கர்ம யோகி:-
பிரம்ம மூர்த்தத்தில்
விழித்தெழு
ஆசனத்தில் உடம்பை
வளர்
பிராணாயாமத்தில்
தேர்ச்சி பெறு
பிரமச்சர்யத்தை
கைக் கொள்
மனம் அடக்கி
த்யானத்தில் அமர்
குண்டலினியை
குதித்து எழச்செய்.
முக்திக்கு முன்னூறு
வழிகள் இருக்க
சாப்பிடும்போது புரை ஏறிய
மனைவிக்கு ஓடிச்சென்று
தண்ணீர் எடுத்து தருவது
எளிமையாய் இருக்கிறது.
பின்குறிப்பு :- கவிஞர் மற்றும் நண்பர் பலாபட்டறை ஷங்கருக்கு dedicate பண்ணிக்கிறேன். (அதிகம் மியூசிக் சேனல் பார்ப்பதால் வந்த பழக்கம்)
எல்லாத்திலையும் கை வச்சு இப்ப கவிதைலையும் வாய வச்சாச்சு. நீங்க எவ்வளவோ தாங்கிடீங்க, இதையும் தாங்குங்க.
**********************************
32 comments:
கவிதை மாதிரி இருக்கு. அது போதுமே. வாழ்த்துக்கள்.
ரைட்டு ஏற்கனவே போட்டோவ போட்டு தாக்கியாச்சு..
இப்ப இதுவா,..:))
கூகிள் மாதவா இத கேக்க ஆளில்லையா..??
நான் நேத்தே SMS படிச்சிட்டு, மருந்து மாத்திரை எல்லாம் வாங்கி வச்சிட்டேன்
நிச்சயம் தொடரலா. வாழ்த்துக்கள் ஊறுவதற்கு(கல்லை தேய்ச்சிடாதீங்க!!)
கவிதைன்னு ஒத்துக்கலாம் போலயே:)
சீக்கிரம் நீங்களும் ரவுடியாயிடுங்க
மாதிரி இல்லேங்க...அதேதான் :)
ரொம்ப நல்லா இருக்குது.
தொடர்ந்து எழுதுங்க.
வாழ்த்துக்கள்!
இது நல்லாயிருக்குங்க... இப்படியே எழுதுங்க.....
எப்புடியெல்லாம் பிட்டப் போட்றாய்ங்கப்பா. உக்காந்து யோசிப்பாய்ங்களோ?:)) நல்லாருக்கு
வாழ்த்துக்கள்.
Enter கவிதைகள் மாதிரியும் பிளான் பண்ணுங்க..
என்ன சகா நீங்களும் என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தட்ட ஆரம்மிசிடிங்கள
சாப்பிடும்போது புரை ஏறிய
மனைவிக்கு ஓடிச்சென்று
தண்ணீர் எடுத்து தருவது
எளிமையாய் இருக்கிறது.//
இந்தக் காலத்தில இப்படியா?
இதுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து.
மிக நல்ல கவிதை இது.
முதல்?
ஆச்சர்யம்!
தொடர்ந்து எழுதுங்க மக்கா.
கொக்கென நினைத்தீரோ கொங்கணரே என்ற கதைபோலவா... :)
நாராயணா இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி :)
நல்லாருக்கு. சும்மா லுல்லாய்யிக்கு ஒரு எதிர்கவிதை...
//பிரம்ம மூர்த்தத்தில்
விழித்தெழு
ஆசனத்தில் உடம்பை
வளர்
பிராணாயாமத்தில்
தேர்ச்சி பெறு
பிரமச்சர்யத்தை
கைக் கொள்
மனம் அடக்கி
த்யானத்தில் அமர்
குண்டலினியை
குதித்து எழச்செய்.
முன்னூறு வழிகள் இருந்தாலும்
சாப்பிடும்போது புரை ஏறிய
மனைவியை ஓடிச்சென்று
உச்சந்தலையில் ஓங்கி அடித்து
முக்தி அடையச் செய்ய முனைப்படுகிறது முட்டாள் மனம்.//
கவிதை எழுதறது கஷ்டம். எதிர்க்கவிதை எழுதறது........ ரொம்ப, ரொம்ப கஷ்டம். :))
manaivi solle manthiram. kavithaiyil theriyuthu thanthiram. vaalththukkal.
Chitra said...
கவிதை மாதிரி இருக்கு. அது போதுமே.///
நல்ல வேலை மாதிரியாவது இருக்கே
//சங்கர் said...
நான் நேத்தே SMS படிச்சிட்டு, மருந்து மாத்திரை எல்லாம் வாங்கி வச்சிட்டேன்///
கவிதைய படிச்சதுக்கு பிறகு மாத்திரைக்கு வேலை இருந்திருக்காதே!!
// ||| Romeo ||| said...
என்ன சகா நீங்களும் என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தட்ட ஆரம்மிசிடிங்கள//
சில பேரு தட்டினத படிச்சேன். ஆகா செம தட்டு.. அதான் நானும் ஆரம்பிச்சாச்சு..
நன்றி ஷங்கர்
நன்றி தண்டோரா
நன்றி வித்யா (முதல் வருகைக்கு)
நன்றி வெள்ளிநிலா
நன்றி சுந்தரா (முதல் கம்மண்டிற்கு)
நன்றி சங்கவி
நன்றி வானம்பாடிகள்
நன்றி சூர்யாஜி
நன்றி நாய்க்குட்டி மனசு
நன்றி பா.ராஜாராம்
நன்றி சுவாமிஜி (என்னாலையும் தாங்க முடியலை, அதான் நானும் எழுத ஆரம்பிச்சுட்டேன்)
நன்றி ராஜன் (முதல் வருகைக்கு)
//நல்லாருக்கு. சும்மா லுல்லாய்யிக்கு ஒரு எதிர்கவிதை...//
கவிதைய விட இது நல்லாருக்கு. Mrs துபாய் ராஜா மெயில் ஐய்டி ப்ளீஸ்.. இத forward செய்யணும்..
:)
நன்றி மதுரை சரவணன் (முதல் வருகைக்கு)
// எறும்பு said...
//நல்லாருக்கு. சும்மா லுல்லாய்யிக்கு ஒரு எதிர்கவிதை...//
கவிதைய விட இது நல்லாருக்கு. Mrs துபாய் ராஜா மெயில் ஐய்டி ப்ளீஸ்.. இத forward செய்யணும்..
:)//
உங்களோட இந்த டீலிங் ரொம்ப பயப்படுத்துது பாஸ்.... :))
///மூர்த்தத்தில்///
muhoorththamo????
aana, kavithai (thaane!!)
///சாப்பிடும்போது புரை ஏறிய
மனைவியை ஓடிச்சென்று
உச்சந்தலையில் ஓங்கி அடித்து
முக்தி அடையச் செய்ய முனைப்படுகிறது முட்டாள் மனம்.//
mhuuum... appadiya seithi??
நல்ல இருக்கு நண்பரே வாழ்த்துக்கள் !
கவிதை...நல்ல இருக்கு
கவிதை...நல்ல இருக்கு
நல்லா இருக்கு...முதல்? நம்பவே முடியல...
நன்றி வித்யா
நன்றி கவிக்கிழவன்
நன்றி வா ஒ க சங்கர்
நன்றி செந்தில்நாதன்
intha rangela ponaa......romba ethir paakka aarmbichuruwom.keep it up.
சும்மாவா சொன்னாங்க? எறும்பு ஊரக் கல்லும் தேயுமுன்னு! கவிதைக்கு ஒரு புது இலக்கணமே எழுதிட்டீங்கண்ணே! இத்தோட விட்டிராதீங்க!
kavujaye thaan boss....ka ka ka ponga
Post a Comment