இயக்குனர் பழனியப்பன் முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம். இயக்குனர் இயக்கிய சிவப்பதிகாரம் தவிர்த்து பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் (சதுரங்கம் வெளியாகவில்லை) இரு படங்களுமே எனக்கு பிடித்திருந்தது.
மந்திரப்புன்னகையின் ஹீரோ ஒரு ஆர்கிடெக்ட். யாரைப்பற்றியும் கவலைப்படாதவன். புட்டியும் குட்டியுமாக வாழ்கையை ஓட்டுபவன். சுடு சொற்களால் அனைவரையும் விரட்டுபவன் தனியான உலகத்தில் வாழ்பவன் என்று ஒரு மாதிரியான அரகென்ட் கதாபாத்திரம். இவனின் காதலையும் அதன் பின் வரும் ஒரு சின்ன திருப்பத்தையும் வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்.
நன்கு வளர்ந்த தாடியும், எப்பொழுதும் புகைக்கும் சிகரெட்டும் இந்த கதாபாத்திரதிற்க்கு போதுமானதாய் இருந்தாலும் ஒரு நடிகராய் இயக்குனர் அவர் பாத்திரத்தை சரியாக செய்யவில்லை. ஒரு மனப்பிறழ்வு உடையவனை சின்ன சின்ன உடல் அசைவுகள் காட்டி அசத்தி இருக்க முடியும் ஆனால் எப்பொழுதும் கஞ்சி போட்ட சட்டை மாதிரி விறைப்பாகவே இருக்கிறது அவர் உடம்பு. காமிராவுக்கு முன்னாடி நிக்கிறோம் என்ற நினைப்போடவே படம் முழுதும் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
படத்தில் மிக பெரிய பலம் வசனங்கள். நறுக் நறுக்கென்று விழுகிறது. படத்தின் முதல் பாதியில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை இரண்டாம் பாதி பூர்த்தி செய்யவில்லை. இறுதியில் கதாநாயகி அன்பு எளிமையானது, அன்பு வலிமையானது .. போன்ற வசனங்களை போதித்தவுடன் கதாநாயகன் உடனே சரியாகிவிடுவது, ஹூம்.
பார்க்கலாம்.
டிஸ்கி :-
**
5 comments:
ok. will see soon
அருமையான , நேர்மையான விமர்சனம்.
பதிவர் ஷோ-- பதிவர்கள் மனதில் தோன்றியதை எந்த சமரசத்துக்கும் விட்டு கொடுக்கமால் எழுதும் பதிவ உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
எப்படிண்ணே இப்படி எல்லாம் விமர்சனம் ?
இறுதியில் கதாநாயகி அன்பு எளிமையானது, அன்பு வலிமையானது .. போன்ற வசனங்களை போதித்தவுடன் கதாநாயகன் உடனே சரியாகிவிடுவது, ஹூம்.
.... ஹூம்..... ஹூம்..... ஹூம்.....
ரொம்ப சின்னதா எறும்பு மாதிரி ஆனால் சுருக்கென்று எழுதியிருக்கிறீர்கள்...
Post a Comment