Thursday, January 28, 2010

சின்ன சின்ன... 28-1-10

பூர்த்தி செய்யப்படாத தலைப்பு. ஒரு படைப்பாளி ஒரு பிரதியை படைக்கும்பொழுது சிலவற்றை ஒரு வாசகனின் யூகத்திற்கே விட்டுவிடுகின்றான். ஒன்றும் புரியாமல் வாசகன் திகைக்கும் பொழுது அந்த பிரதி காலங்களை கடந்து அமரத்துவம் பெற்று விடுகிறது. பிரதியை படைத்தவனும்...........
(இதுக்கு முதல்ல டிட்பிட்ஸ் என்று தலைப்பிட்டு இருந்தேன். அடக்கமாட்டாத தமிழ் ஆர்வத்தால் சின்ன சின்ன..)

*************************************************************************************
போன வாரம் எங்கள் அப்பார்ட்மெண்டில் வீடு வீடாக ஒரு கார்டு விநியோகித்து கொண்டிருந்தார்கள். அது கேகே நகர் பஸ் டிப்போ அருகில் உள்ள மருத்துவமனையின் விளம்பர அட்டை. சர்க்கரை நோய், மூட்டுவலி, எலும்பு முறிவுக்கு சிறப்பாக சிகிச்சை அளி பார்கலாம். இதில் கவனிக்க வேண்டியது, அந்த கார்டை அவர்களிடம் சிகிச்சைக்கு வரும் பொழுது கொண்டு வந்தால் 25 சதவீதம் தள்ளுபடி உண்டாம்.மருத்துவத்தில் விளம்பரம் செய்யகூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். விரைவில் ஆடிக்கழிவு மற்றும் எக்ஸ்பயரி ஆகும் மருந்துகளின் clearence சேல் எதிர்பார்க்கலாம். எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு நாலு கார்டு வாங்கி வச்சிருக்கேன். தேவை படுபவர்கள் எனக்கு மெயில் செய்யவும். இல்லையேல் நாலு கார்டையும் எடுத்திட்டு போய் 100 சதவீதம் தள்ளுபடி உண்டானு கேக்கணும்.

*************************************************************************************
சென்னை சங்கமம் வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கில் நடந்தது. தினமும் சென்று வந்தேன். அஞ்சு வயசு பொண்ணு அசால்டா சிலம்பு சுத்துச்சு. பலத்த கரகோஷம் எழும்ப அந்த சின்னஞ்சிறு முகத்தில் அவ்வளவு சந்தோசம். நீண்ட நாட்களுக்கு அந்த முகமே நினைவில் நின்றது. சில கலைஞர்களிடமும் பேசினேன். அறிவிப்பாளர் போன வருடத்தின் சென்னை சங்கமம் சீடீ விற்பனைக்கு என்று அறிவித்தார். அம்பது ரூபாய் குடுத்து வாங்கினேன். நேற்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது. கவரில் சங்கமம் 2009 நிகழ்வுகள் அனைத்தும் என்று பிரிண்ட் செய்யப்படிருந்தது. போன வருடம் கலைஞர் டிவி ஒளிப்பரப்பிய ஒரு நாள் சங்கமம் மட்டுமே இருந்தது, கலைஞர் டிவி வாட்டர் மார்க் மற்றும் லோகோவுடன்.நோ கமெண்ட்ஸ்

*************************************************************************************
இரண்டு பேருமே என்னை விரும்புறாங்க, நான் என்ன முடிவு எடுக்கிறது. நான் சொல்றேன் வலது பக்கம்தான் மச்சம் இருக்கு, நீதான் ஏன் பேரன். ஏன்னெனில் காம்ப்ளானில் மட்டுமே உள்ளது இரட்டிப்பு ஊட்டசத்து. தண்ணிலையே பொழப்பு நடத்துறீங்க, தண்ணிய பார்த்து ஏன் பயப்படறீங்க. பாதி முதுகு சரியான மாதிரி இருக்கு. ஓடிபோலாமா.நடிகர் கார்த்திக் பங்கேற்கும் ஸ்டார் டாக். முடி உதிர்வது பிரச்சினை. வெங்காயத்தை சிறியதாக நறுக்கவும். ராஜபக்ஷே வெற்றி பெற்றார். அவள நான் பழி வாங்கியே ஆகணும். எங்கே செல்லும் இந்த பாதை. இந்த விசமில்லாத பாம்புதான் இன்னைக்கு எனக்கு உணவு. குறைந்த உடையில் பூனை நடை.நேத்து வார விடுமுறை. வெட்டியா உட்கார்ந்து சேனல் மாத்தினதுள்ள குறிப்பு எடுத்தது. ஏன் கடைசில அந்த சேனல்ல நிறுதிட்டீங்கன்னு கேட்டு யாரும் கமெண்ட் போடகூடாது.
*************************************************************************************
நிறைய இடங்களில் தியேட்டரை விட்டு தூக்கிய பிறகும் சன்னில் இன்னும் வேட்டைகாரனுக்கு ட்ரைலர் ஓட்டி கொண்டிருக்கிறார்கள். சன் ஆரம்பிச்சு வச்சது, நொடிக்கு நூறு தரம் ட்ரைலர் காண்பிப்பது. இப்ப அறிமுக நாயகன் குமரன் நடிக்கும் தைரியம், எல்லா சேனல்லையும் நொடிக்கு முந்நூறு தரம் ஓடுது. அந்த ட்ரைலரின் முடிவில் வில்லன் வெறித்தனமா கமான் கமான்னு நம்மள தியேட்டருக்கு கூப்பிடறுது பீதிய கிளப்புது.இந்த படத்துடன் , நாளை கோவா மற்றும் தமிழ் படம் ரிலீஸ் ஆகுது. என்னோட சாய்ஸ் தமிழ் படம்.

*************************************************************************************
நேற்று வந்த சம்ஸ்.
1 sal 12 mah 1 mahk 4 hfte 1 hftek 7 din 1 dink 24 ghnte 1 ghntek 60 minut 1 minutk 60 sec 1 sec hzarlmhehrlmhe me 1 hi
Aap KHUSH RAHO?
கொஞ்ச நேரம் கழிச்சு அதுக்கு அர்த்தம் என்று அடுத்த sms.
1 year 12 months 4 weeks 7 days in a week a day in a week 24 hours in a day an hour in a day 60 mins in a hour 1 min in a hour..
Be happy always.
என் பதிவை எல்லாம் படிக்கிறீங்க. கண்டிப்பா சந்தோசமாத்தான் இருப்பீங்க.:))


**********************************************************************************


21 comments:

Cable Sankar said...

குமரனின் தைரியம் நல்லா ரீச் ஆயிடிச்சி போலருக்கே...:))

பலா பட்டறை said...

ஏதோ ஒரு இசத்துல எழுதறீங்க நம்ம மர மண்டைக்கு ஒன்னும் பிரியல..::))

இலக்கியவாதி ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

இது வாரா வாரம் வாருவீங்களா??:)

இருந்தாலும் முதல் பத்தி படிச்சிட்டு ஆடிப்போய்ட்டேன்..

Vidhoosh said...

பேசாம "தூசி" "துகள்" என்றெலாம் பேரு வச்சிருக்கலாம்.. ஏதோ சின்னச் சின்ன ஆசைன்னு நினைச்சுட்டேன் :))

சங்கமம் செம கூத்து

சேனல் மாத்தி மாத்தி குறிப்பெடுக்கும் அளவுக்கு நேரம் இருக்கா... மேடம்.. திருமதி.ராஜகோபால்... மேடம் .... ஜன்னலோரத்தில் ஒட்டறை இருக்கே கவனிக்கலையா... :))

துபாய் ராஜா said...

//நாலு கார்டையும் எடுத்திட்டு போய் 100 சதவீதம் தள்ளுபடி உண்டானு கேக்கணும்.//

மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க வைக்கும்ன்னு மூக்கெலும்பை உடைச்சுடப் போறாய்ங்க.... :))

சங்கர் said...

அந்தப் பக்கம் போயிடாதீங்க, இலவசமா ஏதாவது வியாதி கொடுத்திடப்போறாங்க :))

வானம்பாடிகள் said...

:)). ட்ரீட்மண்ட்தான் இலவசம். பெட் சார்ஜ், நர்சிங் சார்ஜ், கக்கூசுக்கு, கரண்டுக்குன்னு தனி தனியா சொத்தை எழுதி வாங்கிடுவாய்ங்க:))..சின்ன சின்ன..என்ன? என்னன்னு எதிர் பார்க்கை வைக்குது.:)

தாராபுரத்தான் said...

நல்லாவே இருக்குதுங்கோ..

நாய்க்குட்டி மனசு said...

present sir

நசரேயன் said...

//என் பதிவை எல்லாம் படிக்கிறீங்க. கண்டிப்பா சந்தோசமாத்தான் இருப்பீங்க.:))/

ஆம்.. ஆம்

கதிரவன் said...

நல்லா இருக்குதுங்க

Chitra said...

உங்களுடைய டி வி நிகழ்ச்சி தொகுப்பும் trailer கமெண்டும் செம காமெடி.

கார்க்கி said...

உங்கள படிச்சும் சந்தோஷமா இருக்கிற எங்கள எந்த கஷ்டமும் ஒன்னும் செய்ய முடியாது சகா

எறும்பு said...

அனைவருக்கும் நன்றி
:)

எறும்பு said...

//
மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க வைக்கும்//

அண்ணாச்சி உங்க ஊர்லா, அதான் இப்படி...

எறும்பு said...

//தாராபுரத்தான் said...

நல்லாவே இருக்குதுங்கோ..//

அய்யா உங்கள் முதல் வருகைக்கு நன்றி...

எறும்பு said...

//குமரனின் தைரியம் நல்லா ரீச் ஆயிடிச்சி போலருக்கே...:))//

சீக்கிரம் விமர்சனம் போடுங்க...

எறும்பு said...

//மேடம் .... ஜன்னலோரத்தில் ஒட்டறை இருக்கே கவனிக்கலையா//

வீட்ல இப்படிதானா... :))

எறும்பு said...

நன்றி பலா சங்கர் (நூறுக்கு வாழ்த்துக்கள்)

நன்றி கதிரவன்
நன்றி சித்ரா
நன்றி கார்க்கி

எறும்பு said...

//சங்கர் said...

அந்தப் பக்கம் போயிடாதீங்க, இலவசமா ஏதாவது வியாதி கொடுத்திடப்போறாங்க ///

Saalaiyoram ennachu??

mayilravanan said...

sms அச்சா ஹை...ஹி ஹி...நல்லா இருக்குண்ணே..

கார்டு ’காப்பீட்டுத் திட்டத்துக்காக’ இருக்கப்போவுது? :)

கிச்சான் said...

பூர்த்தி செய்யப்படாத தலைப்பு. ஒரு படைப்பாளி ஒரு பிரதியை படைக்கும்பொழுது சிலவற்றை ஒரு வாசகனின் யூகத்திற்கே விட்டுவிடுகின்றான். ஒன்றும் புரியாமல் வாசகன் திகைக்கும் பொழுது அந்த பிரதி காலங்களை கடந்து அமரத்துவம் பெற்று விடுகிறது. பிரதியை படைத்தவனும்...........
அருமையான வார்த்தை பிரயோகங்கள்
வாழ்த்துக்கள் தோழரே