Tuesday, February 23, 2010

சின்ன சின்ன - 23-2-10

பதிவு போட்டு ரெண்டு வாரம் ஆச்சு. ஏன் இன்னும் பதிவு போடலைன்னு நேரிலும், தொலைபேசியிலும், மெயிலிலும்,எஸ் எம் எசிலும், கடிதம் எழுதியும் (எத்தனை!) கேட்ட பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறேன் என்றே தெரியவில்லை. நீங்கள் உங்கள் படைப்பை புத்தகமாக வெளியிடும் போது கண்டிப்பாக ஒரு புத்தகம் வாங்குவேன் என்று உறுதி கூறுகிறேன்.

 *************************************************************************
Food inc. பதிவர்கள் மயில் ராகவன், ஷங்கர் புண்ணியத்தில் இந்த படத்தை பார்க்க முடிந்தது. உணவு தயாரிப்பை பெரிய நிறுவனங்கள் எப்படி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்பதையும் நாம் உண்ணும் உணவு (குறிப்பாக இறைச்சி உணவுகள்) எவ்வாறு தயாரிக்கபடுகிறது என்ற கசப்பான உண்மையையும்  வெளிச்சம் போட்டு காட்டும் இந்த படம். ஏற்கனவே ஹாலிவுட் பாலாவும் மயில் ராவணனும் இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதி விட்டார்கள். அதையும் படித்து பாருங்கள்.
நமது பதிவுலகத்தில் FOOD என்று ஒரு பதிவர் இருக்கிறார். திருநெல்வேலியில் உணவு ஆய்வாளராக பணி ஆற்றும் இவர் உணவு கலப்படங்களை பற்றி நிறைய பதிவிட்டு இருக்கிறார். "அ"வில்  ஆரம்பித்து "டோ" வில் முடியும் ஒரு சமையல் பொடி. எல்லா உணவிலும் சுவைக்காக சேர்க்க சொல்லி விளம்பரம் பார்த்து இருப்பீர்கள். அதன் கெடுதலை சொல்லும் இந்த பதிவு. கொஞ்சம் வோட்டும் போட்டு உங்க ஆதரவை தெரிவியுங்கள்.

*************************************************************************
பதிவர்களுக்கு படைப்புகளுடன் வெள்ளிநிலா பத்திரிகை முதல் பதிப்பு வெளிவந்தது. அதில் அநேக பதிவர்களின் படைப்புகள் இருந்தாலும், ஈரோடு கதிர், யுவக்ருஷ்ணா மற்றும் நம்ம ஷங்கரின் படைப்புகள் குறிப்பிடபடவேண்டியவை. நீங்கள் இதுவரை உங்கள் பிரதிக்கு சொல்லவில்லை என்றால் உங்கள் முகவரியுடன் சர்புதீனுக்கு ஒரு மெயில் அனுப்பவும். இதன் விபரங்களை அணுக இங்கு செல்லவும். 
ஆனாலும் அவருக்கு தைரியம் அதிகம்தான், எனக்கே போன் பண்ணி என்னுடைய படைப்பை அனுப்ப சொல்லி கேட்கிறார். வெள்ளிநிலாவின் வளர்ச்சியை மனதில் கொண்டு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டேன்.

*************************************************************************
 காலை நேரம் அனைத்து தொலைகாட்சியிலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் விளம்பர நிகழ்ச்சிகள் நடக்கும். சித்த வைத்தியம், யுனானி, காது கேட்பதற்கு சிகிச்சை, மந்திர எந்திர தாயத்து விற்பனை, முடியாமைக்கு சிகிச்சை, முடவர்கள் நடக்கிறார்கள். பொழுது போகாமல் இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்த்தீர்களானால் நல்ல நகைச்சுவையாக பொழுது போகும். இதில் ஒருவர் சிதம்பர ரகசியத்தை சாப்ட்வேராக விற்கிறார். அவர் குடுக்கும் உலோகத்தை உங்கள் அருகில் வைத்திருந்தால் உங்கள் உடல் சக்கரங்கள் ஒழுங்காக சுத்துமாம். நல்லா சுத்துறாங்க. விருப்பம் இருந்தால் முயற்சிக்கவும்.
*************************************************************************
 அந்த பெரியவருக்கு புகழ்ச்சி என்றால் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வயதிலும் நீண்ட நேரம் உட்கார்ந்து நடிகைகள் தங்கள் இடுப்பு மற்றும் இன்ன பிற அங்கங்களை அசைப்பதை ஆனந்தமாக பார்கிறார். இது ஏதாவது மன வியாதியா என்று நம்ம மனநல மருத்துவர் பதிவர் தான் சொல்ல வேண்டும். எப்படியும் ஒரு அய்நூறு பாராட்டு விழாவது நடந்திருக்கும். அதிக பாராட்டு விழா கண்டவர் என்று யாரவது பாராட்டு விழா எடுக்காம இருந்தா சரி. 

*************************************************************************

தமிழ்மணம் முகப்பில் தெரிய நாலு வோட்டில் இருந்து ஏழு வோட்டாக மாற்றிவிட்டது. நாலு வோட்டு கிடைக்கவே நாய் படாத பாடு படவேண்டி இருந்தது.இப்ப ஏழு வோட்டு வேற. ஏழுகொண்டலவாடா நீதான் என்னைபோல இளைய பதிவர்களை காப்பாற்ற வேண்டும். நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ அவர்கள் எழுதுவதை குப்பை என்றோ கூறமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.

*************************************************************************

22 comments:

Vidhoosh said...

form-முக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள். சின்ன சின்ன-வில் பெரிய பெரிய விஷயங்கள். :)) தொகுப்பு அருமை.

/////நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ///// என்னவோ போடா மாதவா...

வெள்ளிநிலா said...

தமிழ்மணம் முகப்பில் தெரிய நாலு வோட்டில் இருந்து ஏழு வோட்டாக மாற்றிவிட்டது. நாலு வோட்டு கிடைக்கவே நாய் படாத பாடு படவேண்டி இருந்தது.இப்ப ஏழு வோட்டு வேற. ஏழுகொண்டலவாடா நீதான் என்னைபோல இளைய பதிவர்களை காப்பாற்ற வேண்டும். நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ அவர்கள் எழுதுவதை குப்பை என்றோ கூறமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.

ha ha ha ha,,,

கார்க்கிபவா said...

பிரபல பதிவரே, இடையிடையே வரும் ** நிறைய இருக்கு பாருங்க.. படிக்கும் போது இடைஞ்சலா இருக்கு

சென்ஷி said...

//நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ அவர்கள் எழுதுவதை குப்பை என்றோ கூறமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.//

:)

voted

vasu balaji said...

:))

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு :))

Chitra said...

/////நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ அவர்கள் எழுதுவதை குப்பை என்றோ கூறமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.////
என்ன தன்னடக்கம்!!! பிரபலம் ஆன பின்னும் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கீங்களே .........!

சங்கர் said...

நான் ஆறாவது வோட்டு

சங்கர் said...

வீட்டுக்கு போனதுக்கப்புறம் ஏழாவதை போடுறேன் :)

சங்கர் said...

பினா.பனா போட்டாதான் ஒரு ஓட்டு விழுமாம், நம்மள மாதிரி மொனா.பனாக்கு எல்லாம் அரை ஓட்டு தானாமே, நிஜமா ??

எம்.எம்.அப்துல்லா said...

படிச்சாச்சு :)

Radhakrishnan said...

எறும்பு ஊற கல்லும் தேயும். உங்கள் எழுத்துக்கென தனிக்கூட்டம் உருவாகிறது, வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

//V.Radhakrishnan said...
எறும்பு ஊற கல்லும் தேயும். உங்கள் எழுத்துக்கென தனிக்கூட்டம் உருவாகிறது, வாழ்த்துகள்//

இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே
... :))

Paleo God said...

present SIRRRRRRRRRRR:))

மீ 8

அகநாழிகை said...

சரி, நீங்களும் ரவுடிதான் ஒத்துக்கறோம். நல்லா எழுதியிருக்கீங்க.

க.பாலாசி said...

//முடவர்கள்//

:-((

டக்கால்டி said...

உங்களது வலைப்பூவின் பெயரை சரியாகத் தான் வெச்சுருக்கீங்க...
எழுத்தில் சுறுசுறுப்பு இருக்குங்க.

பஹ்ரைன் பாபா said...

" நான் பிரபலமானால் புதிய பதிவர்களை மொக்கை என்றோ அவர்கள் எழுதுவதை குப்பை என்றோ கூறமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்"

அண்ணே அப்டி சொல்லாதீங்கன்னேன்..அப்டி சொல்லாதீங்க.. இப்போவே நீங்க பெரிய பதிவர்தான்னேன்..

PPattian said...

//ஆனாலும் அவருக்கு தைரியம் அதிகம்தான், எனக்கே போன் பண்ணி என்னுடைய படைப்பை அனுப்ப சொல்லி கேட்கிறார். வெள்ளிநிலாவின் வளர்ச்சியை மனதில் கொண்டு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டேன்.
//

கலக்கல் :)

FOOD அவர்களின் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளவை..

butterfly Surya said...

ஆகா. Welcome back.

எறும்பு said...

வந்து இருந்து வாசித்து ஓட்டளித்த அனைவர்க்கும் நன்றி
:)

Vidhya Chandrasekaran said...

ஆட்டோ வந்துச்சா இல்லையா??