Thursday, March 25, 2010

செல்பேசி அபாயம்..


சமீபத்தில் நண்பர் ஒருவரின் உறவினர் பெண்ணின் மொபைலுக்கு  குறிப்பிட்ட நம்பரிலிருந்து ஆபாச மெசேஜ்கள் வர துவங்கியது. திருப்பி அந்த நம்பருக்கு கால் பண்ணினால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கும். நாளாக நாளாக இந்த தொல்லை அதிகரித்தது. அந்த பெண் அணிந்திருக்கும் உடையின் நிறத்தை குறிப்பிட்டும், அந்த பெண்ணின் அன்றைய அலங்காரத்தை குறிப்பிட்டும் மெசேஜ் வர ஆரம்பித்தது.எவனோ தெரிந்த ஒருவனோ அல்லது வீட்டுக்கு அருகில் இருப்பவனோதான் இந்த வேலையை செய்கிறான் என்ற முடிவுக்கு வந்தார்கள். எதிர் வீட்டுக்காரனுடன் முன்விரோதம் உண்டு. அவனாக கூட இருக்கலாம் என்று எண்ணினார்கள். பின்பு  ஒரு நண்பரின் உதவியுடன் அந்த செல்பேசி நம்பரின் விலாசத்தை , அந்த செல்பேசி நிறுவனத்திடம் இருந்து வாங்கினார்கள். அந்த முகவரி அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மற்றொரு ஊரில் உள்ளவரின் முகவரி. அங்கு சென்று விசாரித்ததில் அந்த நபர் ஒரு சித்தாள் வேலை பார்ப்பவர். சில மாதங்களுக்கு முன்பே அவரின் செல் போனை தொலைத்திருக்கிறார். தொலைந்த அவரின் நம்பரை முடக்கம்  செய்வதை பற்றிய வழிமுறைகள் எதுவும் தெரியாததால், தொலைந்த அவரின் செல்பேசியை பற்றிய எண்ணத்தை அவர் குழைக்கும் சிமிண்டின் ஊடாக வைத்து பூசிவிட்டு புது எண்ணும் செல்பேசியும் வாங்கிவிட்டார்.

இது வேலைக்கு ஆவாது என்று உணர்ந்த அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சும்மா சொல்லகூடாது நம்ம சைபர் க்ரைம், ரெண்டே நாளில் மெசேஜ் அனுப்பிய கயவாளிப்பயலை கொத்தாக அள்ளிவந்துவிட்டார்கள். 

அந்த நல்லவன், அந்த பெண் குடி இருக்கும் தெருவிலேயே செல் ரீ சார்ஜ் கடை நடத்துபவன். இந்தப்பெண் அந்த கடையில் தான்  ரீ சார்ஜ் செய்வாள். சும்மா கிடைத்த சித்தாளின் போனை வைத்து விளையாடி இருக்கிறான். ஆபாச மெசேஜ் அனுப்பிவிட்டு போனை ஆப் செய்து அடுத்த சிம்மை அதே போனில் போட்ட போது அந்த நம்பரை வைத்து அவனை தூக்கி வந்து விட்டார்கள்.

காவல் நிலையத்தில் வைத்து அவனை பிதுக்கியத்தில், இனி அவன் அம்மாவுக்கு மெசேஜ் அனுப்புவது கூட சந்தேகம்தான்.

இஸ்கூலுக்கு போகும் பிள்ளைகளே செல்பேசி கொண்டு போகும் காலம் இது. SMS, MMS வடிவில் அவர்களை தட்டி வீழ்த்த நிறைய பேர் அலைகிறார்கள். வளைத்து போட நினைப்பவர்களும் வக்கிரம் பிடித்தவர்களும் உண்டு.  நமக்குதான் ஏகப்பட்ட வேலை ஆனால் பொண்ணுங்களை கரெக்ட் பண்ண நினைக்கிற ஆளுங்களுக்கு அதுதான்  வேலையே. உஷாருங்கோ..

"ISSUED IN PUBLIC INTEREST " Use mobile Save paper - What an IDEA..



*************************

26 comments:

வரதராஜலு .பூ said...

//ஆனால் பொண்ணுங்களை கரெக்ட் பண்ண நினைக்கிற ஆளுங்களுக்கு அதுதான் வேலையே. உஷாருங்கோ..//

உஷாராயிடுவோம்.
நேற்று பட்டாபட்டி ஒரு அனுபத்தை ஷேர் செய்திருந்தார். இன்னைக்கி ஒண்ணு.

Cable சங்கர் said...

right நல்ல பதிவு

tsekar said...

Good.Keep it up

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வெறும் துப்பாக்கின்னு நினைச்சு ஸ்கிப் பண்ணாம பார்த்தா அதனுள் இருக்கும் செல் தொலைபேசியும் அதனால் வரும் ஆபத்து எவ்வளவு தீவிரம் என்பது புரியும். வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

//தொலைந்த அவரின் செல்பேசியை பற்றிய எண்ணத்தை அவர் குழைக்கும் சிமிண்டின் ஊடாக வைத்து பூசிவிட்டு //


எழுத்தாளர் ஆயிட்டீங்க. வாழ்த்துகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல பகிர்வு, நன்றி.

கண்ணா.. said...

நிறைய நண்பர்கள் சைபர் கிரைமை அணுக ஏன் தயங்குகிறார்கள்...?

ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் உள்ளதா ராஜகோபால்?

butterfly Surya said...

அவசியமான பதிவு.

செல்பேசியை பற்றிய எண்ணத்தை அவர் குழைக்கும் சிமிண்டின் ஊடாக வைத்து பூசிவிட்டு //////// ரசித்தேன்.

Unknown said...

நல்ல பகிர்வு..

எறும்பு said...

நன்றி வரதராஜுலு
நன்றி கேபில்ஜி
நன்றி rouse
நன்றி நாய்க்குட்டி மனசு
நன்றி அப்துல்லா அண்ணே
நன்றி சைவகொத்துபரோட்டா
நன்றி சூர்யாஜி
நன்றி திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).

எறும்பு said...

//ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் உள்ளதா ராஜகோபால்?//

நம்ம ஆளுங்களுக்கு போலீஸ் பற்றிய பிம்பம் இன்னும் மாறவில்லை. ஸ்டேஷன் போனாலே காசு செலவாகும் என்ற எண்ணம் உண்டு. எதுக்கு கம்ப்ளைன்ட் குடுபானே அவங்க பின்னாலையே அலைவானே என்ற எண்ணமும் உண்டு.

நன்றி

Romeoboy said...

எனக்கும் இந்த மாதிரி ஒரு தடவை பிரச்சனை வந்துச்சு. நான் போலீஸ்க்கு போகல ஒரு பெண்ணை விட்டு அவனிடம் பேச சொல்லி நண்பர்களுடம் அவன் இருப்பிடம் சென்று நாலு சாது சாத்தினேன். பொறம்போக்கு நாய்ங்க..

துபாய் ராஜா said...

வக்கிரம் பிடிச்ச நாயிங்க... கல்லால அடிச்சு கொல்லணும்...

Chitra said...

இப்படி தொல்லை கொடுப்பதால், என்ன சந்தோஷத்தை கண்டார்களோ? சீ......!

ரோஸ்விக் said...

புடிச்சு பிதுக்கீட்டாங்களா... வெரி குட். :-)

ஆடுமாடு said...

உருப்படியான விஷயம்.

நர்சிம் said...

நல்ல பதிவு

எம்.எம்.அப்துல்லா said...

//தொலைந்த அவரின் செல்பேசியை பற்றிய எண்ணத்தை அவர் குழைக்கும் சிமிண்டின் ஊடாக வைத்து பூசிவிட்டு //


எழுத்தாளர் ஆயிட்டீங்க. வாழ்த்துகள்.
//

ஆமென்.

shunmuga said...

CELL PESI MISSANAL ENNA VILAIUGAL ERPADUM ENDRU THERINDAPIN MIGAUM GAVANAMAGA IRRUPPARGAL

அன்புடன் அருணா said...

/சும்மா சொல்லகூடாது நம்ம சைபர் க்ரைம், ரெண்டே நாளில் மெசேஜ் அனுப்பிய கயவாளிப்பயலை கொத்தாக அள்ளிவந்துவிட்டார்கள். /
ஆஹா..இப்புடில்லாமா வேலை பார்க்குறாங்க!???

எறும்பு said...

நன்றி அனைவருக்கும்
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விடக் கூடாது. காதுல எறும்பை விடனும்(நான் உங்களை சொல்லலி பாஸ்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விடக் கூடாது. காதுல எறும்பை விடனும்(நான் உங்களை சொல்லலி பாஸ்)

Paleo God said...

எறும்புங்கறது உங்க பேரா? இல்ல படிச்சு வாங்கின பட்டமா?

ப்ரொபைல் போட்டோல இருக்கறது நீங்களா அண்ணே? :)

Ahamed irshad said...

எறும்புங்கறது உங்க பேரா? இல்ல படிச்சு வாங்கின பட்டமா?

ரிப்பீட்டு...

மரா said...

super message...wat an idea sirji!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி. நல்ல பகிர்வு.நல்ல பதிவு.