Tuesday, December 22, 2009

அம்பாசமுத்திரம் - விசூவல் ட்ரீட்


1945 ல், திருநெல்வேலி கலக்டராக இருந்த திவான் பகதூர் விஸ்வநாத ராவால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1947 ல், கலக்டராக இருந்த சேஷாத்ரியால் திறந்து வைக்கப்பட ஆர்ச். திருவாடுதுறை ஆதினத்தால் வழங்கப்பட்ட அன்பளிப்பு இது.


அம்பாசமுத்திரம் சர்வோதய சங்கம்.


அம்பை பெரிய கோயில் செல்லும் சாலை. முதல்வன், கருத்தம்மா, போன்ற படங்களில் பார்த்து இருப்பீர்கள். இருபக்கமும் மருத மரங்கள் நிற்கும் அழகான சாலை. கொஞ்ச வருஷம் முன்னாடி, இது ஆள் அரவமற்ற சாலை. இப்போ நிறைய வீடு வந்தாச்சு. கீழயும் பாருங்க.

நாங்கதான் வயல் வேலை செஞ்சு கஷ்டப்படறோம்.நீங்களாவது படிச்சு நல்ல வேலைக்கு போங்கப்பா என்று விவசாயம் பார்த்த அப்பாவும், தாத்தாவும் கூறியதின் விளைவு.. வயல் வெளிகள் மரகதாம்பிகை நகர் ஆகிவிட்டது. அங்கு குடியிருப்போர் நல சங்கம் உள்ளது. ஆனால், எதிர் காலத்தில் உண்ண அரிசி இருக்குமா??
வயல் வெளியை நிரப்பி தனியார் பள்ளிக்கூடம். நிறைய எஞ்சினீயரும், டாக்டரும் கிடைப்பாங்க. விவசாயி???

மேலப்பாளையம் ரத வீதி..... தேரோடிய வீதி...

ஒத்தை கிளியாஞ்சட்டியில் நான் குறிப்பிட்ட சிவன் கோயில்..

கோயிலின் உட் பிரஹாரம்.

சம்ஹாரம் முடிந்து தலை கொய்யபட்ட சூரனும், அடுத்த திருவிழாவுக்கு காத்திருக்கும் கடவுளின் வாகனங்களும்.



கோயிலுக்கு அருகிலிருக்கும் ஒத்தை மாமரம். ஒவ்வொரு வருடமும் குத்தகைக்கு விடப்படும். ஆனால் குத்தைக்காரர், ஒரு வருடம் கூட அதன் முழு பயனை அனுபவித்தது இல்லை. மாங்காய்கள் பழுக்கும் முன்பே சூறை ஆடப்படும். உபயம் : மேலப்பாளையம் தெரு சிறுவர்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பயபுள்ளைங்க, குத்த வைத்து ஊர் வம்பு பேச ஒரு இடம் உண்டு. இந்த இடம் ஆத்துக்கு செல்லும் வழியில் உள்ள வாய்கால் பாலம். இந்த பாலத்திற்கு அனேகமாக, ரத வீதியில் உள்ள அனைவரின் கதையும் தெரிந்திருக்கும்.


ஆற்றுக்கு செல்லும் பாதை. அருகில் உள்ள ஓடையில், தண்ணீர் பாம்பு வேட்டை நடத்தப்படும். பிடிபட்ட பாம்புகளுக்கு, மூக்குபொடி போட்டுவிட்டா நல்லா ஆடும். பிறகு எல்லா பாம்பையும் கயிற்றில் கட்டி, மேல எலெக்ட்ரிக் ஒயரில் வீசப்படும்.
தூரத்தில் தெரிவது, அம்பை கல்லிடைக்கு நடுவில் இருக்கும் பெரிய கோயில்.

வயல்களுக்கு நடுவில் புருசோத்த பெருமாள் கோயில்.

தாமிரபரணி ஆற்றங்கரை...


ஆற்று தண்ணீர் அளவை கூறும் சிவன் பாறை. இது மூழ்கும் அளவை கொண்டு தண்ணீர் அளவு கணிக்கப்படும்.
நூறாண்டு வயதுள்ள ரயில் பாலம். இப்பொழுது அகல ரயில் பாதை வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதையும் தாக்கு பிடிக்கும் இந்த பாலம்.

பிரமாண்டமான அரச மரமும், பிள்ளையாரும்..

சாயங்கால வேலை...


ஆற்றுக்கு செல்லும் வழியில் பூத்திருக்கும் கோழி கொண்டை செடிகள்.

45 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

கண்கள் இனித்தன.. நெஞ்சம் பனித்தது :)

☼ வெயிலான் said...

நாங்களே ஊருக்குள் வலம் வந்தது போல படங்கள் அருமை ராஜகோபால்.

சங்கர் said...

படங்கள் அருமை, கமெண்டுகள் அதைவிட அருமை, நானும் அதே ஊருதான்(ஒரு அஞ்சு கிலோமீட்டர் தள்ளி), தீர்த்தபதி பள்ளிய விட்டுடீங்களே, அங்க படிக்கலியோ?

Paleo God said...

//ஸ்வாமி ஓம்கார் said...
கண்கள் இனித்தன.. நெஞ்சம் பனித்தது :) //
::))

அருமையான படங்கள் எனக்கும் வயல் வெளியில் வீடு மனை போர்ட் பார்க்கும்போதெல்லாம் வலிக்கும்.. வருங்காலத்தில் சோறுக்கு பதில் சிமெண்ட்டும், கணினி உதிரிகளும் தொட்டுக்கொள்ள சாக்கடை நீரும் தருவார்களோ என்னமோ..:(( பகிர்வுக்கு நன்றி ராஜகோபால்.

இராகவன் நைஜிரியா said...

அம்பையை அப்படியே கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். படங்கள் அனைத்தும் அருமை.

துபாய் ராஜா said...

தரணியில் தன்னகரில்லா தாமிரபரணி ஆறும்,ஆற்றுச்சாலையும், அழகான பச்சைப்பசேல் வயல்வெளிகளும் காணக்கண் கோடி வேண்டும்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...

சீக்கிரம் ஆத்துச்சாலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்திடும்ன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.

நானும் அம்பை தானுங்க..

Ashok D said...

:)

மாதேவி said...

அம்பாசமுத்திரம். பசுமை நிறைந்தவயல்களும், தாமிரபரணிஆறும் அழகிய காட்சிகள்.

venkat said...

பார்த்து ரசித்த இடங்கள் மீண்டும் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் பழைய நினைவுகளை அசை போடவைத்துவிட்டீர்கள்.படங்கள் அருமை.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

the photos are delight to the eyes
ஒரு காலத்தில அரிசி விலை எங்கேயோ போகப் போகுது. அப்போ விளை நிலங்களை வித்திடோமேனு வருத்தப் பட போகிறோம்

எம்.எம்.அப்துல்லா said...

அம்பாசமுத்திரம்னு பேருவச்சதுக்கு பதிலா அழகுசமுத்திரம்னே வச்சிருக்கலாம் :)

Anonymous said...

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...

Prasanna said...

என்ன அழகு? எத்தனை அழகு? அருமை

கல்யாணி சுரேஷ் said...

நம்ம ஊரு நிஜமாவே ரொம்ப அழகுதாங்க. ( வயல்வெளிக்கு நடுவில், ஆதி கேசவ பெருமாள் கோவில்? அது புரோஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா?)

கல்யாணி சுரேஷ் said...

நம்ம ஊரு நிஜமாவே ரொம்ப அழகுதாங்க. ( வயல்வெளிக்கு நடுவில், ஆதி கேசவ பெருமாள் கோவில்? அது புருஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா?)

சிநேகிதன் அக்பர் said...

இதையெல்லாம் விட்டுட்டு இங்க வந்து கிடக்கிறோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எட்டுச்சீமையில என்னைப் பத்தி கேளு ..

தூள் கிளப்புறது திருநெல்வேலி ஆளு ..

அத்திரி said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..................

லெமூரியன்... said...

அருமையான படங்கள்....! இனிமையான கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள்....!
அம்பையும் வெகு சீக்கிரத்தில் கான்கிரீட் காடுகளாக மாறி விடும் என்று நினைக்கும் போது மனதில் வலி...!

vasu balaji said...

பச்சுபச்சென்ற புகைப்படங்களும் கமெண்டும் அசத்தல்.

ஹுஸைனம்மா said...

நானும் தின்னவேலிதான். ஆனா அம்பை வந்ததில்ல. ஆனாலும், அந்த முத படம் தவுத்து மத்ததெல்லாம் எங்கூருக்கும் பொருந்தும்!!

எறும்பு said...

// ஸ்வாமி ஓம்கார் said...

கண்கள் இனித்தன.. நெஞ்சம் பனித்தது :)//

ஒரு பிரபல பதிவர கண்கள் இனிக்க, நெஞ்சம் பணிக்க வச்சுட்டேன்... அப்பாடி நானும் பதிவர் ஆயிட்டேன்...
;-))

எறும்பு said...

//தீர்த்தபதி பள்ளிய விட்டுடீங்களே, அங்க படிக்கலியோ?//
ரெண்டு நாள்தான் ஊருக்கு போய் இருந்தேன்.. அதானாலே எடுக்கலை..நான் படிச்சது வீ கே புரம் welfare school

எறும்பு said...

//அது புரோஷோத்தம பெருமாள் கோவில் இல்லையா?)//

நாந்தான் மாத்தி அடிச்சுட்டேன்... அது புருசோத்த பெருமாள்தான்.

எறும்பு said...

வருகை தந்த அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி

எறும்பு said...

//அம்பாசமுத்திரம்னு பேருவச்சதுக்கு பதிலா அழகுசமுத்திரம்னே வச்சிருக்கலாம் :)//

எல்லாம் என்னும் கொஞ்ச காலம்தான்... அப்புறம் பூமா தேவி சிரிக்க போறா... எல்லாம் உள்ள போபோறோம்.....
;))

Cable சங்கர் said...

அருமையான் படங்கள் ராஜகோபால்.

எறும்பு said...

//Cable Sankar said...

அருமையான் படங்கள் ராஜகோபால்.//


அண்ணே எங்க ஊர
பின்னாடி, உங்க பட locationku யூஸ் பண்ணிக்குங்க...

Unknown said...

இந்த அழகான எழில் மிகு ஆற்றிலும் கூட கெமிக்கல்ஸ் கலக்குறாங்க..அந்த கம்பெனிகளுக்கு எப்படிதான் மனம் வருதோ? நம்ம நாட்டோட எழில் இயற்கையை யார்தான் காப்பாற்ற முன் வருவார்களோ?
அகஸ்தியர் ஆசிர்வாதம் பெற்ற இந்த ஊரை அவர்தான் காப்பாற்ற முன் வரவேண்டும்

Toto said...

ப‌ட‌ங்க‌ள் பிர‌மாத‌ம் ஸார்.

-Toto
www.pixmonk.com

Venkatesh said...

நான் அம்பையில் 82 - 94 வரை இருந்தேன், மேலப்பாளையம் தெருவில் . அருமையான இடம். இந்த வருடம் 8ம் திருவிழா சென்ற போது எவ்வளவு மாறுதல்கள். கூட்டமும் அவ்வளவாக இல்லை. சின்ன கோவில் தேர் உடைந்து கிடந்தது. கோவில் உள்ளே செல்ல மனமில்லை. திரும்பி விட்டேன். உங்கள் வீடு எங்கே இருக்கிறது, கோவில் அருகிலா?

creativemani said...

படங்களும் பதிவும் ரொம்ப அருமைங்க...

Srinivasan said...

Dear Rajagopal,
Nandri. Remembering my native :)

Asir said...

Ji Kalakkal Photos

ambi said...

படங்கள் அனைத்தும் அருமை.


I am from kallidaikurichi :))

Dubukku said...

Very nostalgic

mee too from Ambai :))) (Vadakku ratha veethi though :)) )

தக்குடு said...

Namakku pakkaththu uuruthaanungoo!! kallidaikurichi. Annachi nallaayiruppikaa!!..:)

ஆடுமாடு said...

சுத்தி அலைஞ்ச இடங்கள்தான். உங்க படங்கள்ல பார்க்கும்போது புதுசா இருக்கு.

Elakia Inbam said...

hi kanna ! our native is very nice. super.

SiSulthan said...

மக்கா, படங்களும், ரசனையும் அருமையா இருக்குடே. ஒம் படங்கள வண்ணதாசன் வலப்பூவுலயும் வண்ணநிலவன் வலப்பூவுலயும் தேவண்ணாப் போட்டுகிடுரேண்டே... தப்பா நெனச்சுகிடாத.

Rathnavel Natarajan said...

ஆஹா.
பசுமையாக இருக்கிறது.
மனசு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி.

Anonymous said...

//iSulthan said...

மக்கா, படங்களும், ரசனையும் அருமையா இருக்குடே. ஒம் படங்கள வண்ணதாசன் வலப்பூவுலயும் வண்ணநிலவன் வலப்பூவுலயும் தேவண்ணாப் போட்டுகிடுரேண்டே... தப்பா நெனச்சுகிடாத.
//


தெய்வமே, தாராளமா போட்டுக்குங்க.. எனக்கும் பெருமைதான் :))

M.RAJA RAJESHWARI said...

Wonderful Place.

M.RAJA RAJESHWARI said...

Wonderful Place. Because this is my native place. But now me any my family settled in Bangalore. Ambasamudram for me its heaven. Really i enjoyed those places and i got somuch information about my native. Somany place still i didn't see. Definately next time i will visit all the place without missing. Images and comments everything was nice and informative. There is no word to express. Really thanks.

From
M.RAJA RAJESHWARI

Unknown said...

பசுமை...இனிமை...எங்க ஊருக்கு போட்டி போடும் ஊர் மாதிரி இருக்கு :))