Wednesday, December 16, 2009

3D பைனாரல் - அசர வைக்கும் ஆடியோ

நீங்கள் ஒரு கடற்கரையில் கண் மூடி அமர்ந்து இருக்கறீர்கள். உங்களை சுற்றி கேட்கும் சத்தத்தை கவனியுங்கள். மெல்லிய காற்றின் சத்தம், மணலில் விளையாடும் சிறு குழந்தைகளின் சத்தம், அருகில் அமர்ந்திருக்கும் காதலர்களின் செல்ல சிணுங்கல் சத்தம், சுண்டல் விக்கும் வியாபாரிகளின் சத்தம். இவை அனைத்தும் உங்களை சுற்றி நடக்கிறது. உங்கள் கண்களுக்கு நேரில் தெரிவதை மட்டும் கிரகிக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் உங்கள் செவிகள் உங்களை சுற்றி நடக்கும் எந்த விசயத்தில் இருந்தும் சத்தத்தை கிரகித்து கொள்கிறது.

இந்த அனுபவத்தை அப்படியே உங்களுக்கு தருவதுதான் 3D பைனாரல் (binaural) ஆடியோ தொழில்நுட்பம்.சாதரணமாக "ஸ்டீரியோ" ரெக்கார்டிங்கில் இருந்து மாறுபட்டது இது. சாம்பிளுக்கு ஒரு ஆடியோ லிங்க் கீழே.

ஒரு வித்யாசமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

ரெம்ப ரெம்ப ரெம்ப முக்கியமான விஷயம், இதை நீங்கள் ஸ்பீக்கரில் கேக்க கூடாது. உங்கள் ஹெட் போனை பயன் படுத்துங்கள்.(ஸ்பீக்கர் கேட்டுட்டு ஒரு வித்யாசமும் தெரியலியேனு கமெண்ட் போட்டா, முன் உரிமை கொடுத்து டெலிட் செய்யப்படும்) கண்களை மூடி கொண்டு கேட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.



என்ன சூப்பரா இருந்ததா? உண்மைய சொல்ல போனா இந்த தொழில்நுட்பத்தை பற்றி முழுமையா படிச்சு, அத உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னு எனக்கும் ஆசைதான். ஆனா பாருங்க, துறை சார்ந்த பதிவுகள் போடும் பொழுது, மொக்கை போடுவதற்கோ, கும்மி அடிப்பதற்கோ வாய்ப்புகள் கம்மி.எனவே பெரியோர்களே, ஆர்வம் மேலிட இத பத்தி நான் ஆராயஞ்சே ஆகணும்னு நினைகிறவங்க இங்க போங்க..

http://en.wikipedia.org/wiki/Binaural_ரெகார்டிங்

அனுபவிச்சா மட்டும் போதும்னு நினைகிறவங்களுக்கு மேலும் கீழே ஒரு லிங்க்.
மறுபடியும் கண்களை மூடி ஹெட் போன் மூலம் கேட்கவும்.

Virtual hair cut:-



இதெல்லாம் என்ன பெரிய விசயம், என் காதலி முதல் முறையா " ஐ லவ் யு" சொன்னது இன்னும் என் தலைக்குள்ள சுத்தி சுத்தி சுத்தி கேக்குதுன்னு சொல்ற புண்ணியவான்க மேலும் feel பண்ண இத கேளுங்க.

http://www.youtube.com/watch?v=HMUTJCatIAE

7 comments:

Jawahar said...

இணையத்தில் எம்பீத்ரீ பார்மட்டில் நிறைய பைனாரல் சாம்பிள்கள் உள்ளன. அவற்றில் பலதை நான் டவுன்லோட் செய்து என் மொபைலில் சேமித்திருக்கிறேன். பைனாறலின் சிறப்பு திசை மற்றும் தூரம் இரண்டையும் காப்ச்சர் செய்வதே. பைனாரல் ஒலிப்பதிவு செய்கிற மைக்கை எனக்கு பிறந்த நாள் பரிசாக ந்யூஜெர்சியிலிருந்து என் மகன் அனுப்பியிருந்தான். ஒரு சோகம், இதை உபயோகித்து கணினியில் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய முடிகிறது.

http://kgjawarlal.wordpress.com

எறும்பு said...

ஜவஹர் தங்களின் முதல் வருகைக்கு நன்றி

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி நண்பா..

Paleo God said...

வசியப்படுத்தும் நிகழ்வுகள், நம்மை நம்மிலிருந்து கண நேரம் விலகச்செய்தாலும் (குண்டலிநியோ, பகார்டியோ, ஒலியோ, ஒளியோ) எப்போதும் ஆனந்தமே ..

நன்றி நண்பரே.

BALAMURALI said...

மிகவும் அருமையான பதிவு புதிய முயற்சி தொடருங்க

எறும்பு said...

சூர்யா, தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

பலாபட்டறை, பாலமுரளி நன்றி

vasu balaji said...

நல்ல பகிர்வு. நன்றி புதிய பரிணாமத்தைக் காட்டியமைக்கு.