நேற்று புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். போன வருடத்தை விட நிறைய ஸ்டால்கள். நேற்று கூட்டம் இல்லாததால் பைக் பார்கிங்கில் எதுவும் பிரச்சினை இல்லை. பார்கிங்கில் குடுக்கும் டிக்கெட் அவ்வளவு சிறிசு. திரும்பி வரும்போது டிக்கெட்ட தேடு தேடுன்னு தேட வேண்டி இருக்கு. பார்கிங் டிக்கெட்டுக்கும் யாரவது ஸ்பான்சர் பிடுச்சிருகலாம். நுழைவு கட்டணம் அஞ்சு ரூபாதான். போன தடவை மாதிரி இல்லாமல் நல்லா அகலமான வீதி. இருபக்கமும் ஸ்டால்கள். நானூறுக்கும் மேல் ஸ்டால்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கான அறிவியல் பொருட்கள் விற்கும் ஸ்டாலில் நல்ல கூட்டம் இருந்தது.
நேற்று,நான் எந்த புத்தகமும் வாங்கவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த ப்ளாக் ஆரம்பித்த பிறகு வாசிப்பு அனுபவம் கூடி உள்ளதால் ஒவ்வொரு புத்தகமாக புரட்டி பார்த்து, அதன் வாசத்தை உணர்ந்து, அதில் மனம் லயித்து, அந்த எழுத்தாளரின் கற்பனையுடன் ஒன்றி... போதும் நீங்க நம்பிடீங்கன்னு நினைக்கிறேன்.. அப்படியெல்லாம் ஒரு காரணமும் இல்லை.. இன்னும் இந்த மாசம் சம்பளம் போடலை, அதான் காரணம்... நான் புத்தகம் வாங்க அஞ்சு தேதிக்கு மேல ஆகும்.
நான் அப்படியே பராக்கு பாத்துட்டு போய்ற்றுக்கும் போது என்னையே ஒருத்தர் பாத்துட்டு இருந்தாரு. அவரு நம்ம பலாபட்டறை ஷங்கர். சரி வாங்கன்னு சேந்து சுத்தினோம். உயிர்மை ஸ்டால்ல இன்னொரு பதிவரை சந்தித்தோம். அவர் வண்ணத்துபூச்சி சூர்யா. மனிதர், நிறைய புத்தகங்கள் வாங்கி இருந்தார். ஆனால், இவ்வளவு ரூபாய்க்கு வாங்கிட்டேன் வீட்டுக்கு போய் என் மனைவிகிட்ட என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரியலை என்று கூறி கொண்டிருந்தார். பின்னர் எங்களுடன் இணைந்து கொண்டது அண்ணன் உண்மை தமிழன். நான்காவதாக ஒருமுறை அவர்களுடன் கண்காட்சியை சுற்றினேன். மனிதர் ஏகப்பட்ட பேரை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் வாங்கியது கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்கள். இடையில் பதிவர் லக்கியையும் சந்தித்தோம்.
நாங்கள் சந்தித்த மற்றொருவர் பா.ராகவன். அவர் அண்ணன் உண்மை தமிழனிடம், பதிவுன்னா பத்து வரிக்கு மேல எழுதாத, சினிமா விமர்சனம்னா ஒரு வரியோட நிறுத்திக்க என்று சிரியஸா (எழுத்து பிழை அல்ல ) அட்வைஸ் பண்ணினார். நடக்கிற கதையா அது.
இயக்குனர் முக்தா சீனிவாசனையும் சந்தித்தோம். அவர் இலவசமாக நடத்தி வரும் நூலகத்தை பற்றி கூறினார். அதை பற்றிய உண்மை தமிழனின் பதிவு இங்கே .
புத்தாண்டு கொண்டாட்டத்தினால் திரும்பி வீட்டுக்கு செல்லும் போது சரியான ட்ராபிக் ஜாம். பைக்கை முதல் கியரிலேயே ஓடிக்கொண்டு ஒரு காலால் நொண்டி அடித்துக்கொண்டு வீடு சேர்ந்தேன்.வரும் வழியில் டாஸ்மாக்கில் கூட்டம் முண்டி அடித்து கொண்டிருந்தது. (வாழ்க மஞ்சள் துண்டு)
நான் குடி இருக்கும் காலனியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி இருந்தது. மேடை அமைத்து செய், எனை எதாவது செய் என்று சிறு குழந்தைகள் இடுப்பு அசைத்து ஆடிகொண்டிருக்க அம் "மாக்களும்" அப்பாக்களும் ரசித்து கொண்டு இருந்தனர். கூச்சலில் அவர்களும் இணைந்து கத்தி கொண்டு இருந்தனர். சாதாரண நாளில் அடுத்த வீட்டில் யார் இருகின்றார் என்று தெரியாத இவர்கள், புத்தாண்டில் எல்லாருடன் இணைந்து கத்தி கூத்தடித்து கொண்டு இருந்தது வேடிக்கையாக இருந்தது. பெண்கள் இதை வடிகாலாக நினைகிறார்களா, இல்லை சாந்தமாக இருக்கும் ஒருவன், கூட்டத்தில் கல் எடுத்து எறிவதை போன்ற குழு மனபானமையா தெரியவில்லை.
பன்னிரண்டு மணி அடிக்க இரண்டு நிமிடம் முன்பு அனைத்து இசையும் நிறுத்தப்பட்டு அமைதி ஆனது. சரியாக பன்னிரண்டு மணிக்கு, ஹாப்பி நியூ இயர் என்ற கூச்சல் காதை பிளக்க, காலனிக்குள் தூங்க முயற்சித்து கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடுக்கிட்டு தெறித்து ஓடியது.
மேடை அருகே ஒரு பெண்ணுடன் கடலை வறுத்து கொண்டிருந்த ஒருவன் அந்த பெண்ணை தள்ளி கொண்டு போக, காலம் 2009 ஆம் வருடத்தை தள்ளி கொண்டு போய் விட்டது.
மற்றும் ஒரு ஆண்டு.... மற்றும் ஒரு நாள்.....
****************************************************************
23 comments:
தனிப்பட்ட பயணம் காரணமாக கடைக்கு 4 நாட்கள் விடுமுறை. பின்னூட்டதிற்கு ஐய்ந்தாம் தேதி பதில் அளிக்கபடும்.
நன்றி
நாலாப்பக்கமும் பார்த்தாலே மேட்டர் அதான் பதிவெழுத மேட்டர் எப்படிச் 'சிக்'குதுன்னு பார்த்தீங்களா!!!
குழந்தைகளை இந்த 'மாக்கள்'படுத்தும் கொடுமை இருக்கே..... அப்பப்பா....
இதுலே சாஸ்திரீய நடனத்தையும் எடுத்துக்கணும். சின்னப்பிள்ளைங்க எல்லாம் நாயகி பா(B)வத்தைக் காட்டி ஆடும்போது எனக்குப் பா(P)வமா இருக்கும்(-:
புத்தாண்டு வாழ்த்துகள்.
ஊருக்கு போயிட்டு வாங்க..
nicely written, keep rocking
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.. ஊருக்கு போயிட்டு வாங்க. (கேமரா எடுத்திட்டு போங்க :) ) all is well.
என்னை அறிமுகப்படுத்தினதுக்கு மிக்க நன்றிங்கண்ணே..!
ஊருக்குப் போயிட்டு பத்திரமா திரும்பி வாங்கண்ணே..!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜகோபால்.
பதிவு ரொம்ப மெச்சுரியிட்டீயா தான் தெரியுது... அந்த தள்ளிட்டு போன மேட்டரு மட்டும் கற்பனைதானே..
பார்க்கிங் கட்டணம் ஜாஸ்தி தலைவரே
என்கிட்டே முதல்ல 15 வாங்கினாங்க...அப்புறம் போகும் 5 ரூபாய் சண்டை போடாத குறைய வாங்கினேன்...
I enjoyed this post!
///காலனிக்குள் தூங்க முயற்சித்து கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடுக்கிட்டு தெறித்து ஓடியது.//
//மற்றும் ஒரு ஆண்டு.... மற்றும் ஒரு நாள்.....//
அருமை. பதிவு முழுதும்தான். நான் நினைத்து நினைத்து மகிழ்ந்த வரிகள் இவை என்பதாலும், இன்றுதான் முதல் பின்னூட்டம்.
:))
enjoy your trip & a happy new year, though.
-vidhya
ஹாப்பி நியூ இயர் என்ற கூச்சல் காதை பிளக்க, காலனிக்குள் தூங்க முயற்சித்து கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடுக்கிட்டு தெறித்து ஓடியது.
விழுந்து சிரித்தேன், நையாண்டி நன்றாகவே வருகிறது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வலையுலகப்படைப்பாளிகள்—புத்தாண்டு தினமணி கட்டுரை
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html
/மேடை அருகே ஒரு பெண்ணுடன் கடலை வறுத்து கொண்டிருந்த ஒருவன் அந்த பெண்ணை தள்ளி கொண்டு போக, காலம் 2009 ஆம் வருடத்தை தள்ளி கொண்டு போய் விட்ட//
oru பையன் அவன் கடலை போட்ட பொண்ணை தள்ளிட்டு போனது தப்புங்களா..புத்தாண்டு வாழ்த்து சொல்றதுக்கு:))
//தெரு நாய் ஒன்று திடுக்கிட்டு தெறித்து ஓடியது.
:)
என்ன புக் வாங்குனீங்கன்னு சொல்லலை ?
மற்றுமோர் ஆண்டு
மற்றுமோர் நாள்
இரசித்தேன்.
---------------------------
சுட்டி கொடுத்த வண்ணத்துபூச்சியாருக்கு நன்றி.
//பெண்கள் இதை வடிகாலாக நினைகிறார்களா, இல்லை சாந்தமாக இருக்கும் ஒருவன், கூட்டத்தில் கல் எடுத்து எறிவதை போன்ற குழு மனபானமையா தெரியவில்லை.//
hahaha
superb rajagopal
nice sharing abt book fair too
நன்றி துளசி மேடம்.... Bavam pavam பின்றேள் போங்க..
:))
நன்றி சூர்யா
நன்றி குப்பன்
நன்றி பலா பட்டறை
நன்றி உண்மை தமிழன் (சூர்யனுகே டார்ச்சா உங்களுக்கே அறிமுகமா)
நன்றி சரவணகுமார்
நன்றி அசோக் (பதிவு மெச்சூர்டா இருக்கா, தப்பாச்சே இனி மொக்கை போடறேன் :))
//அந்த தள்ளிட்டு போன மேட்டரு மட்டும் கற்பனைதானே..//
கம்பெனி ரகசியத்த வெளியே சொல்ல முடியாது..
;))
நன்றி ஜெட்லி
நன்றி பழமைபேசி
நன்றி வித்யா (முதல் பின்னூட்டத்திற்கு)
நன்றி காவேரி கணேஷ்
நன்றி கேபில்ஜி (தப்பே இல்லை )
நன்றி பின்னோக்கி (இன்னும் இல்லை )
நன்றி ஜமால்
நன்றி தேனம்மை
unique and superb presentation.hats off.enjoying all those special lines as mentioned in other comments.subtle comedy triggering a series of emotions.wonderful writing style.
Post a Comment