என்னுடைய இத்தனை வருட ஆன்மீக தேடலில் நிறைய ஆசிரமங்களையும் சாமியார்களையும் சந்திதாயிற்று. பெரும்பாலானவற்றில், ஆசனம் த்யானம் என்று நல்லபடியாக ஆரம்பித்து ஒருவரை காட்டி இவரை கும்பிடு, இவரை மட்டுமே கும்பிடு என்ற நிலைக்கு தள்ளி விடுகிறார்கள். அதைவிட சொல்லி தரும் ஆச்சார்யர்களின் ஈகோ நம்மளை ஆச்சர்யப்படுத்தும். என்ன இத்தனை வருஷம் சந்நியாசியா இருக்கேன்னு சொல்றாங்க இன்னும் ஈகோவை விடலியா என்று எண்ணத்தோன்றும்.
ஆனால் சந்நியாசி என்பவனும் சராசரி மனிதனே. அவர்களுக்கு உள்ளும் கர்வம் உண்டு காமம் உண்டு. மனதில் உள்ள அழுக்குகளை களைந்து பூரணம் ஆவதற்கு பிரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டும்.நிறையவே மன திடம் வேண்டும்.காவி உடை அணிந்தவர்கள் அனைவரும் சந்நியாசி இல்லை. ஆசிரமத்தில் சிறு பிரச்சினைக்கு அடித்து கொண்ட சன்யாசிகளை பார்த்திருக்கிறேன்.சன்னியாசி ஆன பிறகும் சன்யாசம் துறந்து இல்லறத்தில் நுழைந்தவர்களையும் தெரியும்.
என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சன்யாசம் என்பது ஒரு "Attitude". பற்றற்ற மனோ நிலை. அந்த நிலையில் இருக்க காவி உடுத்தனுமுன்னு அவசியம் இல்லை. ஒரு குடும்பஸ்தனாக இருந்து கொண்டே அந்த நிலையில் இருக்கலாம். இதற்கு நம்முடைய புராணத்தில் நிறைய கதைகள் உண்டு (தேடி படிங்க).
என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சன்யாசம் என்பது ஒரு "Attitude". பற்றற்ற மனோ நிலை. அந்த நிலையில் இருக்க காவி உடுத்தனுமுன்னு அவசியம் இல்லை. ஒரு குடும்பஸ்தனாக இருந்து கொண்டே அந்த நிலையில் இருக்கலாம். இதற்கு நம்முடைய புராணத்தில் நிறைய கதைகள் உண்டு (தேடி படிங்க).
கீழே உள்ளது ஒரு குருவுக்கும் சீடனுக்கும் நடந்த உரையாடல்.
(தேவை ஆனதை மட்டும் எழுதுகிறேன்).யார் அந்த குருன்னு கேக்காதிங்க. சொன்னாலும் அவர உங்களுக்கு தெரியாது. அவர எந்த தொலைகாட்சியிலும் பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.
(தேவை ஆனதை மட்டும் எழுதுகிறேன்).யார் அந்த குருன்னு கேக்காதிங்க. சொன்னாலும் அவர உங்களுக்கு தெரியாது. அவர எந்த தொலைகாட்சியிலும் பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.
சீடன் : ஒரு குடும்பஸ்தனுக்கு எந்த அளவுக்கு ஆன்மிகம் தேவைப்படும்?
குரு : நீ டீ குடிக்கும்பொழுது, ஒரு கப் டீக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்து கொள்வியோ அந்த அளவிற்கு போதும். நாள் பூரா யோகா பண்ணிக்கிட்டு பஜனை பாடிகிட்டு இறை நினைப்போட இருக்கணும்னா அதுக்கு நீ சன்யாசியா இருக்கனும். சம்சாரிக்கு அது தேவை இல்லை.
சீடன் : அப்ப யோகா என்றால் என்ன ?
குரு : "Yoga is perfection". நீ செய்யற எல்லா விசயத்திலயும் பெர்பெக்டா இருந்தா அதுவே போதும்.
சீடன் : புரியல.
குரு : நீ ஒரு அப்பாவுக்கு பையனா இருந்தா, பெத்தவங்களுக்கு செய்ய வேண்டியது செய். குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தா அவங்களுக்கு செய்ய வேண்டியது செய். இந்த உலகத்தில உனக்கு என்ன ரோல் குடுகப்பட்டிருக்கோ அத ஒழுங்கா செய். அது போதும். ஆனா செய்யும் போது எதையும் எதிர் பார்த்து அப்பாகிட அது கிடைக்கும் பையன் கிட்ட இது கிடைக்கும்ன்னு செய்யாத. எதிர்பார்ப்பில்லாம செய்.முழு மனசோட செய்.அதுதான் யோகா.
சீடன் : அப்ப உங்கள பாக்க வர்றது, ஆசிரமத்தில தங்கணும்னு நினைக்க கூடாதா?
குரு : எப்பவும் ஏன், என் லங்கோட பிடிச்சு சுத்திக்கிட்டு இருக்கணும்ன்னு நினைக்கிற?. என்ன ஒரு படிக்கல்லா நினைச்சு என் தோள் மேல மிதிச்சு ஏறிப்போ. ஆசிரமத்துக்கு வா, நான் சொல்லி தர்ற யோக பயிற்சிகளை கத்துக்க, வீட்டுக்கு போய் பயிற்சி பண்ணி பாரு.உனக்கு சொல்லி குடுத்தாச்சு.அடுத்தவங்க காத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கும் சொல்லி குடுக்கணும். சந்தேகம் இருந்தா லெட்டர் எழுது.குருவுக்கு பின்னாடி சீடனும், சீடனுக்கு பின்னாடி குருவும் வரணும்ன்னு நினைக்காத. நான் சொல்லி தந்தத மட்டும் பிடிச்சிக்க, என்னை இல்ல. நான் இன்னிக்கு இருப்பேன், நாளைக்கு இருக்க மாட்டேன். அப்ப யாரு பின்னாடி ஓடுவே?
பேச்சு தொடர்ந்தது..
சீடன் : எனக்கு வர்ற நோய்களை, கஷ்டங்களை என்ன பண்றது?
குரு : அது உன் கர்மா. நீதான் அனுபவிக்கணும்.நீ என்ன நினைச்ச குருகிட்ட போனா அவரு கைய தூக்கி ஆசிர்வாதம் பண்ணா உன் கஷ்டம் போய்டும்ன்னு நினைச்சியா?. உன்கிட்ட எல்லா கர்மாவையும் வாங்கி நான் எங்க போய் கழிக்கிறது? அப்படியே வாங்கினாலும், நீ மறுபடி கடைசி வரை யோக்கியமா இருப்பேன்னு என்ன நிச்சயம். மறுபடியும் சேற பூசிட்டு வந்து அத சுத்தம் பண்ண சொல்லுவ.போய் மக்களுக்கு சேவை பண்ணு. கர்மா கழியும்.அதுக்காக ஊரு ஊரா போக சொல்லலை. நீ சம்பாதிக்கிறதுல பத்து சதவீதம் உன்னுடையது இல்லைன்னு நினைச்சுக்க. கஷ்டபடுரவன்களுக்கு குடு. மனசால எப்பவும் நல்லதே நினை. நல்லதே நடக்கும்.
போன வாரமே எழுதனும்னு நினைச்சேன். கொஞ்சம் நித்ய அலை ஓய்ந்த பிறகு பதிவிடுகிறேன்.
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
********************************************************
43 comments:
wonderful:i know the guruji...he is nothing but....
ண்ணா..... யங்கியோ... போய்டீங்கணா...
மகனே யாரிடமும் நாம் சம்பாஷித்ததை சொல்லவேண்டாமென்று சொன்னேனே.. இபொழுது பார், எந்த்தனை ஏக்கர் வேண்டுமென்று மின் அஞ்சல்கள் வருகிறது.
சிவோஹம்.!
இந்த பதிவை படிக்கும் பொழுது நான் சமாதியில் இருந்தேன் ....
:)
Nice one...
:) வேறொன்றறியோம் பராபரமே..
அருமையான பதிவு.
//மனசால எப்பவும் நல்லதே நினை
நல்லதே நடக்கும்//
அருமை.
செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன்
வருவான்.
இந்த வார சூப்பர் ஹிட் மகுடம் ..பதிவு இதுதான்
எல்லா சாமியார்ட்டையும் ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு ஆனா,பினிசிங் சரியில்லையப்பா
///மின் அஞ்சல்கள் வருகிறது////
பொதுவிலே பேசப்டாதுன்னேன்...
நீ சம்பாதிக்கிறதுல பத்து சதவீதம் உன்னுடையது இல்லைன்னு நினைச்சுக்க. கஷ்டபடுரவன்களுக்கு குடு. மனசால எப்பவும் நல்லதே நினை. நல்லதே நடக்கும்.
........... :-) நல்லதே நடக்கும்.
// wonderful:i know the guruji...he is nothing but....
//
sshh..dont tell the secret. Thanks for the first comment in my blog..
:)
@D.R.Ashok : அண்ணா ரெம்ப நாளைக்கு பொறவு நம்ம கடைக்கு வந்த்ருகீங்க.. நன்றிங்க.
@SHANKAR : அத வாங்கி சீக்கிரம் வாழ்கையில் செட்டில் ஆகுங்க.. அப்படியே நம்ம கமிசனையும் வெட்டுங்க..
:)
@ Swami omkar : சிங்கை நிகழ்ச்சிகள் எப்படி போகுது? விரிவான பதிவை எதிர்பாக்கிறேன்
@ babu : thanks for the first comment.
@maduraikaaran நன்றி
@ vidhoosh நன்றி
@R.K.Sathishkumar மகுடம்னு சொல்லிட்டு வோட்டு போடாம போய்டீங்க :)
@gomathi arasu கண்டிப்பாக
//மைதீன் said...
எல்லா சாமியார்ட்டையும் ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு ஆனா,பினிசிங் சரியில்லையப்பா//
பட்டி டிங்கரிங் பாத்தா சரி ஆயிடுமா!?
:)
Thanks for the first comment in my blog
Thanks சித்ரா
நல்லாருக்கு.:-)
very intelligent.ungallukku vithyasama vivarama sinthikka theriyuthu. keep it up erumbu,welldone.
ஸ்வாமி எறும்பானந்தாகவுக்கு எனது ஆயிரம் நமஸ்காரம்..!
எனக்கொரு சந்தேகம் ஸ்வாமி..!
பெண் சாமியார்கள் மீது ஏன் இது மாதிரியான குற்றச்சாட்டுக்கள் எழுவதில்லை..!
அப்படியானால் காமத்தை அடக்குவதில் பெண்கள் ஆண்களைவிட அதிகம் புத்திசாலிகளோ..?
ஸ்வாமி விளக்கினால் நன்றாக இருக்கும்..!
//என்ன ஒரு படிக்கல்லா நினைச்சு என் தோள் மேல மிதிச்சு ஏறிப்போ.//
அல்லாத்தையும் புடிச்சு வக்காளி மிதிச்சி விட்டா சரியாப் பூடும்
//இந்த பதிவை படிக்கும் பொழுது நான் சமாதியில் இருந்தேன் ....//
ஹா ஹா ஹா ! உள்ளேயா வெளியவா ?
//பெண் சாமியார்கள் மீது ஏன் இது மாதிரியான குற்றச்சாட்டுக்கள் எழுவதில்லை..!//
வேறு மாதிரியாக எழும் ! இப்ப அம்மா பகவான் அண்டர் வேர் நாடா வெளிய வர ஆரமிச்சு இருக்கு ! புடிச்சு டர்ருன்னு இழுத்தா அம்புட்டும் வெளியவந்துரும்
////பெண் சாமியார்கள் மீது ஏன் இது மாதிரியான குற்றச்சாட்டுக்கள் எழுவதில்லை..!//
தெரியலை அண்ணே..
ஆண்களை compare பண்ணும் பொது அவங்க எண்ணிக்கை கம்மியா இருக்கு.
அதனாலையே குற்றச்சாட்டு சதவீதமும் கம்மியா இருக்குன்னு நினைக்கிறன்.
தன்யனானேன் ஸ்வாமி:)
அந்த குரு நீங்கதானா.........
//சைவகொத்துப்பரோட்டா said...
அந்த குரு நீங்கதானா.........
//
அந்த சிஷ்யன் நான்தான்..
:)
//வானம்பாடிகள் said...
தன்யனானேன் ஸ்வாமி:)///
எனது ஆசிகள்..
:)
எறும்பாரே..
குருவா என்ற கேள்விக்கு - சிஷ்யன் என பம்முவ்தும்..
ஸ்வாமி என்றவுடன், ஆசி வழங்குவதும் பார்த்தால்... பூ,புஷ்பம் நினைவுக்கு வருகிறது..::))
ஹும்ம்.. !
//எறும்பாரே..
குருவா என்ற கேள்விக்கு - சிஷ்யன் என பம்முவ்தும்..
ஸ்வாமி என்றவுடன், ஆசி வழங்குவதும் பார்த்தால்... பூ,புஷ்பம் நினைவுக்கு வருகிறது..::))
ஹும்ம்.. !//
குழந்தாய், ஆன்மீகத்தில் இதெல்லாம் சகஜமப்பா...
;)
சிவவாக்கியச் சித்தர் சொன்னதை சிம்பிளா சொல்லிட்டீங்கண்ணே! சூப்பர்!!
:)
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஸ்வாமி எறும்பானந்தாகவுக்கு எனது ஆயிரம் நமஸ்காரம்..!
எனக்கொரு சந்தேகம் ஸ்வாமி..!
பெண் சாமியார்கள் மீது ஏன் இது மாதிரியான குற்றச்சாட்டுக்கள் எழுவதில்லை..!
அப்படியானால் காமத்தை அடக்குவதில் பெண்கள் ஆண்களைவிட அதிகம் புத்திசாலிகளோ..?
ஸ்வாமி விளக்கினால் நன்றாக இருக்கும்..!
சொன்னால் புரிந்து கொள்ளும் வயதா உங்களுக்கு?
\\குரு : அது உன் கர்மா. நீதான் அனுபவிக்கணும்.நீ என்ன நினைச்ச குருகிட்ட போனா அவரு கைய தூக்கி ஆசிர்வாதம் பண்ணா உன் கஷ்டம் போய்டும்ன்னு நினைச்சியா?. உன்கிட்ட எல்லா கர்மாவையும் வாங்கி நான் எங்க போய் கழிக்கிறது? அப்படியே வாங்கினாலும், நீ மறுபடி கடைசி வரை யோக்கியமா இருப்பேன்னு என்ன நிச்சயம். மறுபடியும் சேற பூசிட்டு வந்து அத சுத்தம் பண்ண சொல்லுவ.போய் மக்களுக்கு சேவை பண்ணு. கர்மா கழியும்.அதுக்காக ஊரு ஊரா போக சொல்லலை. நீ சம்பாதிக்கிறதுல பத்து சதவீதம் உன்னுடையது இல்லைன்னு நினைச்சுக்க. கஷ்டபடுரவன்களுக்கு குடு. மனசால எப்பவும் நல்லதே நினை. நல்லதே நடக்கும\\
குரு என்ற வார்த்தைக்கு இவர் சொன்ன வார்த்தைகளே சாட்சியாய் நிற்கின்றன..
ஒவ்வொரு வார்த்தைகளும் சாதரண வார்த்தைகள் அல்ல
பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றி நண்பரே..
Gud post .. :)
நன்றி சேட்டைக்காரன்
நன்றி தண்டோரா
நன்றி அப்துல்லா
நன்றி நிகழ்காலத்தில்
நன்றி ரோமியோ
:)
சரியான கருத்து..
சரியான நேரம்..
நித்தி வர்றதுக்கு முன்னாடி எழுதி இருந்தீங்கன்ன.. உங்களுக்கு ஞான திருஷ்டி இருக்குன்னு ஒரு புரளியே கெளப்பி விட்டிருப்போம்... இந்நேரம்..
நன்றி..
//இந்த பதிவை படிக்கும் பொழுது நான் சமாதியில் இருந்தேன் ....
//
குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தோம்..
நன்றி.
ரொம்ப அருமையான இடுகை. அந்த குரு யாருன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்குமே!!!!
நல்ல பதிவு .மக்கள் உணரணுமே
NITHIYA(M) ANADAN(M)SHOULD BE PUNISHED FOR HIS ILLEGAL ACTIVITIES
Post a Comment