Wednesday, February 10, 2010

காதலர் தினம் - சிறப்பு பதிவு

காதலிக்கும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

நாங்கெல்லாம் வருஷம் பூரா காதலிப்போம், எங்களுக்கு  எதுக்கு தனியா ஒரு நாளு. சொன்னா யாருக்காவது புரியுதா. இந்த வியாபாரிங்கதான் வாழ்த்து அட்டைய விக்கணும் பூவ விக்கணும், பொம்மைய விக்கனும்னு எதையாவது கிளப்பி விடுறாங்கன்னா இந்த பதிவர்கள் வேற சீசன் பதிவு போடுறாங்க.தவிர அந்தந்த சீசனுக்கு உண்டான பதிவு போடலைனா தமிழ்நாட்டை விட்டே தள்ளி வச்ருவாங்க போலிருக்கு.காதல் புதிரா, காதல் புனிதமா, காதல் சமூக அறிவியலா, காதல் கவிதையா எல்லா தலைப்பிலும் பலர்  பதிவு எழுதி ஆச்சு.  இதுல ஒரு பதிவர் (ஷங்கர் அல்ல ) எனக்கு கால் பண்ணி, காதலர் தினத்துக்கு நான் ஒரு கவிதை எழுதி வச்சுருக்கேன் அத போஸ்ட் பண்ண போறேன் அன்னிக்கு நீங்க என்ன போஸ்ட் பண்றீங்கன்னு கேட்டார். நமக்கு அந்த கவிதை கண்றாவிதான் வர மாட்டேங்குது. அதனால சும்மா சிரிச்சு வச்சேன்.எனக்கு தெரிஞ்சு காதல பத்தி அருமையா ஒரு நாட்டுப்புறப்பாட்டு இருக்கு. என்ன, கல்யாணத்திற்கு பிறகு மனைவி ஆனவள் என்னவெல்லாம் செய்யணும்னு காதலன் காதலிக்கு பாட்டின் மூலமா குறிப்பு எடுத்து கொடுப்பான். இந்த ப்ளாக்கிற்கு வாசகிகள் எண்ணிக்கை (யாருப்பா அது) அதிகம் இருப்பதால் இங்கே போஸ்ட் பண்ண முடியாது. தேவை ஆனவர்கள் தனியாக மெயில் அனுப்பவும்.(மெயில்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கிறதா வேண்டாமான்னு முடிவு செய்வேன்).

சரி நாம காதலிச்ச கதைய போடலாம்னா, வீட்ல பொஞ்சாதி இத படிக்கறதோட இல்லாம   என் ஊட்டுக்காரர் நெட்ல எழுதுறாரு நெட்ல எழுதுறாருன்னு, சொக்காரங்களுக்கு எல்லாம் கூவி கூவி சொல்லி ஆச்சு.அதனால அத எழுதி என்ன யோக்கியன்னு நம்பிகிட்டு இருக்குற பயபுள்ளைக நினைப்புல சாண்ட் அள்ளி போட விரும்பலை.

ஆகவே மகா ஜனங்களே நல்லா காதலியுங்க.. காதலிக்கிற கொஞ்ச காலம் மட்டும்தான் உங்களால சந்தோசமா இருக்க முடியும். அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ன சொல்றார்னா, பொண்ணுங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலன் மாறிடுவான்னு நினைப்பாங்கலாம் . அதே பசங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலி மாறாம அப்படியே இருப்பான்னு  நினைப்பாங்கலாம்.ஆனா ரெண்டு பேரு நினைப்பிலேயும் தண்ணி லாரி ஏறுமாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. வந்து எங்க ஜோதில ஐய்கியமாகுங்க.விட்டில் பூச்சிகளாய்...

காதலி கிடைக்காத வாலிப வயோதிக அன்பர்களே, அம்மாகிட்ட மம்மு வாங்கி சாப்டுட்டு,  கூகுளில் "valentine's day coloring pages for kids" அப்படின்னு டைப் பண்ணா கீழே உள்ள மாதிரி நிறைய படம் வரும்.அப்பா உதவியுடன் அத பிரிண்ட் அவுட் எடுத்து நல்லா கலர் பண்ணுங்க. சமத்தா கலர் பண்ணி மறுபடியும் அம்மாகிட்ட மம்மு வாங்கி சாப்பிட்டு படுத்து தூங்குங்க.  ங்கா...

பின் குறிப்பு :- 
இந்த சிறப்பு பதிவு முடிஞ்சது. அடுத்த சிறப்பு பதிவு மார்ச் மாசம் ஹோலி வருதாம்ல. அப்ப பாப்போம். பிப்ரவரி பதினாலுக்குதான் இன்னும் அஞ்சு நாள் இருக்கே, அதுக்குள்ள என்ன அவசரம்னு நீங்க கேக்கிறது புரியுது. வலது பக்கம் மேல பாருங்க. உங்களுக்கே புரியும்.இனிமே கேப்பீங்க?!?!. 
லேபிளுக்கும் பதிவுக்கும் நோ கனக்சன்.நல்லா இருங்க மக்கா.


25 comments:

கார்க்கி said...

:)))

ஷங்கர்.. said...

ஆனா ரெண்டு பேரு நினைப்பிலேயும் தண்ணி லாரி ஏறுமாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. வந்து எங்க ஜோதில ஐய்கியமாகுங்க.விட்டில் பூச்சிகளாய்..//

எதுக்கு கூட்ஸ் வண்டி ஏற்றதுக்கா..??

Vidhoosh said...

:)) வாழ்த்தைக் கூட இவ்ளோ காமெடியா சொல்ல முடியுமா? சூப்பர்.

-வித்யா

Sangkavi said...

:))))))

Chitra said...

சரி நாம காதலிச்ச கதைய போடலாம்னா, வீட்ல பொஞ்சாதி இத படிக்கறதோட இல்லாம என் ஊட்டுக்காரர் நெட்ல எழுதுறாரு நெட்ல எழுதுறாருன்னு, சொக்காரங்களுக்கு எல்லாம் கூவி கூவி சொல்லி ஆச்சு.அதனால அத எழுதி என்ன யோக்கியன்னு நம்பிகிட்டு இருக்குற பயபுள்ளைக நினைப்புல சாண்ட் அள்ளி போட விரும்பலை.

.............. ha,ha,ha,ha.... super!

வானம்பாடிகள் said...

:)).இவ்வளவு லொல்லு உதவாது:))))

பேநா மூடி said...

ரைட்டு..., நடத்துங்க

வித்யா said...

:))

சங்கர் said...

//அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ன சொல்றார்னா, பொண்ணுங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலன் மாறிடுவான்னு நினைப்பாங்கலாம் . அதே பசங்க கல்யாணம் பண்ணும் பொழுது கல்யாணத்திற்கு பிறகு காதலி மாறாம அப்படியே இருப்பான்னு நினைப்பாங்கலாம்.//


என்னெல்லாம் சொல்லி மனச தேத்திக்க வேண்டியிருக்கு, அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

butterfly Surya said...

நேர்ல பார்த்தா அப்பாவி. எழுத்தல அடப்பாவி..

தூள்.

நர்சிம் said...

சூப்பர்

குடந்தை அன்புமணி said...

நல்லாருக்கு... வித்தியாசமா...

எறும்பு said...

//கார்க்கி said...

:)))
//

சிரிப்பா.. லவ் மட்டும் பண்ணுங்க..ஊரே சிரிப்பா சிரிக்கும்..
:)

S Maharajan said...

நான் ரெண்டும்கும் காதல்,கல்யாணம்)
ட்ரை பண்ணுறேன் நடக்க மட்டேங்குந்தே

எறும்பு said...

நன்றி ஷங்கர்
நன்றி விதூஷ்
நன்றி சங்கவி
நன்றி வித்யா
நன்றி சித்ரா
நன்றி வானம்பாடிகள் (எல்லாம் உங்கள பாத்து கத்துகிட்டதுதான்)
நன்றி சங்கர் (எப்ப ஜோதில சேர்றீங்க)
நன்றி சூர்யா (நான் நிஜமாவே அப்பாவிதான்)
நன்றி நர்சிம்ஜி (ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்த்ருகீங்க, சந்தோசம்)
நன்றி அன்புமணி

:)

எறும்பு said...

// S Maharajan said...

நான் ரெண்டும்கும் காதல்,கல்யாணம்)
ட்ரை பண்ணுறேன் நடக்க மட்டேங்குந்தே//


விதி யார விட்டது..
:)

Thanks for the first comment

சைவகொத்துப்பரோட்டா said...

கவிதை அருமை :))

henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

துபாய் ராஜா said...

எறும்பு ரொம்ப குறும்பு... :))

உங்களுக்கு காமெடி நல்லா வருது... அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க.

||| Romeo ||| said...

\\சரி நாம காதலிச்ச கதைய போடலாம்னா, வீட்ல பொஞ்சாதி இத படிக்கறதோட இல்லாம என் ஊட்டுக்காரர் நெட்ல எழுதுறாரு நெட்ல எழுதுறாருன்னு, சொக்காரங்களுக்கு எல்லாம் கூவி கூவி சொல்லி ஆச்சு.அதனால அத எழுதி என்ன யோக்கியன்னு நம்பிகிட்டு இருக்குற பயபுள்ளைக நினைப்புல சாண்ட் அள்ளி போட விரும்பலை.//


இல்லைனா மட்டும் ஐயா ரொம்பபபபபபபப நல்லவர்..

அண்ணாமலையான் said...

எறும்பு இது கட்டெரும்புல்ல , காட்டெரும்பு.. அடி பின்றீங்க.

மயில்ராவணன் said...

present sir.....

சேட்டைக்காரன் said...

//சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. வந்து எங்க ஜோதில ஐய்கியமாகுங்க.விட்டில் பூச்சிகளாய்...//

கடைசியிலே ஒரு பன்ச் கொடுத்திருக்கீங்க பாருங்க! இந்த அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

ரோஸ்விக் said...

//நாங்கெல்லாம் வருஷம் பூரா காதலிப்போம், எங்களுக்கு எதுக்கு தனியா ஒரு நாளு. சொன்னா யாருக்காவது புரியுதா.//

அதானே...:-))

நக்கலு சாஸ்தி தான் மக்கா...

அகல்விளக்கு said...

//சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. வந்து எங்க ஜோதில ஐய்கியமாகுங்க.விட்டில் பூச்சிகளாய்...//

கடைசியா ஒரு டெட்லி பஞ்ச் கொடுத்திருக்கீங்களே.....