Monday, May 24, 2010

ஒரு பயணம்.. ஒரு பதிவர் சந்திப்பு..

இரண்டு நாள் பயணமாக சொந்த ஊருக்கு (அம்பாசமுத்திரம்) சென்று இருந்தேன்.

காட்சி ஒன்று :-
கோயம்பேடு செல்ல பில்லர் பஸ் ஸ்டாப்பில் நின்று இருந்தேன். ஊனமுற்ற ஒருவர் பைக் ஓட்டி வந்து கொண்டிருந்தார். கூடுதலாக இருச்சக்ரம் பொருத்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா பைக். சிக்னலில் மஞ்சள் விளக்கு எரிந்ததும் அவர் வண்டியை நிறுத்த முயல, பின்புறம் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று அவரை தட்டி தூக்கியது. பைக்கின் பின் சக்கரங்கள் காரின் மீது ஏறி நிற்க அவர் எழுந்திருக்க முடியாமல் கீழே கிடந்தார். நான் ஓடிச்சென்று அவரை தூக்க வேறு சிலரும் ஓடி வந்தார்கள். காரின் டிரைவரும் இறங்கி வந்தார். பைக்கில் விழுந்தவருக்கு லேசான காயம். உதவிக்கு வந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் அளித்து, அங்கங்கே நெளிந்திருந்த அவரின் வண்டியை தட்டி சரி செய்தார்கள். இவ்வளவு களேபரம் அருகே நடந்து கொண்டிருக்க, காரில் உள்ளே உட்கார்ந்திருந்த முதலாளி கீழே இறங்கி வரவே இல்லை. பயபுள்ள ஏசி காத்து வீணாகிடும்னு நினைச்சுதோ என்னமோ கார் கண்ணாடிய கூட கீழே இறக்கி பாக்கவே இல்லை.
  **$%$%&** (இந்த இடத்துல உங்களுக்கு பிடிச்ச கெட்ட வார்த்தைய போட்டுக்குங்க)
*****************************************
காட்சி இரண்டு :-
  **$%$%&** .இதுவும் கெட்ட வார்த்தை ஆனால் இடம் வேறு.பில்லரில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில், நீண்ட நேரமாக சில்லறை பாக்கி தராத நடத்துனரை சக பயணி ஒருவர் வாழ்த்தி கொண்டிருந்தார். வாழ்த்தை கேட்டு பூரித்துப்போன நடத்துனர், இவ்வளவு பேசுற மயிரான் ஒழுங்கா சில்லறை கொண்டு வந்தா கொறஞ்சு போயிருவியா? **$%$%&**  சில்லறை இருந்தா கொடுக்க மாட்டோமா என்று பதில் வாழ்த்தில் இறங்கினார். சற்றே மனம் தளராத பயணி நடத்துனரை விட்டு அரசாங்கத்தை வாழ்த்த ஆரம்பித்தார். ங்... டிக்கெட்டு முதல்ல  மூணு ரூபா இருந்தது அப்புறம் அஞ்சு ரூபாயா மாத்துனீங்க அப்புறம் ஸ்பெஷல் பஸ்சு, எக்ஸ்பிரஸ் பஸ்சு, ஏசி பஸ்சு இப்படிதான வருது.. குறைஞ்ச டிக்கெட்டுக்கு எங்க பஸ் வருது? உருபடமாட்டீங்கடா நீங்க **$%$%&**. உடனே நடத்துனர் அதை ஏண்டா இங்க கேக்குற, போய் அய்யாவ கேளு என்றார். இந்த உரையாடலை கவனித்து கொண்டிருந்த முன் சீட்டிலிருந்த இருவர் நானும் இன்னைக்கு தீபாவளி வந்திரும் நாளைக்கு வந்திரும்ன்னு பாக்கிறேன் அந்த நாள் வரவே மாட்டேங்குதே, என்றனர்.ஒருவேளை ரெம்ப படிச்சவங்க போலிருக்கு, நல்ல எண்ணம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி விட்டு இறங்கினேன்.
*****************************************

காட்சி மூன்று :-
வாழ்க வளமுடன். இது நண்பனின் திருமண மேடை. சின்ன வயசுலேர்ந்து என் கூட ஒண்ணா சுத்துன சேக்காளி. வெளியே இருக்கிறவன் உள்ள வரதுக்கு ஆவலாய் பறகிறதும், உள்ள இருக்கிறவன் வெளிய போக முட்டி மோதுற கல்யாணம்கிற மாய வட்டத்துல மாட்டிகிட்டான்.வாழ்த்திட்டு மேடைய விட்டு கீழே இறங்கும் போது ஒருத்தர் தயங்கி தயங்கி பேச வந்தார். என் பேரு முத்துகுமார், அப்பல்லோ கம்புயுடேர்ல மார்கெட்டிங் மானேஜரா இருக்கேன்.ஒருநாள் நெட்ல அம்பாசமுதிரம்னு தேடும்போது உங்க ப்ளாக் கிடச்சுது. அப்பலேர்ந்து உங்க ப்ளாக தொடர்ந்து படிச்சுட்டு வரேன்.உங்க பேர வச்சு தெருவில விசாரிச்சப்ப நீங்கதான்னு சொன்னங்க. உங்க அப்பா நீங்க கல்யாணத்துக்கு வரீங்கன்னு சொன்னங்க, அதான் உங்களை பாக்கலாம்னு வந்தேன். நம்ம ஊர்காரர் நம்ம ஊரபத்தி எழுதும் போது சந்தோசமா இருக்கு, தொடர்ந்து எழுதுங்க என்றார். சற்று நேரம் திகைத்துத்தான் நின்றேன்.மொக்கை போடுறதுக்கே இப்படியா. இப்படி நாப்பது பேரு (யோவ் ஒருத்தன் தான்யா சொன்னான்) வந்து சொல்லும் போது நல்லாத்தான் இருக்கு ஆனா எவ்வளவு முக்கினாலும் எழுத்துதான் வரமாடேங்குது.
*****************************************

காட்சி நான்கு :-
 போன தடவை அந்த பிரபலம் ஊருக்கு வந்த போதே பார்க்க முயற்சித்தேன். யோவ் ஒரே தலைவலியா இருக்கு, பிளைட்டுல வந்தனா ஜெட்லாக்கா இருக்கு, அப்புறம் நானே கூப்பிடுறேன் என்று பார்க்காமலே எஸ்கேப் ஆகிட்டார். அவர் பிரபல பதிவர் துபாய் ராஜா (நானே ஓரமா உட்காந்து டீ ஆத்திட்டு இருக்கேன் என்னபோய் ஏன்யா இப்படி). இந்த முறை கால் செய்யும் போது, வீட்ல நானும் என் பொண்ணும் தான் இருக்கோம். அவ தூங்குறா, என் மனைவி வேலைக்கு போயிருக்கா. சரி அண்ணாச்சி உங்களால இப்ப வரமுடியாது அப்ப நான் அங்க வரேன். அதுவா நான் சொல்றனே, நீங்க வரீங்களா, இம்.. சரி நான் கால் பண்றனே என்று இழுத்தார். சரி அண்ணாச்சி ஏதும் சந்தேகம் இருந்தா சாமி படத்துக்கு முன்னாடி பூ கட்டி போட்டு பாருங்க என்று போனை வைத்தேன். பின்பு ஒரு நாலஞ்சு போன் காலுக்கு பிறகு நான் பஸ் ஏற ஒரு மணி நேரம் இருக்கும் போது, அவரே என் வீட்டிற்கு வந்தார். அப்படியே ஆற்றங்கரைக்கு சென்று ஒரு போட்டோ சூட் (புவிஇயல் ரெம்ப முக்கியம், அடுத்த தலைமுறைக்கு இந்த ஆற காண்பிக்க). யோவ் எங்க ஊரு ஆற விட இங்க நல்லா இருக்குயா என்றார். அவரு ஊரை தாண்டி வர்ற அதே ஆறுதான்,அங்கு குளித்த பெண்களை பார்த்தபின் சொன்னாரா என்று தெரியவில்லை. பின்பு ஊருக்கு வந்திருந்த நாஞ்சில் ப்ரதாப்புக்கும்,( அண்ணன் கல்யாணத்தில் பெண் பார்த்த கதையை எழுதுவாரா)  கண்ணாவிற்கும் போன் செய்து பேசினோம். லேட்டாய் வந்த பாவத்திற்கு என்னையும் என் லக்கேஜையும் சென்னை செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட்டார்.


***********************

17 comments:

butterfly Surya said...

அம்பாசமுத்திரம் அம்பானி எப்போ ரிலீஸ்..??

அமுதா கிருஷ்ணா said...

கல்யாணம் பற்றிய விளக்கம் நல்லாயிருக்கு தம்பி...

நாஞ்சில் பிரதாப் said...

போட்டோவுக்கு பின்னாடி ஒரு விளம்பரம் இருக்கே...
தரமான ஜவுளிகளுக்கு ராஜகோபால் டெக்ஸ்டைல்ஸ் தானே அது...


மொக்கை பதிவுகளக்கே ஒருத்தரு தேடிவந்தா விசாரிச்சாருன்னு உருப்படியா எழுத ஆரம்பிச்சா இந்த உலகம்என்னாகும் தலைவரே...?

ஆமா...அதுல யாரு எறும்பு...யாரு துபாய் ராசா...

மஞ்சூர் ராசா said...

நல்லாத்தான் எழுதறீங்க. வாழ்த்துகள்.

Cable Sankar said...

nallaathaane ezhuthure.. appuramenna..??

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணன் கல்யாணத்துல பெண் பார்த்த கதையா??? புதுசு புதுசா... கிளப்புறாய்ஙகளே..

எறும்பு said...

@சூர்யா - அண்ணே அத "பன்" பிக்சர்ஸ் வாங்கிடாங்க.நீங்க படிக்காமலே கமெண்ட் போட்டதை என் ஞான த்ரிஷ்டில பார்த்தேன். :)))

@ அமுதா கிருஷ்ணா - நன்றி

@ நாஞ்சில் பிராதாப் - பச்சை டீ ஷர்டுக்கு பக்கத்துல நிக்கிறவர்தான் துபாய் ராசா

@ மஞ்சூர் ராசா - நன்றி

@ கேபிள் சங்கர் - தலைவா நன்றி ஆனா எனகென்னமோ அப்படி தோனுச்சு.

எறும்பு said...

//போட்டோவுக்கு பின்னாடி ஒரு விளம்பரம் இருக்கே...
தரமான ஜவுளிகளுக்கு ராஜகோபால் டெக்ஸ்டைல்ஸ் தானே அது...//

அது அம்பை மாநகரின் பழமை வாய்ந்த சேட் ஜவுளிக்கடல்.. உங்க திருமணதிற்கு இந்த கடல்ல குளிச்சு துணி எடுக்க வருகை தாருங்கள்.

:)

எறும்பு said...

//அண்ணன் கல்யாணத்துல பெண் பார்த்த கதையா??? புதுசு புதுசா... கிளப்புறாய்ஙகளே..//

இப்படி எல்லாம் சொல்லிட்டா உண்மை ஆகிடாது.. நீங்க சொன்னத ரெகார்ட் பண்ணி வச்சுருக்கோம்.. உளவுத்துறைய ஏமாத்தமுடியாது.
:))

Chitra said...

வாசிக்கும் போதே ஒரே சிரிப்பு.... அப்படியே நம்ம ஊரு மணம், காத்து பட்டதுல சந்தோஷம்...... :-)

மயில்ராவணன் said...

//மொக்கை பதிவுகளக்கே ஒருத்தரு தேடிவந்தா விசாரிச்சாருன்னு உருப்படியா எழுத ஆரம்பிச்சா இந்த உலகம்என்னாகும் தலைவரே...?//

அப்பதேன் நாங்கெல்லாம் ‘நீங்க நல்லாதான எழுதுரீங்கன்னு சொல்லுவம்னு’!!! என்னா வெளம்பரம். நான் சொல்லமாட்டேன்.

கே.ஆர்.பி.செந்தில் said...

காட்சி ஒன்றும் , இரண்டும் அடிக்கடி நடக்கிற ஒன்றுதான் ...
என்னத்த சொல்ல போக்கத்தவன் ஆண்டா இப்படிதான் ...

மதன்செந்தில் said...

நல்லாவே மொக்கை போடறீங்க நண்பரே..


வாழ்த்துக்களுடன்
www.narumugai.com

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//ஆனா எவ்வளவு முக்கினாலும் எழுத்துதான் வரமாடேங்குது//

இதையே எழுத்தாக்கிய சாமர்த்தியம். நீங்க பொழச்சிப்பீங்கண்ணே! :)

துபாய் ராஜா said...

Namakku Yethukku intha Vilambaram ellam...... :))

butterfly Surya said...

சரி.. இப்போ படிச்சிட்டேன்..

sulthan said...

அய்யா தருமதொர, கொஞ்சம் தலைக்கு மேல புள்ளி வச்ச எழுத்துகள ரெண்டு வார்த்தகளுக்கு .எடையில போடுங்கய்யா புண்ணியம் கெடைக்கும்