கடந்த அக்டோபர் மாதம் பதிவு ஆரம்பித்தேன். இந்த ஐந்து மாதத்தில் பத்தாயிரம் ஹிட்ஸ். பட்டினத்தார் போன்ற விசயங்களை எழுதினால் கடை காத்து வாங்குச்சு. சினிமா விமர்சனங்களும், நித்தியின் வாக்குமூலமும் அதிகம் பேர் வாசித்த பதிவுகள். ஆகவே மக்களே தொடர்ந்து மொக்கை பதிவுகளை அதிகமாக பதிய முடிவு செய்திருக்கிறேன்.
தொடந்து பின் தொடர்பவர்களுக்கும், எனது ஏழே முக்கால் லட்சம் வாசகர்களுக்கும் நன்றி.
பின்குறிப்பு:- இந்த பத்தாயிரம் ஹிட்ச வச்சு என்ன பண்றது?. இத வச்சுக்கிட்டு யாராவது பத்தாயிரம் ரூபாய் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். அவ்வளவு தரமுடியாடியும், கொஞ்சம் குறைச்சு 9999 ரூபாய் குடுத்தாக்கூட போதும். பாத்து பண்ணுங்க.