Sunday, January 17, 2010
ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம் - Late than never
திரை விமர்சனம் இந்த படத்தை நான் பார்த்தது சத்யம் தியேட்டர்ல.
எங்க ஊரு தியேட்டர்ல பாக்றதுக்கும் இங்க சத்யம்ல பாக்றதுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஊர்ல திரை, பெரும்பாலும் எங்கூர்ல வேட்டி துணியத்தான் சேத்து தச்சு திரையா கட்டிருப்பாங்க.அங்கங்க ஓட்டுகளுடன் கொஞ்சம் அழுக்காவே இருக்கும். ஆனா சத்யம்ல அப்படி இல்ல. நல்ல அகலமா பெரிசா சுத்தமா இருந்தது. கிட்டக்க போய் தொட்டு பாத்திருந்தா திரை என்ன மடீரியல்னு தெரிஞ்சுருக்கும். ஆனா நான் உட்கார்திருந்த இடத்திற்கும் திரைக்கும் ரெம்ப தூரம்கிறதால திரைக்கு பக்கத்துல போய் பாக்கல.
சில தியேட்டர்ல திரைக்கு துணி கட்றதுக்கு பதிலா வெள்ளை பெயிண்ட் அடிபாங்கலாம். இதுகென்றே விசேசமான பெயிண்ட் கிடைக்குது.திரைகள் நிறைய வகைப்படும். தியேட்டரின் அளவை பொருத்து திரையின் அளவும் மாறுமாம். திரையின் அளவு பொதுவா 30ft திரை, 40 ft திரை, அப்புறம் 80ft திரை கூட உண்டாம்.
திரை மட்டும் முக்கியம் இல்லைங்க, நாம உட்கார்ந்து பாக்கிற சீட்டுகள் கூட இடைவெளி சரியா இருக்கணுமாம். சீட்டிலிருந்து திரை 30 டிகிரிலேர்ந்து 80 டிகிரி கோணம் இருக்கணுமாம்.
அதுவும் சத்யதுல RDX அப்படீங்கிற டெக்னாலஜி பயன்படுத்துறாங்க. இதுக்கு Real digital experience னு பேரு. இந்த தொழில் நுட்பத்த பயன்படுத்தி நாம திரைல படம் பாக்குறப்ப, மற்றதை ஒப்பிடும்போது இதில் அதிக தெளிவுடன், அதிக வண்ணத்துடன், அதிக வெளிச்சமாக இருக்கும்.
மேலும் சத்யம் நிறுவனம் என்ன சொல்றாங்கன்னா, ஒரு படத்தின் இயக்குனர் என்ன நினைத்து படத்தை எடுக்கிறாரோ அதே ஒலியுடன், அதே ஒளியுடன் ஒரு பார்வையாளனுக்கு அளிக்க முடியும்கிறாங்க.
ஆனால், செல்வா ராகவன் என்ன நினைத்து இந்த படத்தை எடுத்தார் என்று சத்தியமா இப்ப வரைக்கும் எனக்கு புரியல..
*****************************************************************************
பின் குறிப்பு : சினிமா விமர்சனம் எழுதினாதான் பதிவர்னு சொன்னாங்க, நான் ஒரு வித்தியாசத்துக்கு திரை விமர்சனம் எழுதி இருக்கேன். அப்பாடி நானும் பதிவர் ஆயிட்டேன். அடுத்து பிரபல பதிவர் ஆக முயற்சி செய்ய வேண்டும்.
*****************************************************************************
Labels:
திரை விமர்சனம்,
திரைப்படம்,
நகைச்சுவை,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
சிறந்த மொக்கை,(படத்த சொல்லல), ஹா...ஹா...
படம் பார்த்தாச்சா தலைவா.
ங்கொய்யால.. இதுதான் நச் விமர்சனம் சகா :))
இதாங்க சிறந்த திரை விமர்சனம். :))
கூடிய சீக்கிரமே பிரபல பதிவராக வாழ்த்துக்கள்.
-வித்யா
படத்தைப் பத்திச் சொல்ல ஒன்னுமில்லை போல :)
கேபிளார் பாவம் ..
//பின்நவீனத்துவம்னா என்ன?
பரிசல் என்கிட்ட கேட்டிருந்தாரு.. இன்னொருத்தரும் கேட்டிருந்தாரு.. பின்நவினத்துவம்னா என்னன்னு? ரொம்ப கஷ்டப்பட்டு உட்காந்து யோசிச்சதிலே.. ஒன்று புரிஞ்சிச்சி பின்நவீனத்துவம்னா எனக்கு ஒரு மாதிரி புரியுது. அதை நீ பாக்கும் போது உனக்கு வேற மாதிரி புரியுது. இன்னொருத்தன் பாக்கும் போது அவன் வேற ஒண்ணை சொல்றான். இதையெல்லாம் பாக்குறவன் ஒரு வேளை நாமும் ஒரு கருத்தை சொல்லைன்னா நம்மளை ஆட்டத்தில சேர்த்துக்க மாட்டாங்களோன்னு அவனும் மூணு பேர் சொல்றதுல ஏதோ ஒண்ணுக்கு தலை ஆட்டுவான். இப்படி யாருக்குமே புரியாம ஆளாளுக்கு ஒண்ணை புரிஞ்சிக்கிறதுக்கு பெயர்தான் பின்நவினத்துவம். என்ன புரிஞ்சுதா..? இல்லாட்டியும் புரிஞ்ச மாதிரி தலையாட்டுங்க.. இல்லாட்டி உங்களையும் ஆட்டத்தில சேத்துக்காம போயிருவாங்க..:)//
இத படிச்சிருந்தா .. சுலபமா பின் நவீன விளக்கம், முன் நவீன விளக்கம் ரெண்டும் கிடச்சிறுக்கும்... ::))
என்ன நடக்குது இங்க?
இதுக்குப் பேர்தான் பிட்டு போடறதா....?
நல்ல திருநெல்வேலி குசும்புய்யா உமக்கு... கலக்குறீரு... :-)
நீங்க ஏற்கனவே பிரபல பதிவர் தானே தல. பட்டைய கிளப்புங்க.
நன்றி சைவகொத்து பரோட்டா
நன்றி கார்க்கி (கடுப்புல வர்றது) :)
நன்றி வித்யா
நன்றி சுந்தர்ஜி முதல் பின்னூட்டத்திற்கு!
நன்றி பலாபட்டறை
நன்றி அசோக்
நன்றி சங்கவி
நன்றி ரோஸ்விக்
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
படத்தைப் பத்திச் சொல்ல ஒன்னுமில்லை போல :)//
எல்லாரும் சொல்லிடாங்க, படத்த பத்தி சொல்லனும்னா படம் பாக்கும்போது, முன்னாடி உட்கார்ந்திருந்த புள்ள ஒன்னு கொறஞ்சது அஞ்சு டப்பா பாப்கார்ன் காலிபன்னிருக்கும் (பையன் காசுல) . அதையும் சொல்ல வேண்டி இருக்கும்.
:))
முதல் முறையா ரெண்டு மைனஸ் ஓட்டு... நான் வளர்கிறேனே மம்மி..
:))
//அடுத்து பிரபல பதிவர் ஆக முயற்சி செய்ய வேண்டும்.
//
பிரபலம்னாலே பிராப்ளம்தான்........நடக்கட்டும்
என்னா.. லொல்லு மாமே... உங்களுக்கு??! :)
நறுக்குன்னு எறும்பு கடிச்சா மாதிரி!!!!
இவன் இந்த உலகத்துக்கு எதோ சொல்ல வரான் ....
நானும் ஒரு மைனஸ் போட்டு இன்னும் பிரபலமாக்கலாம்னு நினைச்சேன்
கொஞ்சம் உருப்படியா தகவல் சொன்னதால் விட்டுட்டேன் :))
Class!!.
உன்ன மாதிரி டுரிங் தகீஸ் ல படம் பாக்குற போரம் போக்கு உன்னக்கு என்ன தெரியும் ஆயிரத்தில் ஒருவன் பத்தி.. முடி கிட்டு வேட்டைக்காரன், குரவி, வில்லு பாருடா பாடு
செல்வராகவன் மாதிரியே பில்டப் குடுத்து ஏமாத்திட்டீங்களே!! :)
நச்
\\அடுத்து பிரபல பதிவர் ஆக முயற்சி செய்ய வேண்டும்.//
எப்படி ஆகணும் என்று நான் வேணும்னா ஐடியா தரட்டுமா ??
கண்ணா... என்னோட ப்ளாக் ல இன்னிக்கு பால் காய்ச்சிருக்கேன்... நேரம் இருந்தா வந்திட்டு போ..
கண்ணா... என்னோட ப்ளாக் ல இன்னிக்கு பால் காய்ச்சிருக்கேன்... நேரம் இருந்தா வந்திட்டு போ..
பிரபலம் ஆய்ட்டீங்க போல இருக்கே! :)
// ஹாலிவுட் பாலா said...
பிரபலம் ஆய்ட்டீங்க போல இருக்கே! :)//
எல்லாம் உங்க ஆசிர்வாதம்
:))
:)))
எனக்கு ட்ரைலரே புரியலையே.அப்டின்னு வருத்தப் பட்டேன்.
நீங்க எழுதினப்புறம்,திரை அதுவும் வெறும் திரை போதும்னு தோணிப் போச்சு:)
சூப்பர் விமர்சனம்.
ErumbaNNaa super vimarsanam.
சினிமா விமர்சனத்தை விட திரை விமர்சனம் நல்லா இருக்கு
எப்படி ஆகணும் என்று நான் வேணும்னா ஐடியா தரட்டுமா ??
//
ada.. romeo..
நல்ல பதிவு..
கேபிள் சஙக்ர்
Post a Comment