Thursday, January 21, 2010

எழுத்தாளர் ஜெயமோகன்தான் காரணம்....

(படம் : பலா சங்கர்)

நேற்று சுவாமி ஓம்கார் சென்னைக்கு விஜயம் செய்தார். காந்தி சிலைக்கு அருகில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. வயதான ஒருவர், கதர் குல்லாய் போட்டிருந்தார். ஒருவனை கையை பிடித்து,பேரனாய் இருக்க வேண்டும், தள்ளாடி நடந்து வந்து காந்தியை பார்த்து கைகூப்பியபடி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். தீவிர காந்தியவாதியாய் இருக்கும். போகும்பொழுது காந்தியை திரும்பி திரும்பி பார்த்தப்படி சென்றார். அவர் என்ன நினைத்திருப்பார் என்றே யோசித்து கொண்டிருந்ததால், பள்ளி சீருடையில் ஒருவன் கரம் பிடித்து நடந்த பெண், இறுக்கமான உடை அணிந்து காதலன் தோளில் சாய்ந்துகொண்டிருக்கும் பெண், சிரித்தபடி நடந்து கொண்டிருந்த கல்லூரிப்பெண்கள். இவர்களை பார்க்கவில்லை.

சரியாக ஆறு மணிக்கு சுவாமி ஓம்கார் அண்ணன் அப்துல்லாவுடன் வந்து சேர்ந்தார். சுத்தி நாலு பேரு நின்னுகிட்டு, சாமி வராரு வழி விடுங்க வழி விடுங்கன்னு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா சுவாமி ஓம்கார் ரெம்ப எளிமையா இருந்தார். அவரு ரெம்ப சிம்பிளா இருந்தாருன்னு நிறைய பேரு கேட்டாங்க.எந்த அளவுக்கு எளிமைனா அவரு ஒரே ஒரு பைஜாமா ஒரே ஒரு குர்தாதான் போட்ருந்தாரு, அந்த அளவுக்கு எளிமை. சிறு அறிமுகத்திற்கு பிறகு உட்கார்ந்து பேச இடம் தேடினோம். அருகில் ஒரு குழந்தை ஓடி வந்து சிரித்தது. பலாபட்டறை சங்கர், அது உங்களை பார்த்துதான் சிரிக்குது என்றார். அவரு குழந்தையை சொன்னாரா இல்ல அந்த குழந்தைக்கு அருகில் நின்றிருந்த இளம் பெண்ணை பற்றி சொன்னாரா என்று தெரியவில்லை. கேட்டால் என்னத்த கண்ணையா மாதிரி "நான் பொதுவா சொன்னேன்" என்றார்.

துளசி கோபால் எனக்கு பிறகு வந்து, பதிவர்களை காணாமல் ஜெட்லி சங்கருக்கு போன் செய்திருக்கிறார். சங்கர் எனது போன் நம்பரை குடுக்காமல், எறும்பு அங்கதான் நிக்கிறாரு பாருங்கன்னு சொல்லிருக்கிறார். பின்பு துளசி டீச்சர் என்னிடம், நீங்கதான் எறும்பான்னு நான் யாருகிட்ட போய் கேக்க முடியும் நீங்களே சொல்லுங்க என்றார், அப்பாவியாய்.அந்த காட்சியை நினைத்து பார்க்கவே சிரிப்பு வந்தது. நல்ல வேளை இவங்க பதிவர் பைத்தியகாரனை தேடலை.

தேடி இடம் பிடித்து மணலில் உட்கார்ந்த பிறகு கச்சேரி களை கட்டியது. எப்படி எழுத வந்திங்க என்று சுவாமி ஒம்காரை கேட்டதற்கு, எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை பதஞ்சலி யோகா சூத்திரம் பற்றி எழுதி இருந்தார். தலைப்ப மட்டும் பதஞ்சலி பேர போட்டுட்டு முழுசும் அவர் கருத்த எழுதி இருந்தாரு.( சுவாமிய போட்டு குடுத்தாச்சு ). அதில் எனக்கு உடன்பாடு இல்லாததனால அதுக்கு மறுப்பு தெரிவிச்சு பதஞ்சலி யோகா சூத்திரத்தில் இருந்து மேற்கோள் காட்டி ஒரு அஞ்சு பக்கத்துக்கு கடிதம் எழுதினேன். ஜெயமோகன் கிட்ட இருந்து ரெண்டே வரில, உங்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தது என்று பதில் வந்தது. இதை ஏன் நீங்களே ஒரு வலைத்தளம் ஆரம்பிச்சு உங்க கருத்த சொல்லகூடாதுன்னு கேட்டிருந்தாரு. அதுல ஆரம்பிச்சதுதான் இந்த வலை தளம் என்றார்.ஆகவே சுவாமி ஓம்கார் எழுத வந்ததற்கு எழுத்தாளர் ஜெயமோகன் தான் காரணம் (பதிவு தலைப்பு). நான் ரெம்ப சீரியஸா, சாமி நீங்க ஜெய மோகனுக்கு எழுதுறதுக்கு பதிலா சாருக்கு இதே மாதிரி எழுதி இருந்தீங்கன்னா, சீக்கிரமே பிரபலம் ஆகி இருபீங்கள்ள என்றேன். சில பதிவர்கள் சத்தமாக சிரிக்க, சிலர் நமுட்டு சிரிப்பு சிரித்தனர். நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன்.ஏன் அவர யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க!!!!

சூபி ஞானிகள்,சித்தர்கள்,காசி என நீண்ட பேச்சு புகைப்படத்தில் முடிந்தது.

வீட்டிற்கு போகும் வழியில் நல்ல பசி , அண்ணன் கேபிள் சங்கர் இங்க ஒரு சின்ன கடைல தோசை நல்லா இருக்கும்னு ஒரு தெருக்குள் கூட்டிட்டு போனார். அது ரெம்ப ரெம்ப சின்ன கடை போலிருக்கு, எங்க ரெண்டு பேரு கண்ணுக்கும் அது தட்டுபடலை. இங்கதான்யா இருந்துச்சு, ஒரு வேளை மூடிடாங்களோ,தெரியலையே என்றார்.

வழக்கமா சாப்டற கடைல சாப்ட்டு வீட்டை அடைந்தேன்... இன்னிக்கு சுவாமிய பார்த்ததால வீடுபேறு அடைந்தேன்.


பின் குறிப்பு:- அவரோட தனியா வேற புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.என்னிக்காவது சுவாமி ஓம்கார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஓம்கார் ஆகும் போது, அந்த படம் எனக்கு உபோயோகப்படும்.


*****************************************************************

33 comments:

Vidhoosh said...

ம்ம்..

எறும்பை தேடிக் கண்டுபிடிச்ச துளசி டீச்சர் :))

"சாரு"க்கு கடிதம் :))))

கேபிளின் தோசை கடை -- ஐயோ பாவம்...

--வித்யா

சங்கர் said...

//தேடி இடம் பிடித்து மணலில் உட்கார்ந்த பிறகு கச்சேரி களை கட்டியது. எப்படி எழுத வந்திங்க என்று சுவாமி ஒம்காரை கேட்டதற்கு,//

அப்போ தான் ஆரம்பிச்சீங்களா? நான் நிறைய மிஸ் பண்ணிட்டேன் போலருக்குன்னு நினைச்சிக்கிட்டேன்

சங்கர் said...

// அண்ணன் கேபிள் சங்கர் இங்க ஒரு சின்ன கடைல தோசை நல்லா இருக்கும்னு ஒரு தெருக்குள் கூட்டிட்டு போனார். அது ரெம்ப ரெம்ப சின்ன கடை போலிருக்கு, எங்க ரெண்டு பேரு கண்ணுக்கும் அது தட்டுபடலை. //

கேபிளுக்கு போன் பண்ணி அழுற சந்தர்ப்பத்தை தவற விட்டுடீங்களே :))

சங்கர் said...

'சுவாமி ஓம்காரை தூண்டிய ஜெயமோகன்'

'ஜெயமோகன் தளத்தில் சுவாமி ஓம்கார்'

'சுவாமி ஓம்கார் - கலியுக பதஞ்சலியை கண்டேன் - ஜெயமோகன்'

இதுல ஏதாவது ஒண்ணு தலைப்பா வச்சிருந்தா இன்னும் சூடா இருந்திருக்கும்

Jackiesekar said...

இந்த கூத்து எப்ப நடந்துச்சு???

எறும்பு said...

//
எறும்பை தேடிக் கண்டுபிடிச்ச துளசி டீச்சர் :))

"சாரு"க்கு கடிதம் :))))

கேபிளின் தோசை கடை//


நன்றி வித்யா :))

எறும்பு said...

//
கேபிளுக்கு போன் பண்ணி அழுற சந்தர்ப்பத்தை தவற விட்டுடீங்களே :))//

சாப்பாடே வாங்கி குடுக்கலைன்னு அழுதுட்டே போனேன்
:)

எறும்பு said...

//ஜாக்கி சேகர் said...

இந்த கூத்து எப்ப நடந்துச்சு???//

நேத்து தான் மாலை ஆறு மணிக்கு
சரியான மார்க்கெட்டிங் இல்ல... நிறைய பேருக்கு தெரியலை

எறும்பு said...

பின் குறிப்பு இனைகப்பட்டுளது.

அத்திரி said...

//சாமி நீங்க ஜெய மோகனுக்கு எழுதுறதுக்கு பதிலா சாருக்கு இதே மாதிரி எழுதி இருந்தீங்கன்னா, சீக்கிரமே பிரபலம் ஆகி இருபீங்கள்ள என்றேன்.//

ஊர் குசும்பு இன்னும் போகலையோ................

Paleo God said...

இதுக்குத்தான் உங்கள மாதிரி ப்ரபல பதிவர்கள் வேணும்ங்கறது..:)) கலக்கிட்டீங்க எறும்பாரே..:)

சாரி நான் வெளில போயிருந்ததனால படிக்க தாமதம்..:))

ஸ்வாமி ஓம்கார் said...

சொந்த ஊர் அம்பாசமுத்திரமா? சிவகாசியா? இப்படி பத்தவச்சுட்டேளே :)

//வழக்கமா சாப்டற கடைல சாப்ட்டு வீட்டை அடைந்தேன்... இன்னிக்கு சுவாமிய பார்த்ததால வீடு பேரு அடைந்தேன்.//

சாமியை பார்த்ததால சோறுதண்ணி கடைக்கல :)

Radhakrishnan said...

பதிவர்களின் சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

அட, சுவாமியின் எழுத்து பயணம் இப்படித்தான் ஆரம்பித்ததா?

பஹ்ரைன் பாபா said...

பதிவரனா ஏதோ நேரம் போகாம.. சில நேரம் பத்திரிக்கையில பிரசுரம் பண்ண வழி இல்லாம.. ப்ளாக் ல எழுதுறாங்கன்னு நினைச்சா.. ஒரு கூட்டமாதான் அலையுறீங்க.. .. ஹ்ம்ம்.. முடிஞ்சா நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..

மாடல மறையோன் said...

//அவரு ரெம்ப சிம்பிளா இருந்தாருன்னு நிறைய பேரு கேட்டாங்க.எந்த அளவுக்கு எளிமைனா அவரு ஒரே ஒரு பைஜாமா ஒரே ஒரு குர்தாதான் போட்ருந்தாரு, அந்த அளவுக்கு எளிமை//

எல்லாரும் ஒரே ஒரு பைஜாமா, ஒரே ஒரு குர்தாதான் அணிவார்கள்.

உங்கள் எண்ணப்படி, பைஜாமா மேலே இன்னொரு பைஜாமா, குர்தா மேலே இன்னொரு குர்தா போட்டு வந்திருக்க்வேண்டும் உங்கள் Chief Guest. அப்படியென்றால் அவர் எளிமையில்லையென்று கணிப்பீர்கள்

உண்மையிலேயே நல்ல நகைச்சுவை. படத்திலிருக்கின்ற எல்லாருமே எளிமையாக ஒரே ஒரு சட்டை, ஒரே ஒரு கால்சட்டையில்தான் இருக்கின்றார்கள்.

மாடல மறையோன் said...

//சூபி ஞானிகள்,சித்தர்கள்,காசி என நீண்ட பேச்சு புகைப்படத்தில் முடிந்தது.//

’சூபி’ for Sufi

பயங்கரமான தமிழ். வேறுமாதிரி எழுத முடியாதா?

வெறும் நகைச்சுவைதானா?

What did he speak about Sufis, Sithars? Why don't you write about them also?

Romeoboy said...

எப்பயும் போல எறும்பின் நகைச்சுவை ..

shortfilmindia.com said...

கவலை படாதீங்க அடுத்த முறை நிச்சயம் புல் மீல்ஸுதான்.

கேபிள் சங்கர்

எறும்பு said...

//ஊர் குசும்பு இன்னும் போகலையோ......//

அண்ணா குசும்பு இல்லேங்க... நட்பின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வி..
:))
இருந்தாலும் நீங்க சொல்றதும் கொஞ்சம் உண்டு
;)

எறும்பு said...

//பலா பட்டறை said...

இதுக்குத்தான் உங்கள மாதிரி ப்ரபல பதிவர்கள் வேணும்ங்கறது..:)) //

அப்படிதான்.... இப்படியே உசுபேத்துங்க....
;)

Paleo God said...

எறும்பு said...
//ஊர் குசும்பு இன்னும் போகலையோ......//

அண்ணா குசும்பு இல்லேங்க... நட்பின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வி..
:))
இருந்தாலும் நீங்க சொல்றதும் கொஞ்சம் உண்டு
;)//

திருத்தம்.. நிறையவே உண்டு..:)

எறும்பு said...

//What did he speak about Sufis, Sithars? Why don't you write about them also?//
இல்லேங்க...அந்தந்த சப்ஜெக்ட் அவங்கவுங்க தான் எழுதணும்... அனுபவம் இல்லாத விசயத்த நான் எப்படி எழுத முடியும்..

எறும்பு said...

நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி romeo
நன்றி ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ

எறும்பு said...

//.. முடிஞ்சா நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..//

Welcome to blog world..

ந.ஆனந்த் - மருதவளி said...

உங்களது பதிவில் நுழைந்தது இதுவே முதல் முறை.. இடுகைகைகள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கின்றன..தொடர்ந்து நிறைய எதிர்பார்க்கிறோம்!!!

துபாய் ராஜா said...

ஸ்தம்தா... :))

எறும்பு said...

நன்றி ஆனந்த் மருதவளி

@துபாய் ராஜா said...

ஸ்தம்தா... :))

புரியலை...

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{ வீடு பேரு அடைந்தேன்.}

வீடுபேறு

எறும்பு said...

//அறிவன்#11802717200764379909 said...

{ வீடு பேரு அடைந்தேன்.}

வீடுபேறு////

Done.. thanks..

Barari said...

ADA ERUMBU KOODA ORE MOONJIYIL THAAN IRUNTHAAR

துபாய் ராஜா said...

//எறும்பு said...

//@துபாய் ராஜா said...

ஸ்தம்தா... :)) //

புரியலை...//

அரேபியில் 'என்ஜாய்' என்று அர்த்தம். :))

SurveySan said...

////என்னிக்காவது சுவாமி ஓம்கார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஓம்கார் ஆகும் போது, அந்த படம் எனக்கு உபோயோகப்படும்.
////

:)