Monday, April 5, 2010

நம்ம ஊரு... நல்ல ஊரு... அம்பை.. பாபநாசம்..

பாபநாசம்  அகஸ்தியர் அருவி - வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும்..


அகஸ்தியர் அருவி வேறொரு கோணத்தில். ஆளில்லா அருவி. ஹை ஜாலி.

அருவிக்கு செல்லும் பாதை 

  தூரத்தில் அருவியும் முன்னே தாமிரபரணி ஆறும்..


பாபநாசம் தலையணை


  தனிமை தவம் 
  நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்.பயபுள்ள பதிவு  போட எதுவும் கிடைக்கலேன்னா நம்மள போட்டோ பிடிச்சு போடுது.
இந்த போஸ் போதுமா? Mr .Photogenic
 புளிய மரத்திற்கு வேலி. சிவனின் திருமணத்தை காண பொதிகை மலை செல்லும் வழியில் அகத்தியர் இளைப்பாறிய மரமாம். என்னவானால் என்ன நீண்ட வருடங்களாக மரம் பாதுகாப்பாக இருக்கிறது.
  வண்டி மறிச்சி அம்மன் கோயில். கோயில் கொடை அன்று மட்டுமே இந்த மண் சிற்பம் பழுது பார்த்து அலங்காரம் செய்யப்படும். அது வரை இப்படி கால் நீட்டி இளைப்பாற வேண்டியதுதான்.
 இம் பலா சீசன் ஆரம்பிச்சாச்சு..
 கோயிலில் ஒரு பிரதோஷ காலம் 
அவதார் மரம் ?!?!
 பாபநாசம் சிவன் கோயில், மலையில் இருந்து...

****************

30 comments:

Vidhoosh(விதூஷ்) said...

அழகான படங்கள். அருமையான பயணமாகவே இருந்திருக்க வேண்டும். :)

அருவி மனதை அள்ளுகிறது.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சூப்பர் படங்கள்..:))

இன்னொரு ட்ரிப் அடிக்க ஏங்க வைத்துவிட்டீர்களே எறும்பாரே?

:)

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!!!
குளிர்ச்சியாக இருக்கிறது,
அடுத்த மாதம் குற்றாலம் போகலாம்
என நினைத்துள்ளேன், அப்படியே
பாபநாசம் விசிட் அடித்து விட வேண்டியதுதான்.

வித்யா said...

கொளுத்துற வெயிலுக்கு குளுகுளுன்னு இருக்கு படங்கள்:)

சங்கர் said...

ஊருக்கு போகணும், ம்ம்ம் (அழறேன்)

வானம்பாடிகள் said...

அந்தப் பாதைய நினைச்சாதான் அடிவயிறு கலங்குது அவ்வ்வ்வ்.

Chitra said...

வற்றாத அகத்தியர் அருவி, வற்றாத ஜீவநதி ........ புகைப்படங்கள் அத்தனையும் அருமை. வற்றாத ஊர் நினைவையும், எனக்கு கிளறி விட்டு விட்டது.
பகிர்வுக்கு நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

என்னைக்கி கூட்டிட்டுப் போறீங்க??

கண்ணா.. said...

படங்கள் அழகு...அதுவும் அகஸ்தியர் அருவி சான்ஸே.. இல்ல...


இப்பிடி படத்தை போட்டு ஊர் ஞாபகத்தை கிளறி விட்டதிற்கு மரியாதையா.... ப்ளைட் டிக்கடுக்கு காசு அனுப்பங்க... ஊருக்கு வரணும்...

shunmuga said...

mugathil black ula monkeys rare vagai monkeys. they are only seen in some places in india

துபாய் ராஜா said...

சொர்க்கமே என்ராலும் அது நம்மூரு போல வருமா...மனதை அள்ளும் அழகழகான, அருமையான படங்கள்.

மேலும் நண்பர்கள் அறிய,பாபநாசம் மலைக்குமேல் பாணதீர்த்தம் என்னும் அழகான அருவி உள்ளது.காரையாறு அணையில் அரைமணி நேரம் படகில் பயணம் செய்து போகவேண்டும். பயமில்லாத படகுப்பயணம். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்.

கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு எங்கள் ஊருக்கு வருகை தந்து மகிழுமாறு அனைத்து பதிவர்களையும் அம்பாசமுத்திரம் பதிவர்கள் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.

ஆடுமாடு said...

யு.ஜி பாபநாசம் காலேஜ்லதான்.

பாதி நாள் கட்-அடிச்சுட்டு, அகஸ்தியர் அருவி, இல்லைன்னா காரையாறுன்னு பொழுதை கழிச்சோம் துண்டு பீடியும் பீருமா.
ஞாபகமா இருக்கு அண்ணாச்சி. வாழ்த்துகள்.

//அம்பாசமுத்திரம் பதிவர்கள் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்//

துபாய் ராஜா அண்ணாச்சி, இதுல நான் இருக்கேனா?

துபாய் ராஜா said...

//ஆடுமாடு said... //
//அம்பாசமுத்திரம் பதிவர்கள் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்//

//துபாய் ராஜா அண்ணாச்சி, இதுல நான் இருக்கேனா?//

ஏ அண்ணாச்சி, என்ன இப்படி கேட்டுபுட்டிய... நம்ம ஊர்காரங்க எல்லார் சார்பாவும்தானே கூப்பிட்டுருக்கேன். உங்களை மாதிரி வயசாளியதானே எங்களுக்கு வழிகாட்டணும்.... :))

சேட்டைக்காரன் said...

கண்ணுக்குக் குளிர்ச்சி! :-)

பார்வையாளன் said...

அட .. இவ்வளவு மேட்டர் இருக்கா ..நன்றி...

இப்பதான் அந்த பக்கம் போயிட்டு வந்தேன்..ஆனா என்ன பாக்கிரதுனு தெரியாம , சும்மா வந்துட்டேன்... அடுத்து போகும்போது , பார்த்துட்டு என் எண்ணங்களை பகிர்ந்துகறேன்...

இதே போல பல இடங்களை அறிமுகம் செய்து வைங்க... சின்ன சின்ன , அதிகம் பிரபலம் இல்லாத இடமாக இருந்தாலும் சொல்லுங்க

தாராபுரத்தான் said...

நேரில் பார்க்கிறாப் போலவே இருக்குதுங்க...

கலாநேசன் said...

super photos

அது ஒரு கனாக் காலம் said...

அழகான படங்கள். So Cooooooool

jadam said...

எறும்பாரே!

இப்படி எல்லாம் அநியாயத்துக்கு ஆசையை உசுப்பேத்தக்ககூடாது.

கடும்வெயிலுல காஞ்சி கருவாடாயிருக்கப்போ,,,,,

தண்ணியிலே முழுசா முங்கி குளி்க்க புறந்தவங்க அங்கே....

வாளிதண்ணியிலே பாத்ருமில பாத்து தண்ணியை பாத்து....

உசுப்பேத்தல் நியாயமா??????

எறும்பு said...

@ விதூஷ் நன்றி
@ ஷங்கர் போகலாம்
@ சைவகொத்துப்பரோட்டா (இப்ப போனா குற்றாலத்துல தண்ணி இருக்காது,சீசன் ஆரம்பிக்கட்டும்)
@வித்யா நன்றி
@சங்கர் (லீவு போட்டு போய்ட்டு வாங்க)
@வானம்பாடிகள் (பயபடற அளவுக்கு எதுவும் இல்லீங்க, கொஞ்சம் புலி உண்டு அவ்வளவுதான் :)

எறும்பு said...

@சித்ரா நன்றி
@ அப்துல்லா (சீசன் ஆரம்பிக்கட்டும்)
@ கண்ணா (icici அக்கௌன்ட் நம்பர் குடுங்க, உங்கள எழுத்தாளர் ஆக்கி காட்டுறேன் :)
@ shunmuga நன்றி
@ துபாய் ராஜா நன்றி
@ ஆடுமாடு (அண்ணாச்சி நீங்க இல்லாமலா)
@ சேட்டைக்காரன் நன்றி
@ பார்வையாளன் நன்றி
@ தாராபுரத்தான் நன்றி அய்யா
@ கலாநேசன் நன்றி

எறும்பு said...

@ அது ஒரு கனாக்காலம் நன்றி
@ jadam (சீக்கிரம் ஊரு பக்கம் செட்டில் ஆகுங்க)நன்றி அனைவருக்கும்

:)

எறும்பு said...

@சித்ரா நன்றி
@ அப்துல்லா (சீசன் ஆரம்பிக்கட்டும்)
@ கண்ணா (icici அக்கௌன்ட் நம்பர் குடுங்க, உங்கள எழுத்தாளர் ஆக்கி காட்டுறேன் :)
@ shunmuga நன்றி
@ துபாய் ராஜா நன்றி
@ ஆடுமாடு (அண்ணாச்சி நீங்க இல்லாமலா)
@ சேட்டைக்காரன் நன்றி
@ பார்வையாளன் நன்றி
@ தாராபுரத்தான் நன்றி அய்யா
@ கலாநேசன் நன்றி
@ அது ஒரு கனாக்காலம் நன்றி
@ jadam (சீக்கிரம் ஊரு பக்கம் செட்டில் ஆகுங்க)

Priya said...

வாவ்... அனைத்து படங்களும் அருமையா இருக்கு!
இதுல Mr .Photogenic & அவதார் மரம் போட்டோஸ் டாப்!!!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

செம க்ளிக்கிங்க்ஸ்...

அசத்தீடிங்க.. அதுவும் அந்தக் குரங்குக் குடும்பம்... சூப்பர்..

நன்றி..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

G.Ganapathi said...

ஆக கண்ணுக்கு குளிர்ச்சியா அழகா இருக்குங்க

சிவராம்குமார் said...

சூப்பரப்பு! ஊருக்கு போன திருப்தி!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மஹா ஜனங்களே,

மேலும் அம்பை, கல்லிடை, பாபநாசம் குறித்த படங்களுக்கு

http://palaapattarai.blogspot.com/2010/02/blog-post_07.html

இங்கே வரவும்.

(எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்..!) :)