Wednesday, October 21, 2009

கூகிளின் ஆளுக்கேற்ற ஜால்ரா அல்லது அல்லகைத்தனம்

அருணாச்சல மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் துளி யளவும் சந்தேகம் ஏற் படக்கூடாது,'' அம்மாநில முதல்வர் டோர்ஜி காண்டு

அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை சீனா முழுமை யாக அறியும். இந்த உலகில் எந்த சக்தியாலும் அதை பறிக்க முடியாது,'' இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி

வரலாற்று உண்மைகள் தொடர்பாக எதையும் கவனிக்காமல், இந்தியா வெளியிட்ட கருத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்தியசீன எல்லைக்கோடு அதிகாரபூர்வமாக இதுவரை வகுக்கப்படவில்லை. இருநாடுகளும் தங்கள் எல்லைப் பிரச்னையில் இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை. இருப்பினும், சீன இந்திய கிழக்கு எல்லை குறித்து சீனா தன்னுடைய கருத்தில் தெளிவாகவே இருக்கிறது சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாஜாவோஜூ
அருணாச்சல பிரதேசம் எங்களுக்கே என்று ஆளாளுக்கு அடித்து கொண்டிருக்கும் நிலையில் கிடக்கிறது கிடக்கு கிழவிய தூக்கி மனைல வை என்று கணக்காக செயல்பட்டிருக்கிறது கூகிள்.பல்வேறு இணைய தள சேவைகளை வழங்கி வரும் கூகிள் நிறுவனம் கூகிள் மேப்ஸ் என்ற சேவையையும் வழங்கி வருகிறது.


இந்தியாவையும் சீனாவையும் மிக பெரிய மார்கெட்டாக கருதும் கூகிள, இரண்டு நாட்டையும் பகைத்து கொள்ள விரும்பாத கூகிள், அருணாச்சல பிரதேச விவகாரத்தில் ஆளுக்கேற்ற ஜால்ரா அடித்துள்ளது

அருணாச்சல பிரதேசத்தை இந்திய கூல் தளத்தில் இந்தியாவுடனும், சீன கூகிள் தளத்தில் சீனாவுடனும், பொதுவான கூகிள்.காமில் ஏ பியை விவகாரமான பிரதேசமாகவும் காட்டியுள்ளது.

பல்வேறு சேவைகளை வழங்கி வரும் கூகிள் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் நல்ல எதிர் காலம் உண்டு.
அருணாச்சல பிரதேசத்தை அந்த அருணாசலம்தான் காப்பாற்ற வேண்டும்.

4 comments:

தகடூர் கோபி(Gopi) said...

அருனாசலபிரதேசம் மட்டுமில்லை காஷ்மீர் மற்றும் இதர சில எல்லைகளிலும் இரு தளங்களிலும் வேறுபாடு இருக்கிறது கவனித்தீர்களா?

ரவி said...

படத்தை க்ளிக் செய்தால் பெரிதாக வருமாறு செய்யவும்.

எறும்பு said...

வருகைக்கு நன்றி கோபி.. நான் புதுசா தமிழ் டைப் பன்றதால கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. ரெண்டு பாரா டைப் பன்றதுகுள்ள முழி பிதுங்குது..
நான் எழுதி டைப் பண்ணாமல் விட்டது
// இவர்கள் அருணாச்சல பிரதேசத்தை மட்டும் அல்ல இந்தியாவின் தலையான கஷ்மிரையும் பாதி சிரைத்து விட்டார்கள்///

எறும்பு said...

வருகைக்கு நன்றி செந்தழல் ரவி.. அத பண்றது எப்படினு கொஞ்சம் சொன்னிங்கனா நல்லா இருக்கும்.. ..