Monday, November 1, 2010

சின்ன சின்ன (Buzz collection)

கஸ்டமருக்கு நான் அனுப்பிய மெயில்.
Dear sir,
           Kindly refer the attached html mail.Already we have picked up the equipments from your place.
regards,
RG.
அனுப்பிய கொஞ்ச நேரத்தில் கஷ்டமரிடம் இருந்து போன்.
சார் அட்டாச்மென்ட் எதுவும் இல்லையே?
இல்ல சார், ஒரு html file இருக்குமே?
அது இருக்கு ஆனா attachment எதுவும் இல்லையே?
இல்ல சார், அந்த html fila IEல ஓபன் பண்ணுங்க.
ஓ சரி சரி..
பேசியவர் IT மேனேஜர்
ஒரு வேளை அட்டாச்மெண்டா நானே  குத்துகாலிட்டு உட்கார்ந்திருப்பேன்னு எதிர்பார்த்தாரோ என்னமோ..


****
நண்பர் குடுத்தாரென்று இறைஅன்பு எழுதிய "சாகாவரம்" நாவல் வாசித்து கொண்டிருக்கிறேன். இது அவரின் இரண்டாவது நாவலாம். மரணத்தை பற்றிய கேள்விகளோடு நகர்கிறது. அடுத்தடுத்து அறிமுகமாகும் கேரக்டர்கள் உடனுக்குடனே இறந்து விடுகிறார்கள். படிக்கும்போதே நானும் மண்டையை போட்டு விடுவேனோ என்று மரண பயம் ஏற்படுகிறது.

*********
தூக்கத்தில் முழித்து, மறுபடியும் தூங்க தொடங்குவதின் மூலம் கனவினை விட்ட இடத்தில இருந்து தொடர முடியுமா?!
**** 
"பரத்தை கூற்று " புத்தக வெளியீடுக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். காற்று புக இடம் இல்லாமல் வேர்த்து வழிந்து கொண்டிருந்தது. எனக்கு முன் நின்று கொண்டிருந்தவர் சாருவின் பேச்சை சுவாரசியமாய் கேட்டு கொண்டிருந்தார். சாரு, " இப்ப ஒரு புத்தகம் எழுதி கொண்டுருக்கிறேன், அது என் வாழ்கையில் இரண்டு வருடம் ஆண் விபச்சாரியாய் இருக்கும்பொழுது நடந்த சம்பவங்களை பற்றியது*" என்றவுடன், எனக்கு முன் நின்றிருந்தவர் கெக்கேபிக்கே என்று சிரித்து இறங்கி ஓடிவிட்டார்.
 
***** எதிலோ  படித்தது.ஆபிசில் இருந்து வீடு திரும்பிய கணவன் திடுக்கிட்டான். தெருப்புழுதியில் அவனுடைய பிள்ளை புரண்டு விளையாடிக்கொண்டிருந்தான். வாசல் கதவு திறந்து கிடந்தது. பீரோ கதவும்தான். அடுப்பில் எதுவோ தீய்ந்து கொண்டிருந்தது. குழாய் மூடப்படாததால் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. டைனிங் மேஜை மீது டிபன் பாத்திரங்கள் சாப்பிட்ட மீதியுடன் கிடந்தது. மேஜை விளக்கு கவிழ்ந்து விழுந்திருந்தது. டிவீ பயங்கரமாய் அலறிக்கொண்டிருந்தது. ப்ரிட்ஜ் கதவு திறந்திருக்க டப்பாக்கள் கொட்டி இருந்தன. வாஷ் பேசினில் சோப்பு பெட்டி தண்ணீரில் ஊறிக் கொண்டிருந்தது.
உள்ளே போனான். படுக்கையில் அவனுடைய மனைவி உல்லாசமாய் சாய்ந்து கொண்டு சாவகாசமாய் ஒரு கதைப்புத்தகத்தை படித்து கொண்டிருந்தாள். கணவனை கண்டதும் புன்னகை செய்தாள்.
அவனுக்கு ஒரே ஆத்திரம். என்ன ஆச்சு இன்று? என்று கத்தினான்.
ஒன்றும் ஆகவில்லை. தினம் ஆபிசில் இருந்து வந்ததும் " நாள் பூரா இன்னிக்கு என்னதான் பண்ணினே ? என்று நீங்க கேப்பீங்க இல்லையா? என்றால் அவள்.
சரி.
"இன்றைக்கு நான் அத பண்ணலை" என்று பதில் வந்தது.
 
**** கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு,பழைய தோழியை பார்க்க போயிருந்தேன்.
சமீபத்தில் தாயாகி இருந்தாள். ஏதேதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ஏய் உனக்கும் பெண் குழந்தை எனக்கும் பெண் குழந்தை,உன் குழந்தையும் வெள்ளி கிழமைதான் பொறந்துச்சு என் குழந்தையும் வெள்ளி கிழமைதான் பொறந்துச்சு என்றாள்.

ஹூம்.. நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது
  ******

23 comments:

Prasanna said...

//கனவினை விட்ட இடத்தில இருந்து தொடர முடியுமா?!//

நல்ல கனவுகள் மட்டும் ம்ஹூம் ம்ஹூம் வாய்ப்பே இல்ல

Cable சங்கர் said...

//ஹூம்.. நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது
//

வீட்டுல ப்ளாக் படிப்பாங்களா?:))

Paleo God said...

Cable Sankar said...
//ஹூம்.. நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது
//

வீட்டுல ப்ளாக் படிப்பாங்களா?:)//

படிக்கலைன்னா என்ன தல, ப்ரிண்ட் எடுத்து கொடுத்திடலாம். :)

Paleo God said...

Cable Sankar said...
//ஹூம்.. நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது
//

வீட்டுல ப்ளாக் படிப்பாங்களா?:)//

படிக்கலைன்னா என்ன தல, ப்ரிண்ட் எடுத்து கொடுத்திடலாம். :)

மணிஜி said...

வானவில் போல் வாழ்க்கை.அழகானது நிலையற்றது

சிவராம்குமார் said...

\\ஹூம்.. நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது//

ஹ்ம்ம்.... வடை போச்சா!!!!

நசரேயன் said...

// நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது
//

அப்படின்னா ?

அன்பரசன் said...

//பேசியவர் IT மேனேஜர்
ஒரு வேளை அட்டாச்மெண்டா நானே குத்துகாலிட்டு உட்கார்ந்திருப்பேன்னு எதிர்பார்த்தாரோ என்னமோ..//

ஹா ஹா

அன்பரசன் said...

//தினம் ஆபிசில் இருந்து வந்ததும் " நாள் பூரா இன்னிக்கு என்னதான் பண்ணினே ? என்று நீங்க கேப்பீங்க இல்லையா? என்றால் அவள்.
சரி.
"இன்றைக்கு நான் அத பண்ணலை" என்று பதில் வந்தது. //

நச்

அன்பரசன் said...

// நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது//

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாமே நல்லாயிருக்கு :-))))))))

மதுரை சரவணன் said...

அனைத்தும் அற்புதம்.. கதம்பம். வாழ்த்துக்கள்

அகில் பூங்குன்றன் said...

//நம் குழந்தை வெள்ளிக் கிழமை பொறந்திருக்க வேண்டியது//
haha hahaa.. Rasithten

Chitra said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

vasu balaji said...

இது கு(எ)றும்பு:))

க ரா said...

உங்களுக்கு தில்லு ஜாஸ்திதான் :) தீபாவளி வாழ்த்துகள் :)

goma said...

எதிலோ படித்தது...நல்ல நெத்தியடி

Unknown said...

பஸ் இல்லைன்னா ப்ளாக் ரெண்டுல ஏதாவது ஒண்ணுல இருந்து கலண்டுக்கலாம்னு பாக்கறேன். ஒரே விஷயத்தை எத்தன இடத்துல படிக்கிறது? 

எறும்பு said...

நன்றி பிரசன்னா

கேபில்ஜி (படிப்பாங்க படிப்பாங்க)

சங்கரு : (பிரிண்ட் எடுத்து கொடுங்க, உங்க வீடியோ வீட்டுக்கு போகும்)

எறும்பு said...

நன்றி மணிஜி

நன்றி சிவா (விடுங்க விடுங்க)

நசரேயன் (என்ன கேக்குறீங்கன்னு புரியலை :))

எறும்பு said...

நன்றி அன்பரசன்

நன்றி கார்த்திகை பாண்டியன்

நன்றி மதுரை சரவணன்

எறும்பு said...

நன்றி அகில்

நன்றி வாசு அய்யா

நன்றி சித்ரா

நன்றி ராமசாமி கண்ணன்

நன்றி கோமா(அனுபவம் )

எறும்பு said...

//பஸ் இல்லைன்னா ப்ளாக் ரெண்டுல ஏதாவது ஒண்ணுல இருந்து கலண்டுக்கலாம்னு பாக்கறேன். ஒரே விஷயத்தை எத்தன இடத்துல படிக்கிறது? //

இது சும்மா இடுகை தேத்துறது.. பஸ்ல எத்தனை பேரு படிக்கிறாங்க..