Tuesday, October 12, 2010

50'வது பதிவு - ஒரு பதிவரின் வாக்குமூலம்

போன வருடம் அக்டோபர் 12 இல் எனது முதல் பதிவை ஆரம்பித்தேன். இன்றோடு ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறேன். இந்த இடுகையில் இன்னொரு சிறப்பு, இது எனது அம்பதாவது இடுகை.(போதும் போதும் எவ்வளவு நேரம் கைதட்டுவீங்க). ஒரு வருடத்திற்கு அம்பது இடுகை என்பது, எனது இலக்கியப்பயனத்தில் மிகவும் குறைவுதான் இருந்தாலும் இந்த வருடம் இலக்கிய சேவையை ஆத்து ஆத்துன்னு ஆத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

சில பதிவர்கள் அவர்களின் அம்பதாவது, நூறாவது இடுகையில் சமுதாயத்தை திருத்த அல்லது இந்த பாழாய் போன சமுதாயத்திருக்கு மெசேஜ் சொல்லி இடுகை இடுவார்கள். நான் இதற்கு  முந்தைய நாற்பத்தி ஒன்பது இடுகையிலும் உருப்படியாய் ஒன்றும் எழுதவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே எனக்கு தெரியாமல் எதையாவது எழுதி இருந்தாலும்  அதை படித்து பயபுள்ளைங்க யாரும் திருந்தமாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் எனது மொக்கையை மேலும் இதிலே தொடர்கிறேன்.

நான்  இந்த பதிவுலகத்துக்கு வந்தது (இந்த உலகத்துக்கு ஏன் வந்தேன்னு இன்னும் புரியலை) நலிவுற்று கிடக்கும் இலக்கியத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம் என்கிற எண்ணத்தில்தான் என்றாலும் அப்படியே ஒத்த கருத்துள்ளவர்களை நண்பர்களாய் அடைவதும் ஒரு காரணம். இந்த வேளையிலே கடந்த ஒருவருடத்தில் நான் அடைந்த நண்பர்களை கண்டு பேரானந்தத்தில் துய்க்கிறேன்.(நல்லவேளை இன்னும் என் chat history எதுவும் வெளிவரவில்லை).போலவே இந்த ஒரு வருடத்தில் நான் வன்புணர்ச்சி, துகிலுரிதல், சொற்சித்திரம், புனைவு, நெளிஞ்ச சொம்பு, பெண்ணீயம் போன்ற நல்ல வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.  இந்த நேரத்தில் என் படைப்புக்களை படித்து விட்டு பின்தொடற்பவர்கள்(108 Followers) பின் தொடந்து விட்டு படிக்காதவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இடுகையுடன் பின்தொடற்பவர்கள் list  மற்றும் hits counter என்னுடைய தளத்தில் இருந்து நீக்கப்படுகிறது. இல்ல உங்க எழுத்துன்னா எனக்கு உசிரு மத்ததெல்லாம் மசிரு  உங்களை பின்தொடந்தே ஆவேன் இல்லையேல் சாவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் உங்கள் டேஷ்போர்டில் Blogs iam following இல் எனது URLai சேர்த்து கொள்ளவும். சரி ஹிட்ஸ் கவுன்டரை ஏன் எடுத்தீங்க என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே வந்த ஹிட்ஸ்களை வைத்து நான் மகாபலிபுரம் சாலையில் வாங்கிபோட்டிருக்கும் அம்பது ஏக்கர் நிலமே என் வாழ்க்கைக்கு போதும் என்ற காரணமே அன்றி வேறு இல்லை.


கடந்த ஒரு வருடமாக நீங்கள் தந்து வரும் பேராதரவுக்கு நன்றி. இந்த ஒரு வருடத்தில் இந்த இடுகைகளை படித்தவர் யாரவது ஒருத்தர் திருந்தி இருந்தாலும் கூட எங்கையோ தப்பு நடந்திருக்கு என்று அர்த்தம்.

ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.... மொக்கை தொடரும்

GET READY FOLKS!......


***

54 comments:

LK said...

vaalthukkal

♥ RomeO ♥ said...

வாழ்த்துக்கள் மற்றும் ... எப்பொழுது போல சிரித்து கொண்டே படித்தேன் .. மொக்கை அதிகமாக எழுதவும்.

எறும்பு said...

வாழ்த்துக்கள்..

எறும்பு said...

விகடன் மூலம் உங்கள் பதிவுக்கு வந்தேன். ஒரே நாளில் மூச்சை பிடித்து உங்கள் பதிவு முழுவதையும் படித்து முடித்தேன். தொடருங்கள் உங்கள் இலக்கிய சேவையை.

எறும்பு said...

Keep rocking man :)

ஸ்ரீ.... said...

50 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதப் போவதாகச் சொல்கிறீர்கள். எழுதுங்கள்.

ஸ்ரீ....

துளசி கோபால் said...

எறும்பு மெதுவாக ஊர்வது போலத்தான் தெரியுமே தவிர அதுக்கு வேகம் கூடுதல்தான்.

அரைச்சதத்துக்கு இனிய பாராட்டுகள். விரைவில் முழுச்சதமாக ஆக வாழ்த்துகின்றேன்.

வானம்பாடிகள் said...

எறும்பு ஊர கல்லும் தேயும்னா இங்க கவுண்டர் தேஞ்சு போச்சா..ரைட்டு. வாழ்த்துக்கள் ராஜகோபால்.
இப்படிக்கு
மொக்கை ஃபேக்டரி ஓனர் மற்றும் மொக்கப் பின்னூட்டத்திற்கு மொத்த குத்தகைதாரன்.:)))))

Vidhoosh said...

லீவு விட்டு இன்னிக்குத்தான் ஆபீஸ் வந்திருக்கேன். இன்னிக்குன்னு பார்த்து..

Vidhoosh said...

///எறும்பு said...

வாழ்த்துக்கள்..
October 12, 2010 10:01 AM ///


இதெல்லாம்.. ஒரு.... பொழப்பு... இலக்கிய இடியாப்பம்

மணிஜீ...... said...

மொக்கையை மொக்கையரே மோகிப்பர்

Chitra said...

ஒரு வருடம் - வாழ்த்துக்கள்!
ஐம்பதாவது பதிவு - பாராட்டுக்கள்!
அடிக்கடி எழுதுங்க..... தொடர்ந்து எழுதுங்க...

ஸ்வாமி ஓம்கார் said...

இலக்கிய பேரொளி, பதிவுலக புயல் எறும்புக்கு என் வாழ்த்துக்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பதிவைவிட உங்கள் பின்னூட்டங்கள் சூப்பர் :)

எம்.எம்.அப்துல்லா said...

எச்சூஸ்மி... நான் உள்ள வரலாமா??

எம்.எம்.அப்துல்லா said...

உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி!

ஒரே வருஷத்துல அதுவும் வெறும் 50 இடுகை மட்டுமே எழுதி எப்படி வெரி big பிரபல பதிவர் ஆனீங்க!?!? அந்த ரகசியம் என்ன??

முகிலன் said...

//உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி!

ஒரே வருஷத்துல அதுவும் வெறும் 50 இடுகை மட்டுமே எழுதி எப்படி வெரி big பிரபல பதிவர் ஆனீங்க!?!? அந்த ரகசியம் என்ன?//

அதுவும் அவிங்க ஜீப்ல ஏறாமலே..

முகிலன் said...

ஒரு வருசத்துல அம்பது பதிவா? அதுல எத்தன மீள் பதிவு? ;))))

முகிலன் said...

வோட்டுப்போட முடியலை..வெளிநடப்பு செய்யறேன்

கார்க்கி said...

பாஸ்.. சாதா எறும்பா இருந்த நீங்க கட்டெறும்பா வளர்ந்துட்டிங்க..

சமூகத்துக்கு ஏதாவ்து மெசெஜ் சொல்லுங்க பாஸ்>. அட மிஸ்டு காலாச்சும் கொடுங்க..

வாழ்த்துகள்

Vidhoosh said...

சரி ... இப்போ ஆரம்பிக்கலாம்...
அப்துல்லா...கார்கி, முகிலன் மற்றும் குழுவினர் வந்து குஜராத்தி கார்பா-வில் இணைந்து கொள்ளவும்

Vidhoosh said...

நைஜீரியா ராகவன் அண்ணனை அழைத்து வர ஆள் அனுப்புங்க..

Vidhoosh said...

மே மாசம் முதல் ஆகஸ்டு வரை ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் மட்டும் பதிவு வந்திருக்கே... அந்த மாசம் சாட் பண்ணிய வரலாறை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஸ்க்ரீம் பண்ணவா...

முகிலன் said...

ஆஜர்..

முகிலன் said...

//மே மாசம் முதல் ஆகஸ்டு வரை ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் மட்டும் பதிவு வந்திருக்கே... அந்த மாசம் சாட் பண்ணிய வரலாறை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஸ்க்ரீம் பண்ணவா.//

இப்பத்தான் ஆட்டம் சூடு பிடிக்குது.. ம் நடக்கட்டும்.

Vidhoosh said...

ஒரே ஒரு கவிதை ஒரே ஒரு கதை எழுதி இலக்கிய உலகில் பெரும் புரட்சி செயஞ்சுருக்கீங்க.. நீங்க ஏன் இன்னும் சாருக்கு கடுதாசி எழுதலை...

Vidhoosh said...

paypal பண்ணும் அராஜகம் பற்றி ஏதாவது புரட்சிகரமா பதிவு எல்துங்க.. ப்ளீஸ்

முகிலன் said...

அவரு டெய்லி சாருக்கு மூணு ஜெமோவுக்கு ரெண்டுனு கடுதாசி போட்டுட்டுத்தான் இருக்காரு. அவங்க தான் இன்னும் அத பப்ளிஷ் பண்ணக் காணோம். ஒரு வேள அண்ணன் கேட்ட இலக்கியக் கேள்விக்குப் பதில் தெரியாம முளிக்கிறாங்களோ என்னவோ?

Vidhoosh said...

108 Followers வந்ததும் பாலோவர் லிஸ்ட் தூக்கறேன்னு அப்பன் முருகனிடம் வேண்டுதலோ...

Vidhoosh said...

//இந்த உலகத்துக்கு ஏன் வந்தேன்னு இன்னும் புரியலை///

அதற்குள் ஏன் விரக்தி... வடை பெற்று போயிடலாமே .. நரி வந்து பாடச் சொல்லும் முன் கிளம்புங்க..

எறும்பு said...

தமிழ்மணத்தில் என்னால் ஓட்டு போடமுடியவில்லை. கள்ள ஓட்டும் போடா முடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி.

மரா said...

ha ha ha ......remba santhosama irukku................ aapidiye adutha oct 12 , 2011 Blog ah close pannitu bihar allathu uttar pradesh la yaraavathu oru sanniyasita poyi join panniravum :)

mikka thozamaiyundan
maraa

எறும்பு said...

//எம்.எம்.அப்துல்லா said...
உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி!

ஒரே வருஷத்துல அதுவும் வெறும் 50 இடுகை மட்டுமே எழுதி எப்படி வெரி big பிரபல பதிவர் ஆனீங்க!?!? அந்த ரகசியம் என்ன??//

அப்ப நான் பிரபல பதிவரா? thank you. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி

எறும்பு said...

ABDULLA Certified பிரபல பதிவர் எறும்பு

எறும்பு said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பதிவைவிட உங்கள் பின்னூட்டங்கள் சூப்பர் :)//

அப்ப பதிவு ரெம்ப கோராமையா இருக்குன்னு புரியுது :))

எறும்பு said...

முகிலன் said...
ஒரு வருசத்துல அம்பது பதிவா? அதுல எத்தன மீள் பதிவு? ;))))//

எதுவுமே மீள் பதிவு இல்லை. எல்லாமே FEEL பதிவுதான்

Vidhoosh said...

run for 50

எறும்பு said...

//paypal பண்ணும் அராஜகம் பற்றி ஏதாவது புரட்சிகரமா பதிவு எல்துங்க..//

Vidhoosh எனக்கு தெரிஞ்சவகளுக்கு ஏதாவது ஆச்சுன்னாதான் நான் பொங்குவேன். புரட்சி செய்வேன்.Paypal யாரு பால் விக்கிறவரா?

Vidhoosh said...

//மாயாவை பற்றிய எளிய விளக்கத்தை உங்க வாழ்கைலையே பாக்கலாம். வேற எதுவும் இல்லைங்க பெண்களோட ஞாபக சக்தி, குறிப்பா உங்க மனைவியோடது.

நீங்க, கடைக்கு போகும் போது என் அம்மா தலை வலிக்குதுன்னு மாத்திரை வாங்கிட்டு வர சொனாங்களேவாங்கிட்டு வந்தியா.. அய்யையோ மறந்துடங்க, இது உங்க மனைவி.//

மனைவியை மாத்திரை வாங்கி வரச்சொன்ன ஆணாதிக்கப் புழுவே ... உனக்கேன் இருக்கிறது ஒரு தலை, அதற்குள் இருக்கிறதா மூளை, மனைவி செய்வார் வீட்டில் வேலை, செய்து பார் அதை ஒரு காலை, போட்ருவாங்க உனக்கு ஒரு மாலை..

எறும்பு said...

நன்றி அறிவிப்பு..
நன்றி எல்கே
நன்றி ரோமியோ
நன்றி துளசி கோபால்
நன்றி வானம்பாடிகள்
நன்றி ஸ்ரீ
நன்றி விதூஷ்
நன்றி மணீஜி
நன்றி சுவாமி ஓம்கார்
நன்றி வெட்டிபேச்சு சித்ரா
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்ஜி.
நன்றி அப்துல்லா
நன்றி கார்க்கி
நன்றி முகிலன்
நன்றி மயில்ராவணன்

எறும்பு said...

///வீட்டில் வேலை, செய்து பார் அதை ஒரு காலை, போட்ருவாங்க உனக்கு ஒரு மாலை..////

ஏய் டண்டணக்கா ஏய் டனுக்கு னக்கா.. ஏய் இந்தா இந்தா

Vidhoosh said...

எஸ் எம் எஸ் அனுப்பின காசுக்காவது இதையே ஒவ்வொரு கம்மெண்டா போட்டிருந்தா அம்பது தாண்டி இருக்கும்...

மனசாட்சியே நண்பன் said...

தத்துபித்து வாழ்த்துக்கள் நண்பரே

எஸ்.கே said...

எனக்கு உங்க பிளாக் தலைப்பே ரொம்ப பிடிக்கும்! 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நீங்க மென்மேலும் எழுதி பல சிறப்புகள் அடைய வாழ்த்துக்கள்!

காவேரி கணேஷ் said...

வாழ்த்துக்கள் சகோ...

எம்.எம்.அப்துல்லா said...

// ABDULLA Certified பிரபல பதிவர் எறும்பு //


பிரபல big பதிவர் அப்படின்னு சொல்லணும் ஒ.கே!

அத்திரி said...

வாழ்த்துக்கள்.............டெம்ப்ளேட் மாத்துங்க ...படிகக் முடியல

அத்திரி said...

//இந்த ஒரு வருடத்தில் நான் வன்புணர்ச்சி, துகிலுரிதல், சொற்சித்திரம், புனைவு, நெளிஞ்ச சொம்பு, பெண்ணீயம் போன்ற நல்ல வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.//

ரொம்ப கம்மியா இருக்கு நீங்க கத்துக்கிட்டது.......இன்னும் எவ்ளோ இருக்கு தெரியுமா

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துகள் :)

shunmuga said...

இந்த உலகத்துக்கு வந்த காரணத்தை மகள் சிவஅஞ்சலியிடம் கேட்டா தெரியும் .
50 மொக்கைகளை படித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.பார்த்து ( படம் ) ரசித்த படிக்காதவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

dineshkumar said...

குறும்பான
பெயர் வைத்து
வெகுதூரம்
எறும்பாக
பயனித்துல்லீர்கள்

வாழ்த்த வயதில்லை வணக்கம் தலைவரே

ராமலக்ஷ்மி said...

நானும் கூட ஒரு வருட முடிவில் ஐம்பது, 2-வது வருடம் முடிந்து சதம்:)!

வாழ்த்துக்கள்!

எறும்பு said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றியோ நன்றி


ABDULLA Certified BIG பிரபல பதிவர் எறும்பு.

:)

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்..