Monday, December 7, 2009

உயர் ரத்த அழுத்த உபன்யாசம் -- ஓடி வாரீர்

ஐயன்மீர் உயர் ரத்த அழுத்தம் என்பது, ஹலோ எங்க ஓடுறீங்க, நில்லுங்க. இப்படி ஒரு ப்ளாக முழுசா படிக்காம ஒடுனீங்கன்னா உங்களுக்கு பொறுமை இல்லைன்னு அர்த்தம்.. கவனிக்கவும் இது ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமானதால் வந்ததாய் இருக்கலாம். முதல்லே சேர்லே நல்லா ரிலாக்சடா உட்காருங்க. இப்ப எதுக்கடா இந்த உபன்யாசம்னு கேட்டா, அதுக்கான பதில் கீழே கடைசீல இருக்கு. உடனே கீழே ஸ்க்ரோல் பண்ணாதீங்க. அப்படி பண்ணீங்கன்னா உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லைன்னு அர்த்தம். முன்ன சொன்னத விட உங்களுக்கு ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமா இருக்கலாம். அமைதியா இருந்து பொறுமையா படிங்க...

எல்லாத்திலையும் நாம உயர்வா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லை ரத்த அழுத்தத்திலும் உயர்வா இருக்கணும்னு நினைச்சா கூடிய சீக்கிரம் சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்ப வேண்டிய நிலை வரலாம். இது எங்க போய் முடியும்னா, நமக்கு பிடிச்ச சாப்பாடு ஐய்டம் எல்லாம் நம்ம போட்டோ முன்னாடி வச்சு, சொந்தகாரங்க எல்லாம் ஒண்ணு கூடி அத ரசிச்சு சாப்பிடறதுல போய் முடியும்.

முதல்லே ரத்த அழுத்தம்னா என்னானு பார்க்கலாம். அத எப்படி அளக்கிறாங்க.
சிஸ்டாலிக் (Systolic), டயாச்டாலிக் (Diastolic).
சிஸ்டாலிக் : - இது நம்ம இதயம் சுருங்கி ரத்தத்தை பம்ப் பண்ணும் போது உள்ள பிரஷர். இதுவே மாக்சிமம் பிரஷர்.
டயாச்டாலிக் :- இது ஒரு துடிப்புக்கும் அடுத்த துடிப்பிற்கும் இடையில், இதயம் ரத்தத்தை நிரப்பி கொள்ளும் பிரஷர். இதுவே மினிமம் பிரஷர்.

நார்மல் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80. அதாவது சிஸ்டாலிக் 120 டயாச்டாலிக் 80

இது 140/90 ஆகும் போது உயர் ரத்த அழுத்தம் ஆகிறது. மருத்தவ பெயர் ஹைபர் டென்ஷன்.

யாருக்கு ரத்த அழுத்தம் உயர்வாய் இருக்க கூடும்..
1 .
காசை கரியாக்கி ஊதி தள்ளுபவர்களுக்கு (smokers).
2 .
குடி பழக்கம் உள்ளவர்களுக்கு.
3 .
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க உணவில் அதிகமாய் உப்பு சேர்பவர்களுக்கு.
4 .
தன் உடம்பை தானே தூக்கி நடக்க சிரமப்படுபவர்களுக்கு (over weight )
5 .
ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு (மனதில் அல்ல)
6 .
தன் உடம்பை பிக் அப் ட்ராப் மட்டுமே செய்யும் சுறுசுறுப்பு இல்லாதவருக்கு (no physical exercise)
7 .
சொந்த பந்தத்தில் ஏற்கனவே ஹைபர் டென்ஷன் இருந்தால், அவர்களுக்கு
8 .
கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்களுக்கு.
9 . 55
வயதுக்கு மேலான ஆண்களுக்கு (இப்போதுள்ள லைப் ஸ்டைலில் இது இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை)
10 . 65
வயதுக்கு மேலான பெண்களுக்கு (இப்போதுள்ள லைப் ஸ்டைலில் வயசு பொண்ணுகளுக்கும் பொருந்தும்)

11. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு.

ரத்த அழுத்தம் அதிகமாய் இருந்தால் எப்படி தெரிஞ்சுக்கலாம்..

இதன் அறிகுறியை, தெரிஞ்சுகிறது ரெம்ப கஷ்டம்ங்க. இத " silent killer " னு சொல்லுவாங்க. மூன்றில் ஒரு பங்கில் ரத்த அழுத்தம் உள்ளவர்களை எடுத்துகிட்டம்னா, அவங்களுக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லையாம். இத தெரிஞ்சுக்க மருத்துவ பரிசோதனை ஒன்றே வழி. ஆஸ்பத்திரி போனீங்கன்னா கைய சுத்தி ஒரு துணி மாதிரி உள்ளத கட்டி, புஸ்கு புஸ்குனு காத்தடிச்சு, மெர்குரி அளவு ஏர்ரத வச்சு உங்க ரத்த அழுத்தத்தை சொல்லுவாங்க. அந்த மீட்டர்க்கு பேரு Sphygmomanometer (நீங்களே தமிழ் படுத்திகுங்க). இப்ப டிஜிட்டல் மீட்டரும் வந்துடிச்சு.

ஆனால் சில சமயம், அதிகப்படியான மனக்குழப்பம் (சில பதிவர்களின் கவிதை படிக்கும்பொழுது வருகிற பெருங் குழப்பம் இதில் சேர்த்தி இல்லை), பார்வை குறைபாடு, அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், வயிற்று தொல்லை, பால்பிட்டேசன் (இதயம் தாறு மாறாக அடித்து கொள்ளுதல்), இதெல்லாம் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க கூடும்.

சரி உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னாகும்?

ரத்தம் பாய்கின்ற வேகம் தாங்காது , சிறு சிறு ரத்த நரம்புகள் பாதிக்கப்படும். குறிப்பாக கிட்னீயில் இருக்கும் சிறு ரத்த நரம்புகள் பாதிக்கப்பட்டு கிட்னி சைலண்டாக சங்கு ஊதிவிடும். அல்லது இது இதயத்தின் வேலையை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக இதயத்தை சுற்றி உள்ள தசைகள் விரிவடைந்து இதயத்தை பெரிதாக்குகிறது. பெரிதான இதயம், உடம்பிற்கு தேவையான ரத்தத்தை சப்ளை செய்ய முடியாமல் உயிரை விடுகிறது. சமயத்தில் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் வெடித்து ஸ்ட்ரோக் வரலாம்.

சரி வராம இருக்க என்ன பண்ணலாம்?
தினமும் உடம்ப கொஞ்சமாவது அசைங்க. பிரிஸ்க் வாகிங் இல்ல வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி.
ஒரு நேரமாவது உணவில் முழுக்க பழ வகைகளை சேர்த்து கொள்ளுங்கள்.
கொஞ்சம் தியானம் அல்லது உங்கள் மனதை ரிலாக்ஸா வைக்க நல்ல இசை கேளுங்கள்..

நல்ல தூக்கம்

சரி குறை ரத்த அழுத்தம் பற்றி ஏதாவது?. அது அவ்வளவு அபாயம் இல்லாததால் குறை ரத்த அழுத்த கும்மி அடிக்கவில்லை.
மேல் விபரங்களை ஆங்கிலத்தில் படித்து தமிழ் படுத்தி எடுத்து இருக்கிறேன். ஏதாவது பிழை இருந்தால் படிக்கிற மருத்துவ துறையில் இருக்கின்ற நண்பர்கள் சொல்லவும்.

ஏண்டா இந்த உபன்யாசம்னு கேக்கறீங்க, அதுக்கு பதில். போன வாரம் ஒரு நாள் என் மனைவிக்கு செக்கப் போகும்போது, செக் பண்ண நர்சை (சிஸ்டர் அல்ல) பார்த்து குதூகலமாகி என் கையை செக் பண்ண நீட்டியதின் விளைவு. எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது. கம்பனி, மெடிக்கல் க்ளைம் புண்ணியத்தில் பாடி செக்கப் பண்ணியதில், ரிபோர்ட பார்த்த டாக்டர், உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை. மனசுல ஏதாவது பிரச்சினைனா மனைவிகிட்ட மனசு விட்டு பேசுங்க.. எல்லாம் சரி ஆயிடும் என்றார்.

அன்றைக்கு எல்லாம் நார்மலாய் இருந்தது. வீட்டிற்கு வந்தபின் மனைவி, ஏங்க என்ன பிரச்சினை உங்களுக்கு, புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு, அடுத்து என்ன போஸ்ட் பண்ணலாம்னு மோட்டு வளைய வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கீங்களே, அதனால இருக்குமோ? . விடு கழுதைய இதையே ஒரு போஸ்டா போட்ரலாம் என்றேன்.

பின் குறிப்பு:-
நெட்டில் தேடியதில் " white coat hypertension " பற்றி அறிய முடிந்தது. அதாவது வெள்ளை கோட்டை பார்த்தால் ரத்த அழுத்தம் அதிகமாவது. ஆதலால், மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்சுகளின் யூனிபார்மையும் டாக்டரின் வெள்ளை கோட்டையும் கலர் புல்லா மாற்ற அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கிறேன்

மிக முக்கியமான பின் குறிப்பு:-

ரத்த அழுத்தம் ரத்த அழுத்தம் சொல்றீயே அப்படினா என்ன என்று கேட்கிற பய புள்ளைங்களுக்கு அதன் சரியான தமிழாக்கம் “Blood pressure” உயர் – “High”

பொதுவா மனோ வியாதி சம்பந்த புத்தகத்தை படிக்கும் பொழுது அதற்கான அறிகுறிகள் நம்ம மனைவிக்கோ, மாமியாருக்கோ இல்ல அவங்க சொந்தக்காரங்களுக்கோ இருக்குற மாதிரி தோணும்..ஆனா உடல் வியாதி பற்றி படிக்கும்பொழுது அதன் அறிகுறிகள் நமக்கு இருக்குதோன்னு தோணும். இவ்வளவு நேரம் படிச்சதுல உங்களுக்கு தலை லைட்டா கிர் ரடிக்கிற மாதிரி இருந்தா தயவு செஞ்சு போய் பிரஷர் செக் பண்ணிகிங்க.
உபன்யாசம் முடிந்தது. நன்றி.

15 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக எளிமையான உபயோகமான பதிவு.
நான் உயரளுத்தத்துடன் வாழ்வதால்; ஆர்வமாகப் படித்தேன். இப்போ என் சாப்பாட்டு முறையால்
கட்டுக்குள் உள்ளது. நமது இசை மிகவும் கைகொடுக்கிறது.குறிப்பாக காலை எழும்போது என்னை
துயிலெழுப்ப சிலவருடங்களாக இனிய வயலின் இசையையே இசைக்கவிடுகிறேன். சுமார் அரை மணி
அதைப் படுக்கையிலேயே ரசிக்கிறேன். மிகப் பெரிய மாற்றம் கண்டேன்.என் வீட்டுக்கு வந்து தங்கிய
உறவினர் கூட காலை எழுந்த அந்த இனிய இசையை மிக வரவேற்றார்கள்.
நல்ல விடயம் தாமும் பின்பற்றப் போவதாகக் கூறினார்கள்.சாப்பாடு; பயிற்சி; இசை; கண்காணிப்பு;
அத்துடன் " உடலெல்லாம் நெய்யை பூசி உருண்டாலும் ஒட்டுமளவு மண்தான் ஒட்டும் எனும் மனநிலையும் வந்தால்
கட்டுக்குள் கொண்டுவரலாம்.

எறும்பு said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) தங்கள் வருகைக்கு நன்றி..
//ஒட்டுமளவு மண்தான் ஒட்டும் எனும் மனநிலையும் வந்தால்///

முழு மனதுடன் ஒத்து போகிறேன்

கல்யாணி சுரேஷ் said...

//விடு கழுதைய இதையே ஒரு போஸ்டா போட்ரலாம்// அப்படியே நெல்லை வாசனை. உபயோகமான பதிவு. நன்றி.

BALAMURALI said...

மிக தெளிவாக எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி .

Unknown said...

good advice in a gr8 way of writin....
therittinga pa...
en sishyannu prove panringa ponga;)

Unknown said...

its very useful n nice presentation....
un kurumbu ezhuthula apdiye theriyudu:-D
very good keep it up....
Athai

ASHRAF ALI said...

anbullah editor

vithiyasamana valithalm
vithiyasamana katturai
vithiyasamana anugu murai
vithiyasamana pani
motthathil vithiyasamana advaice.
nandri vazuthukkal.

ashraf

எறும்பு said...

Kalyani suresh
Balamurali
velwiz
Ashraf

Thanks for reading the article

Unknown said...

sirichu sirichu bloodvpressure normal ayidichinnu appa solraru.dat speaks for volumes.AMMAKALA PADUTHREENGA BOSS.KEEP IT UP.

Unknown said...

aduthu ynnannu daily pakka wachirukkenga.thodarattum thoranamai.

Paleo God said...

நண்பரே சரியாக உங்களுடன் அறிமுகபடுத்திகொள்ள முடியவில்லை அடுத்தமுறை நிச்சயம் உங்களுடன் உரையாட விருப்பம்.. அன்புடன்.

எறும்பு said...

// பலா பட்டறை said...

நண்பரே சரியாக உங்களுடன் அறிமுகபடுத்திகொள்ள முடியவில்லை அடுத்தமுறை நிச்சயம் உங்களுடன் உரையாட விருப்பம்.. அன்புடன்.//


கண்டிப்பாக, நன்றி

KANTHANAAR said...

Sir I am having BP for the past 4 years. But due to Regular consumption BP tablets, regular exercise (walking). For the past 2 years my BP shows 120/80 only (sometimes 110/80) Is that ok sir?

எறும்பு said...

// kantha said...

Sir I am having BP for the past 4 years. But due to Regular consumption BP tablets, regular exercise (walking). For the past 2 years my BP shows 120/80 only (sometimes 110/80) Is that ok sir?//

It is the normal presuure only.But for more details, please consult your doctor. Thanks.

Usman said...

மிக அருமையான எளிமையான பதிவு