Sunday, January 10, 2010

பதிவர் சந்திப்பு - 9-1-2010

நேற்று நல்ல ட்ராபிக் ஜாம். புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில் பைக் நிறுத்த அனுமதி மறுக்க பட்டது. பைக்க எங்க நிறுத்தறதுன்னு சுத்தி முதி பார்த்தா, எதுத்தாப்ல பச்சையப்பா காலேஜ்ல அற்புதமான சிரிப்புடன் நித்யானந்தரின் பேனர். ஆஹா, எல்லார் பிரச்சினைக்கும் தீர்வு சொல்ற சாமி நமக்கும் ஒரு வழி காமிச்சிடார்னு நேர அங்க பைக்க வுட்டேன். நேரம் 5:30 மணி. இன்னும் அரை மணி நேரம் இருக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சு சாமி வந்தாச்சான்னு பாக்க போனேன்.

வழுக்கை
உடையவர்கள், இந்த பத்தியை படிக்காமல் தாண்டி செல்லாம். எனக்கு நீண்ட நாட்களாக பொடுகு தொல்லை உண்டு. எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் சரியாக வில்லை. நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தால் அனைத்து பொடுகும் கீழே கொட்டி இருக்கும். ஆனால் நான் எப்பொழுதும் தலை நிமிர்ந்தே இருப்பதால் பொடுகு தொல்லை அதிகமாக இருந்தது. யாரவது என்னுடன் பேசும் போது, நான் அடிக்கடி தலையை சொறிவதால், என்னுடன் பேசுபவர்கள் அவர்களுக்கு தரப்படும் அவமரியாதை என்றே எடுத்து கொண்டார்கள். சரி சாமிய பார்த்தா சர்வ ரோக நிவாரணம் கிடைக்கும் என்பதால் அங்கே சென்றேன். கூட்டம் அதிகமாக இருந்தது. தெரிந்தவர்கள் யாரவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன். வந்திந்த அனைவரும் ஞானப்பால் பருக வந்திருப்பதால், கரும்புச்சாரு கடை போடவில்லை என்று சொன்னார்கள். பதிவர் சந்திப்புக்கு நேரம் ஆகிவிட்டதால் தலையை சொரிந்து கொண்டே புத்தக கண்காட்சியை நோக்கி நடையை கட்டினேன்.

நடக்கும்
பொழுதே வீட்டிலிருந்து போன். எங்க இருக்கீங்க? புத்தக கண்காட்சீல இருக்கேன். இன்னிக்கு அஞ்சாவது நாளா போறீங்க, அங்க என்னதான் பண்ணுவீங்க. இல்ல, பதிவர்கள் வருவாங்க அவங்க கூட பேசிட்டு இருப்பேன். வீட்டுக்கு வந்தா டிவி பாக்கிறது இல்ல எதாவது புக்க எடுத்துட்டு உட்கார வேண்டியது.வீட்ல என்னிக்காவது பேசிருகீங்களா, அங்க என்னதான் பேசுவீங்க. எலகியத்த பத்தி பேசுவோம். போன் ஞொய்...

கிழக்கின் அருகில் பதிவர்கள் உதிக்க, அறிமுகதிற்குபின் எலக்கியம் வளர்க்க ஆரம்பித்தோம். சிறு சிறு குழுவாக நின்று பேசிகொண்டிருந்தோம். எங்கள் குழுவில் இருந்த அண்ணன் தண்டோரா, சென்னையில் மானாவாரியாக உச்சரிக்கப்படும், ங் என்றழுத்தில் ஆரம்பித்து தாவில் முடியும் அந்த புனித வார்த்தை தோன்றிய விதம் பற்றி வகுப்பு எடுத்தார். ங்... எலக்கியம் வளர ஆரம்பித்தது. (விபரம் வேண்டுபவர்கள் அண்ணன் தண்டோராவை அணுகவும்)

எலக்கியத்தின் ஊடே நான் ஒரு பதிவரிடம், நமக்கும் கவிதைக்கும் ரெம்ப தூரம், ஒரு கவிதைக்கும் அர்த்தமே புரிய மாட்டேங்குது, குறிப்பா அவரோட ஒரு கவிதையை சொல்லி இதுக்கு என்னானே அர்த்தம் என்று கேட்க, அதற்கு அவர். நீ வேறப்பா அர்த்தம்லாம் கேட்டுகிட்டு, நான் லைட்டா ஒரு கட்டிங் போட்டுட்டு, கீ போர்ட தட்டுவேன். என்ன வருதோ அதான். போஸ்ட் பண்ணா, முதல் வரி சூப்பர், கடைசி பாரா அருமைனு பின்னூட்டம் வரும். சில பேரு அவங்களுக்கு புரிஞ்சத பின்னூட்டமா போட்ருபாங்க.அப்புறம் தான் எனக்கே புரியும்னா பாத்துகோயன் என்றார். எலக்கியம் பிரகாசமாக ஒளிர ஆரம்பித்தது.

சிறிது நேரத்திற்கு பிறகு கண்காட்சியை சுத்தி வரும் பொழுது உயிர்மையில் அவரை பார்த்தேன். வாசகர்கள் சூழ நின்றிருந்தார்.ரோட்டிற்கு அந்தபுறம் கல்லூரியில்,அவதார புருஷர் காட்சி அளித்துகொன்டிருக்க இவரு ஏன் போகலைன்னு சிறு மூளை யோசித்தாலும், இவரின் புத்தக விற்பனை அமோகமாக இருக்க அந்த கல்பதருவை வேண்டிக்கொண்டேன்.

பிரபல பதிவர்கள் புதிய பதிவர்கள் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றாய் பழகியது ஆறுதலாய் இருந்தது.அண்ணன் தண்டோரா எனக்கு கருவேல நிழல் புத்தகம் பரிசளித்தார்.மற்றபடி, நேற்று கண்காட்சிக்கு கன்னி பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது மனதுக்கு குதூகலமாக இருந்தது.

மையல் கொண்ட பெண்ணின் கையில் சமையல் குறிப்பு புத்தகம்!!!!! (இதுக்குதான் இந்த கவிஞர்கள் சகவாசமே கூடாதுங்கிறது).

பின்பு இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை புகைபடமாக்கினோம். (வரலாறு முக்கியம் அமைச்சரே).

புகைப்பட லிங்க் இங்கே

பதிவுன்னா எதாவது உருப்படியா இருக்கணும், மொக்கை போட கூடாது என்று அட்வைஸ் சொன்னவருக்காக.உருப்படியான டிப்ஸ்


ஆண்களுக்கு : - நீங்கள் ஷேவ் செய்து முடித்தவுடன், ப்ளேடை சுத்தம் செய்து, ப்ளேடின் இருபக்கமும் சிறிது தேங்கா எண்ணையை தடவவும். இது ப்ளேடை துரு பிடிக்காமல் வைத்திருந்து அதிக ஷேவ்கள் தரும்.

பெண்களுக்கு:- அதேதான், நீங்கள் காய் நறுக்கி முடித்தவுடன், கத்தியை நன்கு சுத்தம் செய்து, கத்தியின் முனையில் சிறிது தேங்கா எண்ணையை தடவவும். இது கத்தியை துரு பிடிக்காமல் வைத்திருக்க உதவும்.





**************************************************************

16 comments:

மணிஜி said...

நீங்க எவ்வளவு முயற்சி பண்ணாலும் அந்த ஊசியில் நூலை கோர்க்க முடியாது. ஏன்னா அது குண்டூசி.

மணிஜி said...

ஒரு பதிவு அதுவும் சீரியசனா பதிவுனா பிரசண்ட் ஆனா மட்டும் பத்தாது.கமெண்ட்டும் சொல்லனும்.

ஸ்வாமி ஓம்கார் said...

:) யாரு மேலையோ உங்களுக்கு கோவம்போல தெரியுது..

நடக்கட்டும் நடக்கட்டும்...

உண்மைத்தமிழன் said...

குண்டூசிக்குத் தலைல கொண்டை இல்லையா தண்டோராண்ணே..?

Paleo God said...

தண்டோரா ...... said...
நீங்க எவ்வளவு முயற்சி பண்ணாலும் அந்த ஊசியில் நூலை கோர்க்க முடியாது. ஏன்னா அது குண்டூசி.//

பக்கம் பக்கமா கிழிச்சி குண்டூசி வெச்சு நூலை கோத்துடலாமே... :))

Paleo God said...

ஆண்களுக்கு : - நீங்கள் ஷேவ் செய்து முடித்தவுடன், ப்ளேடை சுத்தம் செய்து, ப்ளேடின் இருபக்கமும் சிறிது தேங்கா எண்ணையை தடவவும். இது ப்ளேடை துரு பிடிக்காமல் வைத்திருந்து அதிக ஷேவ்கள் தரும்.

பெண்களுக்கு:- அதேதான், நீங்கள் காய் நறுக்கி முடித்தவுடன், கத்தியை நன்கு சுத்தம் செய்து, கத்தியின் முனையில் சிறிது தேங்கா எண்ணையை தடவவும். இது கத்தியை துரு பிடிக்காமல் வைத்திருக்க உதவும்.
//

புரியுது எல்லா வேலையும் செஞ்சிட்டு ஆபீஸ் போகரது கொஞ்சம் கஷ்டம்தான்..:))

கார்க்கிபவா said...

சகா, அதுக்கு பதிலா தாடியே வளராம இருக்க ஏதாவ்து ஐடியா? என்கிட்ட இருக்கு..

ஏதாச்சும் சொல்லிடப் போறேன்.. தேங்காய் எண்னெய் தடவனுமாம்..

CS. Mohan Kumar said...

ம்.. உங்க வீட்டுலயம் இதே மாதிரி தான் டின் கட்டுறாங்களா?

butterfly Surya said...

உபயோகமான டிப்ஸ் என்ற பெயரில் அடுத்த வருடம் புத்த்கம் போடலாம்.

hahahahaa.. வாழ்த்துகள்.

சங்கர் said...

தண்டோரா அண்ணனின் பாடத்தை மிஸ் பண்ணிட்டேனே, ஏங்க, ஒரு வார்த்தை கூப்பிட்டிருக்க கூடாது?

சங்கர் said...

//butterfly Surya said...
உபயோகமான டிப்ஸ் என்ற பெயரில் அடுத்த வருடம் புத்த்கம் போடலாம்.//

அதுக்கப்புறம், மத்தவன் எழுதுவதெல்லாம் குப்பைன்னு திட்டலாம் :))

ஜெட்லி... said...

//ங் என்றழுத்தில் ஆரம்பித்து தாவில் முடியும் அந்த புனித வார்த்தை தோன்றிய விதம் பற்றி வகுப்பு எடுத்தார்.//

தண்டோரா அண்ணன் சொன்ன விளக்கத்தை
பத்தாம் வகுப்பு புத்தகத்தில் போட வேண்டும்
என்பது என் தாழ்மையான கருத்து....

எறும்பு said...

வந்த எல்லார்க்கும் நன்றி சாமியோவ்
:))

எறும்பு said...

//சங்கர் said...

தண்டோரா அண்ணனின் பாடத்தை மிஸ் பண்ணிட்டேனே, ஏங்க, ஒரு வார்த்தை கூப்பிட்டிருக்க கூடாது?//

ஒன்னியும் அவசரம் இல்லை. இங்க நண்பர் ஜெட்லியும் பக்கத்துல இருந்தாரு... மலைக்கு போய்ட்டு வந்து, அது என்ன கதைன்னு கேளுங்க..

குப்பன்.யாஹூ said...

Till Jyovraam sundar's post about book exhibition, all bloggers post on books exhibition were serious, after that all started writing in humorous style. This is what Kodambakkam tamil cinema's directors style.

Romeoboy said...

\\ஜெட்லி said...
தண்டோரா அண்ணன் சொன்ன விளக்கத்தை
பத்தாம் வகுப்பு புத்தகத்தில் போட வேண்டும்
என்பது என் தாழ்மையான கருத்து..//

இதை நான் வழிமொழிகிறேன்.