Monday, November 30, 2009

சாலையோரச் சாமியும் சாரு நிவேதாவும் - இரண்டாம் பாகம்

















ரெட்டியார் மெஸ் இருக்கும் இடம் ஓலக்கூர் ஜங்ஷன். ஓலக்கூர் ஜங்ஷன் திண்டிவனம் சென்னை ரோட்டில். திண்டிவனத்திற்கும் மேல் மருவத்தூருக்கும் இடையில் உள்ளது, ரெட்டியார் மெஸ். ஓரு போலீஸ் ஸ்டேஷன். மூன்று சிறு கடைகள். அவ்வப்பொழுது உணவுக்காகவும் ஓய்வுக்காகவும் நின்று செல்லும் லாரிகள். இவைகளை இணைப்பது ஓலக்கூர் ஜங்ஷன்.

ஆட்டோவை அனுப்பிவிட்டு. சாருவிற்கு செய்தி அனுப்பிவிட்டு செல் போனை ஆப் செய்தேன், மெஸ்ஸிலிருந்து சில நிமிட நடையில் தெரிந்தது அந்த குடிசை சாரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்த மாதிரி ஆங்கில வடிவான “U” வை குப்புற போட்டிருந்த மாதிரி ஓரு குடிசை. குடிசைக்கு வெளியே நன்கு பெருக்கி சுத்தம் பண்ணப்பட்டிருந்தது, அதன் முகப்பில் பூச்சரங்கள் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, உள்ளே “L” வடிவத்தில் சிறிய மரத்திலான கட்டில். அதில் அவர் அமர்ந்திருந்தார், தண்ணீரே பார்த்திராத தேகம். இடுப்பு வரை தொங்கும் ஜடா முடி. கருந்திராட்சை போன்று பளபளப்பான கண்கள். அவர், அவர் உடம்பையே உடையாக உடுத்திருந்தார். அவரின் கால்களுக்கு அருகில் ஓரு சிறு துண்டு. அவர் உடுத்திய இருந்ததாக இருக்க வேண்டும், நீ பார்க்க வந்த சாமிக்கு நான் எந்த விதத்திலும் குறைஞ்சவன் இல்லை என்பது போல பற்றற்று தரையில் கிடந்தது, அவர் இருந்தது போக இன்னும் இருவர் அந்த குடிசையினுள் அமரலாம், அவர் மெதுவாக தலை தூக்கிப் பார்த்தார், நீயா.. என்பது போன்ற பார்வை நான். அவர் அருகே அமர்ந்து கண்களை மூடினேன், கண்களை திறக்கும் பெழுது நேரம் கடந்துவிட்டிருந்தது, இதற்காகவே காத்திருந்தவராக. கிளம்பச் சொல்லி சைகை செய்தார், எதையுமே வாங்கி வராதது புத்தியில் உறைக்க. சாமி ஏதாவது சாப்பிட வாங்கி வரவா என்று கேட்டேன்,
பேடா,பேடா என்றவர் மீண்டும் கிளம்பச் சொல்லி சைகை செய்தார், பொதுவாக இந்த நிலையில் இருப்பவர்கள். யாரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், அவர்களின் உலகம் வேறானது,

முப்பதடி தூரத்தில் ஓரு கடை இருந்தது, தாகம் வாட்டி எடுக்க. தண்ணீர் குடிக்கலாம் என்று அந்த கடைக்குச் சென்றேன், அப்படியே இந்த சாமி பற்றி விபரங்கள் ஏதும் தெரியுமா என்று கடைக்காரரை கேட்க நினைத்தேன், அவர். தண்ணீர் பாட்டில். இல்ல. கூலா கோக்கும் மாசாவும் இருக்கு என்றார், மனதிற்குள் சிரிப்புதான் வந்தது, ஆள் அரவமற்ற பொட்டல் காட்டின் நடுவே உள்ள கடையில் குடிக்க தண்ணீர் இல்லைஆனால் கூலான மாசா என் கையில் திணிக்கப்பட்டது, வெள்ளைக்காரன் இருட்டில் சுதந்திரத்தை கொடுத்து. இப்பொழுது வேறு விதமாக நம்மை பிடித்துவிட்டான், ஹொசூர். நான் உங்கள் அடிமை.


சாமியை பற்றி கேட்டவுடன் சிறிது தள்ளியிருந்த டீக்கடையை நோக்கி கைகாட்டினார், அந்த டீக்கடைக்காரர்தான் சாமிய பாத்துக்கிறார். எது கேக்கனும்னாலும் அவர போய் கேளுங்க.டீக்கடை,(அவரின் பெயர். ஆழ்மனதில் அந்தர்தியானம் ஆகிவிட்டதால். அவர் டீக்கடைக்காரர்) விபரம் சொன்னதும். அப்படியா தம்பி. நான் சாமிக்கு சாப்பாடு குடுக்கதான் போய்ட்டு இருக்கேன், வாங்க பேசிட்டே போகலாம் என்றார்.

சாமி இந்த இடத்திற்கு வந்து கிட்டத்தட்ட மூணு வருசமாச்சு முதல்ல எல்லாம் பேசிட்டுதான் இருந்தார், இப்ப ஆளுங்க நிறைய வரவும். பேசறத நிப்பாட்டிடாரு, கன்னடம். இந்தி. தமிழ் நல்ல பேசுவாரு, இவர தேடி பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க, சில பேரை நிமிர்ந்து கூட பாக்கமாட்டாரு, சில பேரை கையை தூக்கி ஆசீர்வாதம் பண்ணுவாரு.அவ்வளவுதான், அவர புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தம்பி. குடிசைக்கு சற்றி தள்ளியிருக்கும் வேப்பமரத்தை சுட்டிகாட்டியவர். அந்த இடம் கொஞ்சம் பள்ளமா இருக்கு. அத மட்டும் நிரப்பிட்டன்னா அந்த மரத்துக்கு கீழயே ஒரு குடிசை போட்டு குடுத்துருவேன், சாமிக்கும் நல்ல காத்தோட்டமா இருக்கும் என்றார், இப்ப கூட சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், ஆனா தினமும் சாப்பிடமாட்டார், நினைச்சா வாங்கிப்பாரு. இல்ல எடுத்துட்டு போக சொல்லிடுவார் என்றார்.


குடிசை, அவர் நிமிர்ந்து மீண்டும் என்னை பார்த்தார், நீ இன்னும்போகலயா என்பது போல பார்வை, டீக்கடைக்காரர் தட்டில் சாதம் வைத்து. பயபக்தியுடன் ஒரு முதிர்ந்த குழந்தைக்கு குடுப்பது போல அவர் முன் நீட்டினார், சாமி தட்டை சிறிது நேரம் பார்த்து ஏன் சாமி பார்த்துட்டே இருக்கீங்க. எடுத்துங்க சாமி, டீக்கடைக்காரர் கெஞ்சுவது போல கேட்டார்,

நான் ஒரு முறை விழுந்து வணங்கினேன் திரும்பி நடக்கத் துவக்கினேன், மறுபடியும் ஓலக்கூர் ஜங்ஷன், வெயிலின் உக்கிரம் அதிகமாகி இருந்தது, எத்தனை முறை கைகாட்டியும். சென்னை செல்லும் பேருந்து எதுவும் அந்த ஜங்ஷனில் நிற்கவே இல்லை, மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது, காலைல இந்த சாமிய பார்க்க வரும் பொழுதுதான் ஏகப்பட்ட அலைச்சல். இப்ப திரும்பி போகும்பொழுதும் நம்ம அலைக்கழிக்க நினைக்கிறாரா . ஏழு எட்டுப் பேருந்துகள் அந்த ஜங்ஷனை கடந்து விட்டிருந்தது, களைப்புடன் நின்றிருக்கையில். அந்த கார் அருகில் வந்து நின்றது.
டிரைவர், சார். சென்னை போகணுமா. வாங்க சார் நான் டிராப் பண்றேன், அது ஓரு டிராவல்ஸ் கார், பாண்டிச்சேரில கஸ்டமரை விட்டுட்டு வரேன். இப்ப ப்ரீயதான் போய்ட்டு இருக்கேன், நீங்க வந்தீங்கன்னா, எனக்கு ஏதாவது டீ செலவுக்காவது கிடைக்கும், யோசிக்காம ஏறுங்க சார். நான் சென்னைதான் போறேன், ஏறினேன்.

செல்போன் ஆன் செய்தேன்,சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து கால். மனைவி, ஏங்க வீட்லதான் இருக்குறத இல்லை. போனையும் ஆப் பண்ணி வச்சிட்டு என்ன பண்றீங்க, சீக்கிரம் வீட்டுக்கு வர வழியைப் பாருங்க என்றாள்.

ஆனானப்பட்ட யோகானந்தரே இந்த ஜென்மத்தில் கங்கைகரையில் அலைந்து திரியும் பாக்யம் எனக்கு இல்லை எனும் பொழுது,வெயில், மழை, குளிர் என்றும் பாராமல் முழுக்க முழுக்க இறை நினைப்போடு வெட்ட வெளியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்க சிலருக்குத்தான் வாய்த்திருக்கிறது.


காரின் ஏசி காற்ற சில்லென்று முகத்தில் அறைய பயணம் தொடர்ந்தது.




9 comments:

டவுசர் பாண்டி... said...

மூனாம் பாகம் வருமுங்களா....?

எறும்பு said...

இல்ல அண்ணா, ரெண்டு பாகம்தான்... தங்கள் வருகைக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

well said..

ஸ்வாமி ஓம்கார் said...

//அவர், அவர் உடம்பையே உடையாக உடுத்திருந்தார். அவரின் கால்களுக்கு அருகில் ஓரு சிறு துண்டு. அவர் உடுத்திய இருந்ததாக இருக்க வேண்டும், நீ பார்க்க வந்த சாமிக்கு நான் எந்த விதத்திலும் குறைஞ்சவன் இல்லை என்பது போல பற்றற்று தரையில் கிடந்தது//

இவ்வரிகளை ரசித்தேன்.

அவரை தரிசித்தவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்களா மாறிடுவாங்களோ ? நானும் சந்திச்சு எழுத கத்துக்கறேன் :)

எறும்பு said...

வசந்த் தங்கள் வருகைக்கு நன்றி

எறும்பு said...

வசந்த் தங்கள் வருகைக்கு நன்றி

எறும்பு said...

//இவ்வரிகளை ரசித்தேன்.

அவரை தரிசித்தவர்கள் எல்லாம் பெரிய எழுத்தாளர்களா மாறிடுவாங்களோ ? நானும் சந்திச்சு எழுத கத்துக்கறேன்///

சுவாமிஜி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்...

வால்பையன் said...

இதுக்கு தான் போனிங்களா?

எறும்பு said...

//வால்பையன் said...

இதுக்கு தான் போனிங்களா?//

:-)

அண்ணா..சில கேள்விக்கு எப்படி பதில் சொல்றதனு தெரியாது...