போன வருடம் அக்டோபர் 12 இல் எனது முதல் பதிவை ஆரம்பித்தேன். இன்றோடு ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறேன். இந்த இடுகையில் இன்னொரு சிறப்பு, இது எனது அம்பதாவது இடுகை.(போதும் போதும் எவ்வளவு நேரம் கைதட்டுவீங்க). ஒரு வருடத்திற்கு அம்பது இடுகை என்பது, எனது இலக்கியப்பயனத்தில் மிகவும் குறைவுதான் இருந்தாலும் இந்த வருடம் இலக்கிய சேவையை ஆத்து ஆத்துன்னு ஆத்தலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
சில பதிவர்கள் அவர்களின் அம்பதாவது, நூறாவது இடுகையில் சமுதாயத்தை திருத்த அல்லது இந்த பாழாய் போன சமுதாயத்திருக்கு மெசேஜ் சொல்லி இடுகை இடுவார்கள். நான் இதற்கு முந்தைய நாற்பத்தி ஒன்பது இடுகையிலும் உருப்படியாய் ஒன்றும் எழுதவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே எனக்கு தெரியாமல் எதையாவது எழுதி இருந்தாலும் அதை படித்து பயபுள்ளைங்க யாரும் திருந்தமாட்டார்கள் என்ற நல்ல எண்ணத்தில் எனது மொக்கையை மேலும் இதிலே தொடர்கிறேன்.
நான் இந்த பதிவுலகத்துக்கு வந்தது (இந்த உலகத்துக்கு ஏன் வந்தேன்னு இன்னும் புரியலை) நலிவுற்று கிடக்கும் இலக்கியத்தை தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம் என்கிற எண்ணத்தில்தான் என்றாலும் அப்படியே ஒத்த கருத்துள்ளவர்களை நண்பர்களாய் அடைவதும் ஒரு காரணம். இந்த வேளையிலே கடந்த ஒருவருடத்தில் நான் அடைந்த நண்பர்களை கண்டு பேரானந்தத்தில் துய்க்கிறேன்.(நல்லவேளை இன்னும் என் chat history எதுவும் வெளிவரவில்லை).போலவே இந்த ஒரு வருடத்தில் நான் வன்புணர்ச்சி, துகிலுரிதல், சொற்சித்திரம், புனைவு, நெளிஞ்ச சொம்பு, பெண்ணீயம் போன்ற நல்ல வார்த்தைகளை கற்றுக்கொண்டேன். இந்த நேரத்தில் என் படைப்புக்களை படித்து விட்டு பின்தொடற்பவர்கள்(108 Followers) பின் தொடந்து விட்டு படிக்காதவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இடுகையுடன் பின்தொடற்பவர்கள் list மற்றும் hits counter என்னுடைய தளத்தில் இருந்து நீக்கப்படுகிறது. இல்ல உங்க எழுத்துன்னா எனக்கு உசிரு மத்ததெல்லாம் மசிரு உங்களை பின்தொடந்தே ஆவேன் இல்லையேல் சாவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் உங்கள் டேஷ்போர்டில் Blogs iam following இல் எனது URLai சேர்த்து கொள்ளவும். சரி ஹிட்ஸ் கவுன்டரை ஏன் எடுத்தீங்க என்று கேட்பவர்களுக்கு, ஏற்கனவே வந்த ஹிட்ஸ்களை வைத்து நான் மகாபலிபுரம் சாலையில் வாங்கிபோட்டிருக்கும் அம்பது ஏக்கர் நிலமே என் வாழ்க்கைக்கு போதும் என்ற காரணமே அன்றி வேறு இல்லை.
கடந்த ஒரு வருடமாக நீங்கள் தந்து வரும் பேராதரவுக்கு நன்றி. இந்த ஒரு வருடத்தில் இந்த இடுகைகளை படித்தவர் யாரவது ஒருத்தர் திருந்தி இருந்தாலும் கூட எங்கையோ தப்பு நடந்திருக்கு என்று அர்த்தம்.
ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.... மொக்கை தொடரும்
GET READY FOLKS!......
***