Monday, December 28, 2009

அன்பு நெஞ்சங்களுக்கு..

(படம் உதவி: ஏதோ ஒரு இணையதளம்)


அன்பு
நெஞ்சங்களுக்கு, நீங்க படிச்சுட்டு இருக்குற இந்த ப்ளாக் இந்த வருஷம் ஆரம்பிச்சதுதான். வலைப்பூக்களோடு கடந்த மூன்று வருசமா தொடர்பிலிருந்தாலும் ப்ளாக் ஆரம்பிக்க ரெம்பவே யோசிச்சேன். ஒருவழியா அக்டோபரில் ஆரம்பிச்சு ஏதோ போய்ட்டு இருக்கு. இதனால நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க .மற்றபடி இந்த வருஷம் ரிஷசெனால ஆபிசுல கொஞ்சம் பிரச்னை. உருவிடுவாங்கன்னு பயத்துல பாண்ட இறுக்கி பிடிசுட்டுதான் இருந்தேன். வேலையை தவிர, போனசு இன்க்ரிமெண்டு எல்லாத்தையும் உருவிடாங்க.
புது
வருசத்திலயாவது உருவுனதை திருப்பி தருவாங்களான்னு தெரியலை. இல்லேன்னா இந்த வருஷம் வேற அண்ணாச்சி கடை பாக்க வேண்டியதுதான். (இப்படி கடை கடையா போறதே பொழப்பா போச்சு).

ஆபிசு
வேலைல பிரமோசன் இல்லைனாலும், தனிப்பட்ட வாழ்க்கைல பிரமோசன் வைடிங். என் வீட்டு ரேசன் கார்டில், என் பெயர் ,மனைவி பெயருக்கு அடுத்து புதிதாக ஒரு பெயர் இணைக்கப்பட உள்ளது. டாக்டர்கள் கூறிய பிப்ரவரி முதல் வாரத்திற்கு குடும்பமே ஆவலாய் காத்திருகிறது.

இழந்தது, நேற்று தீடீர் என்று ஹிட் கவுன்ட்டர் வேலை செய்யவில்லை. போஸ்ட் ரீடிங் அதிகமாய் காண்பிக்க, ஹிட் கவுன்ட்டர் வந்தவர்களின் எண்ணிக்கை ரெண்டிலேயே திகைத்து நின்று விட்டிருந்தது. ஏதோ அஞ்சு லட்சம் ஹிட்ஸ் வாங்கின பிரபல பதிவர்னா சரி, நம்ம வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் தப்பா காட்னா எப்படி கல்லா கட்றது? இன்னிக்கு ஆபிசு சிஸ்டத்தை ஆன்லையே வச்சு, என் ப்ளாக்கை ஓபன் பண்ணி, F5 கீ மேலே எதை ஆவது வச்சிட்டு வீட்டுக்கு போலாம்னு ஒரு எண்ணத்துல இருக்கேன்.புது வருடம் மொக்கைகளை குறைத்து கொண்டு கொஞ்சம் உருப்படியாய் எழுதவும் முயற்சிக்கிறேன்.

மற்றபடி
பிறக்கப் போகும் புது வருடத்தில் துணிவும், மன உறுதியும் உங்களை வழி நடத்திச்செல்ல உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அற்புதங்கள் நிறைந்ததாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்.

மன்னிக்கவும், நீங்கள் தமிழர் இல்லையா... எனவே.....



"WISH YOU A HAPPY NEW YEAR"




*************************************************************************************

20 comments:

எறும்பு said...

Test comment

இரும்புத்திரை said...

innoru test

Logarajan said...

Happy new year

Raju said...

வரப்போகும் புது சொந்தத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணே..!

\\பட உதவி:ஏதோ ஒரு இணையதளம்\\

உங்க நேர்மை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
:-)

butterfly Surya said...

குடும்பத்தில் புது வரவு இந்த புத்தாண்டில் அனைத்து செல்வங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.

மிக்க மகிழ்ச்சி.


வாழ்த்துகள் நண்பா.

உண்மைத்தமிழன் said...

அட்வான்ஸ் வாழ்த்துக்களைப் பிடியுங்கள் தம்பி..!

எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்த அண்ணாச்சியின் கடைக்கு உடனே தாவாமல் குட்டியின் வரவுக்குப் பின்பு ஆற, அமர யோசித்து முடிவெடுக்கவும்..!

Kumar said...

Valthukkal for the new addition to the family..

எறும்பு said...

நன்றி இரும்புத்திரை
நன்றி லோகராஜன்
நன்றி ராஜூ
நன்றி butterfly surya
நன்றி உண்மை தமிழன் (நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்)

vasu balaji said...

புது வரவுக்கும் புத்தாண்டுக்கும் வாழ்த்துகள்.:)

கார்க்கிபவா said...

//நன்றி உண்மை தமிழன் (நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்//

அவர் சொன்னா பெருசா இல்ல இருக்கும்?

Ashok D said...

1.வாழ்த்துகள் :)
2.வாழ்த்துகள் :)

துளசி கோபால் said...

நியூ அடிஷனும் வரப்போகும் வருசமும் நல்லபடியாப் பொறக்க எங்கள் ஆசிகள்.

கடைசி பாராவில் //பிறக்க போதும்// என்பதை

பிறக்கப் போகும் என்று மாத்துங்க.

நீங்க போதுமுன்னு சொன்னால் ஆச்சா? :-)))))

எறும்பு said...

நன்றி வானம்பாடிகள்
கார்க்கி பெரியவர் பெரிசாத்தான் சொல்லுவாரு
நன்றி அசோக்
நன்றி துளசி - மாத்திட்டேன் ;))

அன்புடன் அருணா said...

புது வருகைக்கும் புத்தாண்டுக்கும் வாழ்த்துக்கள்!

puduvaisiva said...

வாழ்த்துகள் ராஜகோபால்

Paleo God said...

01.படம் அருமையான செய்தி சொல்லுது...
02.நல் வாழ்த்துக்கள்...

//இன்னிக்கு ஆபிசு சிஸ்டத்தை ஆன்லையேவச்சு, என் ப்ளாக்கை ஓபன் பண்ணி, F5 கீ மேலே எதைஆவது வச்சிட்டு வீட்டுக்கு போலாம்னு ஒரு
எண்ணத்துலஇருக்கேன்.//

ஓ ஆபீஸ் சிஸ்டமா அப்ப எத வேணாலும் வைக்கலாம்..::)

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அட்வான்ஸ் வாழ்த்துக்களைப் பிடியுங்கள் தம்பி..!

எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்த அண்ணாச்சியின் கடைக்கு உடனே தாவாமல் குட்டியின் வரவுக்குப் பின்பு ஆற, அமர யோசித்து முடிவெடுக்கவும்..!//

அதே அதே...:: )) வாழ்த்துக்கள் RG.::))

செ.சரவணக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா. மற்றொரு இனிய நிகழ்விற்கும் வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

என்னங்க எறும்பு, பேண்ட்ட உருவறதுக்கு பயந்தா வேலையாகுமா. எனக்கும் அதே கதிதான். ஆனா, பெல்ட் போட்டு இறுக்கிட்டேன். அதுனால பேண்ட் அவுறல. மத்தபடி, எக்ஸ்ட்ரா பாக்கெட் எல்லாத்தயும் கட் பண்ணி எடுத்துட்டாங்க. பேண்ட் இருக்குற சந்தோஷத்துல இருக்கேன் :).

ஆஹா ! இந்த F5 மேட்டர் தெரியாம போச்சே. உங்களுக்கு நன்றிகடன் பட்டிருக்கிறேன்.

உங்களுக்கு

happy new year 2010.
தமிழ் வாழ்க

பின்னோக்கி said...

புத்தம் புது வரவுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் ஜூனியருக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுடுங்க.

எறும்பு said...

நன்றி அன்புடன் அருணா
நன்றி புதுவை சிவா
நன்றி பலா பட்டறை
நன்றி சரவணகுமார்
நன்றி பின்னோக்கி