Monday, November 22, 2010

யோகியின் டைரி குறிப்பு

இப்பொழுது அதிகமாக கூகுள் பஸ்ஸில் கும்மி அடித்துகொண்டிருக்கிறேன். கும்மியின் ஊடே நான் கற்ற யோகா சம்பந்தமான விசயங்களை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன். நான் சந்தித்த யோகியின் அனுபவத்தை சிறு குறிப்புகளாக  தொடராக எழுதி கொண்டிருக்கிறேன்.  யோகா மற்றும் யோகா சம்பந்தமான பயிற்சிகளில் விருப்பம் உடையவர்கள் கூகுள் பஸ்ஸில் என்னுடன் பயணிக்கலாம்.ஆரோக்கியமாக விவாதிக்கலாம். என்னுடைய பஸ் முகவரி 

http://www.google.com/profiles/110320395747310358744#buzz நான் யோக வித்தை சொலி தரேன் கத்துக்கிறியா?

ஐயா நானா, எனக்கு எல்லா கெட்ட பழக்கமும் உண்டு தண்ணி அடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நான் வெஜ் சாப்பிடுவேன்,
யோகா பண்ணனும்னா இதெல்லாம் செய்யகூடாது இல்ல? நான் எப்படி?

எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவனுக்கு யோகா எதுக்கு? உன்ன மாதிரி ஆளுங்களுக்கு தான் தேவை. நான் சொல்லி குடுக்கிற வித்தைகள தொடர்ந்து செய். ஒருநாள் அந்த பழக்கத்தை எல்லாம் விடணும்னு உனக்கே தோணும்..வர்ற ஞாயிற்று கிழமை காலைல நாலு மணிக்கு என் வீட்டுக்கு வா. நாம அன்னிக்கு பாடத்த ஆரம்பிக்கலாம்.

இந்த கிழவனை நம்பி போகலாமா? ---------(1)

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணி. அந்த கிழவரின் வீட்டில் இருந்தேன். தர்ப்பையால் ஆன பாயை எடுத்து விரித்து அதில் அமர சொன்னார். அருகில் இருந்த விளக்கை ஏற்றிவிட்டு எதிரில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

நான் சில பேருக்குதான் இந்த யோகா வித்தையை கத்து கொடுத்திருக்கேன். இப்ப அது உனக்கு கிடைக்க போகுது. ரெம்ப கவனமா நான் சொல்லி கொடுகிறத கத்துக்க.உன் வாழ்கை முறையே மாறப்போகுது என் நெற்றிப்பொட்டில் விரலை வைத்து அழுத்தி, மாற்றி மூச்சு விடும் முறையை கூறினார். நான் சொல்ற வரை இந்த முறைல மூச்சு விடு.

நான்,ஐயா ஒரு சந்தேகம்.

வாய மூடு, நான் சொன்னத மட்டும் செய். வேற எதுவும் பேசக்கூடாது.

மூச்சுப்பயிற்சி தொடர்ந்தது.எப்பொழுதோ படித்த விஷயங்கள் ஞாபகம் வந்தது.
எதன் மேல் அமர்ந்து பயிற்சித்தால் என்ன பலன்?

மூங்கில் கீற்று - வறுமை
கல் - வியாதி
மண் - தூக்கம்
உடைந்த அல்லது அறுபட்ட பலகை மனை - நன்மை இல்லை
கோரை போன்ற புற்கள் - கீர்த்திநாசம்
பச்சிலை மன நடுக்கம் .
புலித்தோல் - செல்வம்
தர்பாசனம் - மோட்சம்
வெள்ளை வஸ்திரம் - தீமை இல்லை
சித்திராசனம் அல்லது இரத்தின கம்பளம் - நன்மை

தர்ப்பாசனத்தில் அமர்ந்து பயிற்சி செய்கிறேன்.

நான் மோட்சம் அடைவேனா --------(2)
3 comments:

வித்யா said...

எல்லாரும் பஸ்ல பதிவுக்கு விளம்பரம் பண்றோம். இங்க உல்டாவா?

எறும்பு said...

@ வித்யா
ஹி ஹி இது சும்மா ஒரு விளம்பரம். இதுனால என்ன பயன்னா, பாருங்க நான் இந்த தலைப்புல அஞ்சு பஸ் ஓட்டியாச்சு. அங்க கமெண்ட் போடாத நீங்க இங்க கமெண்ட் போடுறீங்க.அதான். :))

கிருஷ்ண பிரபு said...

பழசில் போட்டால் ஒரு ரெகார்ட் மாதிரி யூஸ் பண்ண முடியாது. Blog-ல் போடுங்கள்...

Try to recollect all those content in blog... I hope you will do it.