிவிட்டேனே தவிர. சாலையோர சாமியே மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்ததால். உஸ்மான் சித்தரை தொடர்பு கொள்ளவே இல்லை. என் முன்னோர்கள் செய்த தவப்பலனால் என் அண்டர்வேர் உருவப்படாமல் காப்பாற்றப்பட்டது.


திண்டிவனம் பேருந்து நிலையம். இன்னும் சிறிது நேரத்தில் தகிக்கும் வெயிலில். பைபாஸ் ரோட்டில் சாமியைத் தேடி அலைந்து சோர்வடையப்போகிறேன் என்பதை உணராமல் பேருந்திலிருந்து மலர்ச்சியுடன் இறங்கினேன்.


சாருவின் இணையத்தளம் மூலமும். அவரிடம் பேசியதின் மூலமும் அறிந்து கொண்ட ஓரே அடையாளம். திண்டிவனம் பைபாஸ் ரோட்டில் உள்ள ரெட்டியார் மெஸ். தூரம் அதிகம் என்பதால் ஆட்டோ பிடித்தேன்.

திண்டிவனம் சென்னை சாலையில் பிரிகிறது. திருவண்ணாமலைக்கு செல்லும் பைபாஸ் ரோடு, இந்த சாலை பிரிகிற இடத்தில் இருந்து திண்டிவனம் பேருந்து நிலையம் ஏழு கிலோமீட்டர் இருக்கும் அந்த பைபாஸ் ரோடு. நேராக திண்டிவனத்திற்கு வெளியே செஞ்சி போகும் ரோட்டில் சென்று இணையும். இடையில் ஓரு லெவல் கிராஸிங்ககு வேறு, அந்த ரோடு என்னை சுற்றலில் விட்டது, ரெட்டியார்மெஸ் என் கண்ணில் படவே இல்லை.


சாருவிற்கு கால் பண்ணி கேட்பதற்கு ஓரு சிறு தயக்கம் இருந்தது, சாரு கோணல் பக்கங்கள் மூலம் எனக்கு அறிமுகமானவர், அவரின் எல்லா படைப்புகளையும் படித்தது இல்லை என்றாலும் அவரின் இணையத்தளத்தை தவறாது வாசிப்பேன்.நக்கலும் நையாண்டியுமான அவரது எழுத்து. ஏதாவது ஓரு விதத்தில் படிப்பவரின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வலிமை கொண்டது , அவரது ஆழ்ந்த வாசிப்பானுபவம் ஓவ்வொரு படைப்பிலும் பளிச்சிடும், அவரது எழுத்தின் மூலம். சாரு என்றாலே ஓரு முரட்டு பிம்பம்தான் உருவாகி இருந்தது, தயக்கத்தை உதறி அவருக்கு கால் பண்ணினேன், மிக மென்மையாக பேச்ககூடியவர், ஆட்டோவில்தான் போறீங்க ஆட்டோ டிரைவருக்கு ரெட்டியார் மெஸ்னு சொன்னாலே தெரியுமே என்றார், எதுக்கும் என் கூட வந்தவங்களை கேட்டுட்டு மறுபடியும் கால் பண்றேன் என்று கூறி கட் செய்தார்.

நான் டிரைவரிடம். ஏன் சார் ரெட்டியார் மெஸ்னா எல்லா டிரைவருக்கும் தெரியும்னு சொல்றாங்களே உங்களுக்கு தெரியாதா? அதற்கு ஆட்டோ டிரைவர் முழித்த முழி. திருடனை கூப்பிட்டு ராஜ முழி முழிக் சொன்ன மாதிரி இருந்தது, அவரை சொல்லி குற்றமில்லை. நமக்கு வாய்பது எல்லாம் அப்படித்தான் சென்னை ரோடு வழியாக ஆரம்பித்து. ஏறககுறைய செஞ்சி ரோட்டை அடைந்து விட்டோம்.


மறுபடியும் சாருவே கால் பண்ணினார், தமபி. நான் விசாரிச்சுட்டேன். ரெட்டியார் மெஸ் தான் அடையாளம். அதை கண்டுபிடிச்சிட்டீங்கன்னா,அதிலேருந்து ஓரு அஞ்சு நிமிச நடைதான் என்றவர் மேலும் சில அடையாளங்களையும் கூறி கட் செய்தார், சாருவை பற்றிய முரட்டு பிம்பம் மறையத் தொடங்கி இருந்தது.

கடைசியில். செஞ்சி ரோட்டில் மெஸ் வைத்திருக்கும் ஓருவர் ரெட்டியார் மெஸ்ஸிற்கு செல்லும் சரியான வழியை கூறினார், அது. நாங்கள் மறுபடியும் வந்த இடத்திற்கே செல்ல வேண்டும், அந்த பைபாஸ் ரோட்டில். நாங்கள் திருவண்ணாமலை ரோட்டில் திரும்பிவிட்டோம். மாறாக நேராக சென்னை செல்லும் ரோட்டில் சென்றால் ரெட்டியார் மெஸ் வரும், ஆட்டோ யூடர்ன் அடித்து வேகமெடுத்தது.

மீண்டும் சாருவிடம் இருந்து கால் வந்தது, தம்பி ரெம்ப நேரமா தேடிட்டு இருக்கீங்க. இடத்தை கண்டுபிடித்சவுடன் ஓரு கால் பண்ணி சொல்லுங்க. பார்த்துங்க தம்பி என்று கூறி கட் செய்தார் , பிம்பம் மறைந்துவிட்டிருந்தது.

சூரியன் உச்சி வானத்தை தொட முயற்சித்து கொண்டிருந்தது, ஓரு வழியாக ரெட்டியார் மெஸ் கண்ணுக்கு தெரிய. காத்திருந்த பசி வயிற்றை முழுவதுமாக ஆக்கிரமித்தது,தொடரும் .......

Thursday, November 12, 2009

மரண (மொக்கை) புதிர்

ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???


விடை கீழே....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நீங்க ஹாப்பி பெர்த்டே பாடிநீங்கனா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்..... நீங்க எஸ்கேப்..... இப்ப நான் எஸ்கேப்....

Tuesday, November 10, 2009