இதை உணர்த்த புராணத்திலே ஒரு கதை உண்டு. ஒருமுறை நாரதர் கிருஷ்ணரை காண செல்கிறார். அவரை பார்த்து, மாயா (illusion) என்றால் என்னவென்று எனக்கு தெரிய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு கிருஷ்ணர், அத சொன்னா புரியாது. அனுபவத்தில்தான் உணரனும். வாங்க போகலாம்னு அவர கூட்டிட்டு போறார். அவங்க ரெண்டு பெரும் ரெம்ப தூரம் நடந்து ஒரு பாலைவனத்த அடைஞ்சாங்க. நாரதற்கு பொறுமை இல்லை. பாலைவனத்துல எப்படி மாயாவ தெரிஞ்சுகிறதுன்னு யோசிச்சாரு. கிருஷ்ணர் ஒரு எடத்துல உட்கார்ந்துட்டு , நாரதா எனக்கு தாகமா இருக்கு போய் தண்ணி கொண்டுவான்னு நாரதர அனுப்பி வச்சாரு. ரெம்ப தூரம் போன நாரதர் ஒரு கிராமத்தை பாக்குறாரு. அங்க ஒரு கிணறு. அருகிலேயே ஒரு அழகான பொண்ணு, தண்ணி எறச்சுட்டு நிக்கிது. அந்த பொண்ணுகிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு, அந்த பொண்ணோட அழகுல மயங்கி அந்த பொண்ணு பின்னாடியே போறாரு. அந்த பொண்ணோட அப்பாதான் அந்த ஊர் தலைவர். அவர்கிட்ட போய், அவரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிற விருப்பத்தை சொல்றாரு. அந்த அப்பா ஒரு கண்டிஷன் போடுறாரு. என் பொண்ண தரேன், ஆனா நீ இந்த ஊர்லதான் இருக்கனும். நாரதர் சம்மதிக்க கல்யாணம் நடக்கிறது. கொஞ்ச காலத்துல, அந்த ஊர் தலைவர் இறக்க நாரதர் ஊர் தலைவர் ஆகிறார். அவருக்கு நாலு பிள்ளைகள் பிறக்கிறார்கள். வாழ்க்கை மீளும் போகும்பொழுது, அந்த ஊர்ல பெரு வெள்ளம் வருது. தண்ணீர் ஊரையே சூழ்ந்திருக்க நாரதர் அவரு மனைவி, பிள்ளைங்களோட ஒரு படகுல தப்பிச்சு போறாரு. திடீர்னு படகு கவிழ்ந்து நாரதர் கண் முன்னாடி எல்லாரும் தண்ணீரில் மூழ்கிடுறாங்க. கரை ஒதுங்கிய நாரதர் அழுது புலம்புறாரு. அப்ப கிருஷ்ணரோட குரல் கேக்குது. நான் இன்னும் தாகமா இருக்கேன், தம்பி, தண்ணி இன்னும் வரலை!. திரும்பி பார்த்தா கிருஷ்ணர் சிரிச்சுக்கிட்டே நிக்கிறாரு. உன்னுடைய உணர்வுக்கு வா நாரதா, மனைவி குழந்தைகள் என்று எதுவும் இல்லை, எல்லாம் மாயா (illusion).
மேலே ரமணர் சொன்னது ரெம்ப எளிமையா இருக்கு, அடுத்து உள்ள கதையும் அருமையா இருக்கு ஆனா எப்படின்னுதான் புரியலை. அறிவியல்பூர்வமா இது சாத்தியமா, நாந்தான் பிசிக்கலா இத உணர்றேனே இது எப்படி மாய தோற்றம் (illusion) ஆக முடியும்.
"Atomic physics" இதை இவ்வாறு விளக்குகிறது. பிசிக்ஸ்ல எனக்கு பிடிச்சதே, லாப்ல ட்யுனிங் போர்க்க (sonameter test)தட்டி காதுக்கு கிட்ட வச்சா கேக்கிற அருமையான வைபரேசன் மட்டும் தான். (படிக்கிற காலத்துல படிக்காம, பதிவு எழுத எதை எல்லாம் படிக்க வேண்டி இருக்கு ).
உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் (Atom)ஆனது. நாம் உடம்பு என்று அழைக்கின்ற இந்த ஜடப்பொருளும் அணுக்களால் ஆனது. நியூட்ரான், ப்ரோடான் எனப்படும் நியூக்ளியசும் மற்றும் எலெக்ட்ரான் கொண்டு உருவானது அணுக்கள்.
ஜீரணம் பண்ணிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், தோற்றமாகி இருக்கிற நம் உடம்பு ஒரு தோற்றமே இல்லை. வெற்றிடத்துடன் பிணைக்கப்பட்டு இருக்கிற நான் என்ற சுய உணர்ச்சியே, நம்மை நம் உடம்பாக உணர செய்கிறது.
நாம் பார்க்கின்ற அனைத்தும் உண்மை ஆனவை என்று நம்ப செய்வதில் மாயாவின் சக்தி வலிமை ஆனது.
அணுக்களை பிரித்தாளும் வித்தையை அறிந்த சித்தர்கள் விளையாடியதுதான் "அஷ்டமா சித்திகள்". ஒரு யோகியின் சுய சரிதத்தில் யோகானந்தர் தனது குரு கூறியதாக குருவின் உயிர்தெழுதல் பற்றிய அத்யாயத்தில் இப்படி எழுதி இருப்பார்."
நீ மண்ணுலகில் வெறும் கனவுதான் கண்டு கொண்டிருந்தாய். அந்த பூமியில் என் கனவு உடலை கண்டாய். பிறகு அந்த கனவு பிரதியை புதைத்தாய்.இப்பொழுது நீ பார்க்கும் இந்த உடல் நுட்பமான கனவு சரீரமாகும். இது கூட நிரந்தரமில்லை. முடிவாக எல்லா கனவு குமிழிகளும் உடைபடும். என் மகனே யோகானந்தா, கனவுகளையும் நிஜத்தையும் பிரித்து அறிந்துகொள்.
அறிவுக்கு புரியுது, அனுபவிச்சு புரிவது என் நாளோ?
ஒரு குருவும் சீடரும் இருக்கிறார்கள். அருகில் எரிந்து கொண்டு இருந்த தீபம் காற்றில் அணைந்து விட்டது. சீடர் குருவிடம் தீபம் எங்கே போய்விட்டது என்று கேட்க, குரு, அது எங்கிருந்து தோன்றியதோ அங்கேயே மறைந்து விட்டது என்கிறார் - மாயா..
அட இதை எல்லாம் விட, மாயாவை பற்றிய எளிய விளக்கத்தை உங்க வாழ்கைலையே பாக்கலாம். வேற எதுவும் இல்லைங்க பெண்களோட ஞாபக சக்தி, குறிப்பா உங்க மனைவியோடது.
நீங்க, கடைக்கு போகும் போது என் அம்மா தலை வலிக்குதுன்னு மாத்திரை வாங்கிட்டு வர சொனாங்களேவாங்கிட்டு வந்தியா.. அய்யையோ மறந்துடங்க, இது உங்க மனைவி.
ச்சே இந்த ஜீவனுக்கு ஞாபக சக்தி இல்ல போல அப்படின்னு நினைப்பீங்க.
பிறிதொரு நாளில்...
எங்க நம்ம கல்யாணத்துக்கு உங்க ஒண்ணு விட்ட சித்தி, பொண்ணோட மாமியார் அவங்க பொண்ண கூட்டிட்டு வந்தாங்களே, அந்த பொண்ணு போட்ருந்த மாதிரி ஒரு தங்க தோடு பார்த்தேன். அத இந்த மாசம் வாங்கலாமா??
எல்லாம் மாயாயாயாயாயாயா.......................................
12 comments:
ஆமாம்... மாயாதான்....
good one boss.
அருமை.
ஆனா... இந்த கட்டுரை உண்மையா? இல்லை மாயையா? :)
அம்மாடி.. கலக்கல்.
அதைதானே சூப்பர் ஸ்டார் “பாபா” வில் சொன்னாரோ..??
ரொம்ப நல்லாருக்கு
//அறிவுக்கு புரியுது, அனுபவிச்சு புரிவது என் நாளோ?//
அது மட்டும் புரிஞ்சிட்டா அப்புறம் எதுக்கு இந்த ப்ளாக் எல்லாம், போயிட்டே இருப்போம்
நல்லா இருக்குங்க!
ட்ரைன்ல தானே போயிட்டு வரதா சொன்னீங்க !!?? (வேட்டைக்காரன் படம் பாக்க சான்சே இல்லையே ..ம்ம்ம் ..) ஒரு சாயா சாப்பிட்டு இன்னொருக்கா வரேன்.
என்ன இப்படி கிளம்பிட்டீங்க. நல்லாத்தான் இருக்கு.
// என் மகனேயோகானந்தா, கனவுகளையும் நிஜத்தையும் பிரித்துஅறிந்துகொள்.//
அப்ப நிஜம் என்பது என்ன? நிஜமும் மாயைன்னா நிஜத்தை எப்படி பிரித்து அறிந்து கொள்ள முடியும்? மாயையே மாயை என்று அறிந்து கொள்ள மாயை இல்லாத மனது, நிஜ மனது வேண்டுமா? அப்போ நிஜம்ன்னா என்ன? மனம்ன்னா என்ன? மாயை ஏன் கலர் கலரா நிஜம் மாதிரி காமிக்கணம் ?( மாயை மாயையாகவே காமிக்காம ) மனம் எங்க இருக்கு அதும் மாயை ன்னா... ... ஸ்ஸ்ஸ் RG எப்படியாவது இன்னொரு பதிவு போட்டுடுங்களேன் ..:)
ஏதாவது எடாகூடம்னா அம்பேல்ன்றது தவிர ATOMIC PHISICS பத்தி சாரி...!
நன்றி அண்ணாமலையான்
நன்றி சுவாமிஜி
நன்றி வானம்பாடிகள்
நன்றி சூர்யா
நன்றி சங்கர்
நன்றி வலசுவேலனை
நன்றி பலா பட்டறை (ரெம்ப கேள்வி கேக்கறீங்க, அண்டத்துல உள்ளதுதான் பிண்டதுலையும் அப்படிங்கிறதுக்கு அறிவியல் பூர்வமா ஒரு விளக்கம் இருக்கு. பிறகு அத நான் போஸ்ட் பண்ண வேண்டி இருக்கும் :))
நன்றி கல்யாணி சுரேஷ் (வித்யாசமாய் எதாவது குடுக்கலாம்னுதான் )
லாப்ல ட்யுனிங் போர்க்க (sonameter test)தட்டி காதுக்கு கிட்ட வச்சா கேக்கிற அருமையான வைபரேசன் மட்டும் தான்.//
கல்லூரி நாட்களின் இனிமையான நாதங்களில் ஒன்று நீங்கள் குறிப்பிட்ட நாதம். புதுசா கல்லூரி விரிவுரையாளர் வேலை எதுவும் கிடைச்சிருக்கா?
santhadi saakulla scincea konduwanthu spiritualla mix panni athA unga stylla yerakkiteenga.arumaya irrukku! unga bp koranjathukku kaaranam puriyudu.yellaam maya including the bp apparatus?
Post a Comment