Monday, April 25, 2011

கோ

கோ
         படத்தில் எழுத்து போடும் பொழுது பின்னணியில் வரும் புகைப்படங்கள் அருமை. இந்த படத்தில் வரும் மாதிரி ஒரு புகைப்படகாரருக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும் பத்திரிக்கை தமிழ்நாட்டில் உள்ளதா தெரியவில்லை. தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும்பாங்க. இதிலே கார்த்திகா ஒரு எட்டு கூட எடுத்து வைக்கலை.

 படம் ஆரம்பித்ததும் வங்கி கொள்ளை. ஹீரோ போட்டோ எடுக்கிறார்.கட்சி மீட்டிங்.ஹீரோ போட்டோ எடுக்கிறார். தேர்தல் பிரசாரம்.ஹீரோ போட்டோ எடுக்கிறார். முதல்வர் பேட்டி.ஹீரோ போட்டோ எடுக்கிறார். கட்சி தலைவர் திருட்டு கல்யாணம்.ஹீரோ போட்டோ எடுக்கிறார். சுயேச்சை வேட்பாளரை துரத்தி அடிக்கிறார்கள்.ஹீரோ போட்டோ எடுக்கிறார். குடிசை தீ பிடிக்கிறது.ஹீரோ போட்டோ எடுக்கிறார். முதல் அமைச்சர் செருப்பால் அடிக்கிறார்.ஹீரோ போட்டோ எடுக்கிறார். கட்சி மீட்டிங்.ஹீரோ போட்டோ எடுக்கிறார். எடுக்கிறார். எடுத்து கொண்டே இருக்கிறார்.குண்டு வெடிக்கிறது. இடைவேளை.

உச்சா போனால் யாரவது போட்டோ எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் அடக்கிக்கொண்டு  சீட்டிலேயே அமர்ந்திருந்தேன். பின்பு கடைசியில் லட்சக்கணக்கான டுப்பாக்கி குண்டு கிழக்கேயும் மேற்கேயும் பாய, அதில் இருந்து தப்பி நியாயத்தை நிலைநாட்டுகிறார் ஹீரோ. படிச்சவன் எல்லாம் அரசியல்வாதி  ஆராங்கோ. நாடு சுபிட்சமா இருக்கு.

முதல் நாள் முதல் காட்சி என்பதால் ஏதோ ஒரு சேனலின் காமிராமன் வாசலில் படம் எப்படி என்று மைக்கை நீட்டினார். அவரை பிரமிப்புடன் பார்த்து கொண்டே, படம் சூப்பர் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினேன்.

3 comments:

FOOD said...

என்ன படம் பார்த்த அலுப்பு தீரலயா? தமிழ்மணத்தில் இணைக்கவில்லை?
நான் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன்.

FOOD said...

படம் கோ கோவா?(GO GO)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
படம் சூப்பர் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினேன்.
//
உண்மையை சொன்ன்னாத்தான் எடிட் பண்ணிடுவாங்களே....